கரகாட்டகாரன் படமென்றாலே நமக்கு ஞாபகம் வருபவர்களில் முக்கியமானவர் நடிகர் சண்முக சுந்தரம். பல படங்களில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து மக்களின் மனதில் நீங்காத இடம் பிடித்த நடிகர் இவர். கடந்த சில நாட்களாக உடல் நலம் முடியாமல் இருந்த நடிகர் சண்முக சுந்தரம் இன்று சிகிச்சை பலனின்றி சென்னையில் காலமானார். அன்னாரது ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டி கொள்வோம்.
6 இயக்குனர்கள், 4500 துணை நடிகர்கள் நடிப்பில் ‘கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்கய்யா’
ஹெவன் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்கய்யா’. இப்படத்தை ரஜாக் இயக்கியுள்ளார். ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ஸ்ரீகாந்த் இசையமைத்திருக்கிறார். கே.பாக்யராஜ், ஆர்.சுந்தர்ராஜன், ஆர்.வி.உதயகுமார், மன்சூர் அலிகான், அனுமோகன், ராஜ்கபூர் ஆகிய பிரம்மாண்ட இயக்குனர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். மேலும், ‘பவர்ஸ்டார்’ சீனிவாசன், ஸ்வாதி, அஸ்மிதா, ரத்திஷ், விஷ்வா, கண்ணன், ராஜ், திவ்யா உள்ளிட்ட 4500 துணை நடிகர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். வாழ்க்கையில் விரக்தியடைந்து, யாருடைய ஆதரவும் இல்லாமல் இருக்கும் நான்கு முதியவர்களுக்கு, அதிக தொகைக்கு பெரிய வேலை […]
10 லட்சம் பார்வைகளை கடந்த காதல் கசக்குதையா ட்ரைலர்
முதலில் எனது மனமார்ந்த நன்றிகளை “மக்கள் செல்வன்” விஜய்சேதுபதி அண்ணாவிற்கு தெரிவித்து கொள்கிறேன். அவர் வெளியிட்ட எனது படத்தின் ட்ரைலர் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. நான் பல முறை யோசித்து மக்களின் கவனத்தை எப்படி கவர்வது என்பதை யோசித்து இந்த ட்ரைலரில் முதலில் படத்தின் Climax காட்சிகளை தொகுத்து ஆரம்பித்தேன். நான் படத்தின் ScreenPlay யை மிகவும் வலிமையாக நம்புகிறேன். படத்தின் கோர்வையை யாரும் எளிதில் கண்டுகொள்ள முடியாத படி ட்ரைலர் காட்சிகளை வடிவமைத்த எனது […]
இன்று ஆடம்பரம் ஆனால் நாளை நமது குழந்தைகள் அல்லாட போகிறது – ஜி.வி.பிரகாஷ்குமார்
இசையமைப்பாளர், நடிகர் ஜி.வி.பிரகாஷ்குமார் சுதந்திரதின செய்தி தலைநகர் டெல்லியில் கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக போராடி வருகிறார்கள் தமிழக விவசாயிகள். தள்ளாத வயதில் அவர்கள் தலையில் சட்டியைச் சுமந்துப் போராடுகிறார்கள். இடுப்பில் வெறும் கோவணம் கட்டிப் போராடுகிறார்கள். இனி இழப்பதற்கு உயிரைத் தவிர வேறு எதுவும் என்கிற நிலையில் அவர்கள் போராடுகிறார்கள். சமீபத்தில் தேசிய குற்றப் பதிவு கழகம் வெளியிட்ட புள்ளிவிபரத்தின்படி விவசாயிகளின் தற்கொலையில் நாட்டில் மூன்றாவது இடத்தில் இருக்கிறது தமிழகம். 2015-ம் ஆண்டில் மட்டும் தமிழகத்தில் […]
