எந்த ஒரு படத்துக்கும் ரசிகர்களை தயார்படுத்தும் முதல் ஆயுதம் டீசர் தான். ஒரு சிறந்த டீசரே ரசிகர்களிடம் படத்துக்கான எதிர்பார்ப்பை தூண்டுகிறது. அம்மா கிரியேஷன்ஸ் சிவா தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கும் படம் பார்ட்டி. இரு நாட்களுக்கு முன்பு வெளியான பார்ட்டி படத்தின் டீசருக்கு ரசிகர்களிடம் இருந்து சிறப்பான வரவேற்பு கிடைத்திருக்கிறது. டீசரில் இருக்கும் புதுமை, இளமை, எனர்ஜி ரசிகர்களை ஈர்க்கும் விஷயங்களால் சமூக வலைத்தளங்களில் பார்ட்டி டீசர் ட்ரெண்டிங்கில் […]