ஏ.டி.எம். புரொடக்ஷன்ஸ் சார்பில் டி.மதுராஜ் தயாரித்திருக்கும் படம் ‘பையன்’. இந்தப் படத்தில் கதையின் நாயகனாக புதுமுகம் பைசல் நடிக்க, நாயகியாக புதுமுகம் ராகவி நடித்துள்ளார். ‘பசங்க’ சிவக்குமார் முக்கிய வேடத்தில் நடிக்க, அவருடன் எம்.எஸ்.பாஸ்கர், அனுமோகன், சித்தன் மோகன், வடிவுக்கரசி, செந்தி, சுரெஷ், உதய்ராஜ், சந்துரு, ரஞ்சன், விஜய்கணேஷ், புலிப்பாண்டி, வி.ஜி.பி.கோவிந்தராஜ், பழனிவேல் கவுண்டர், உமா சங்கர் உட்பட பலர் நடித்துள்ளனர். பாலு மலர்வண்ணன் கதை எழுதி இயக்கியுள்ள இந்தப் படத்திற்கு சாய்சூரஜ் சந்திரசேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார். […]