பெரோஸ் என்கிற அறிமுக இயக்குனர் இயக்கத்தில் கழுகு, யாமிருக்கபயமே நாயகன் கிருஷ்ணா நாயகனாக நடிக்கும் படம் பண்டிகை. இந்தப்படத்தில் கயல்ஆனந்தி கதாநாயகியாக நடிக்கிறார். இவர்களோடு கருணாஸ், நிதின்சத்யா உட்பட பலர் நடிக்கப்போவதாகவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்தப்படத்தைத் தயாரிக்கவிருப்பது இயக்குநர்அகத்தியனின் மகளும் நடிகையுமான விஜயலட்சுமி. இவர் விரைவில் இந்தப்படத்தின் இயக்குநர் பெரோஸைத் திருமணம் செய்யவிருக்கிறார். இந்தப்படத்தில் கிருஷ்ணாவுக்கு முரடர் வேடமாம். இயக்குநர் பெரோஸ் முதலில் இந்தக்கதையை நடிகர் விக்ரம்பிரபுவுக்குத்தான் சொல்லியிருந்தாராம். கதை அவருக்குப் பிடித்திருந்ததால் அவர்தான் நடிக்கப்போகிறார் என்று சொல்லிக்கொண்டிருந்தார்கள். […]