கோலி சோடா 2வில் இயக்குனர் கவுதம் மேனன்
சரியான முறையில் பயன்படுத்தப்பட்ட ‘பின்னணி வர்ணனை’ எந்த ஒரு படத்துக்கும் மதிப்பு சேர்க்கும். அதுவும் ஒரு பிரபலமான ஒருவரின் குரலில் அது செய்யப்படும் பொழுது, அந்த காட்சியமைப்புக்கு அது இன்னும் தீவிரத்தை பெற்று தரும். விஜய் மில்டன் இயக்கத்தில் உருவாகிவரும் ‘கோலி சோடா 2’ படத்தில் டீஸர் தயாராகியுள்ளது. இந்த டீசருக்கு பின்னணி வர்ணனை வழங்க பிரபல இயக்குனர் கவுதம் மேனனை அணுகினார் விஜய் மில்டன். இதனை ஏற்றுக்கொண்டு கவுதம் மேனன் கொடுத்துள்ள பின்னணி வர்ணனை பிரமாதமாக […]
உண்மைக்கதையில் வாழ்ந்தவரையே கதாநாயகனாக நடிக்க வைத்த இயக்குனர்
PNP CINEMAS தயாரிப்பில் இயக்குனர் தினேஷ் பாபு இயக்கும் படம் “கிருஷ்ணம்”. அறிமுக நாயகனாக அக்சய் கிருஷ்ணன் ,அஸ்வரியா ,மமிதா பஜ்ஜு நடிக்கிறார்கள் . தமிழ் , தெலுங்கு ,மலையாளம் என்று மூன்று மொழிகளில் வெளியிடப்படுகிறது . படத்தின் இயக்குனர் தினேஷ் பாபு ஒளிப்பதிவாளராக பல வருடங்கள் மலையாளத்திலும் , கன்னடத்திலும் பணியாற்றியவர் வித்தியாசமான கதைக்கள அமைப்பில் “கிருஷ்ணம் ” படத்தை இயக்கியிருக்கிறார் . இந்த கதை ஒரு ஒரு இளைஞனின் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவம் […]
அப்துல்கலாமின் வழி, அசோகரின் செயல். 120 மாணவ, மாணவிகளுடன் களமிறங்கிய சௌந்தரராஜா!
சுந்தரபாண்டியன், வருத்தப்படாத வாலிபர் சங்கம், ஜிகர்தண்டா போன்ற படங்களில் ஹீரோக்களின் நண்பராக நடித்த நடிகர் சௌந்தரராஜா, எல்லா ஹீரோக்களுக்கும் நண்பராக நடித்த கவுண்டமணியுடன் ஹீரோவாக “எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது” படத்தின் மூலமாக அறிமுகமானார். தங்க ரதம், ஒரு கனவு போல, கள்ளன், சிலுக்குவார்பட்டி சிங்கம், திருட்டுப்பயலே 2, என சௌந்தரராஜாவின் திரைப்பயணம் வளர்ந்துகொண்டிருக்கிறது. ஆகஸ்டு 11. சௌந்தரராஜாவின் பிறந்தநாள். தனது பிறந்தநாளில் காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை அருகில் உள்ள உமையாள்பரணச்சேரி கிராமத்தில் உள்ள அரசினர் […]
படக்குழுவினருக்கு நன்றி கூறிய பொதுவாக எம்மனசு தங்கம் இயக்குனர்
தேணாண்டாள் ஸ்டுடியோஸ் லிமிடட் நிறுவனத்தின் “பொதுவாக எம்மனசு தங்கம்” படம் வெற்றி படமாக அமைந்ததற்கு கதாநாயகன் உதயநிதிஸ்டாலின், நடிகர்கள் பார்த்திபன், சூரி, தயாரிப்பாளர் என்.ராமசாமி, ஒளிப்பதிவாளர் பாலசுப்ரமணியம், ஆகியோருக்கு டைரக்டர் தளபதிபிரபு சால்வை அணிவித்து நன்றி தெரிவித்தார்.
சிவாஜி கணேசன் சிலை மாற்றம் நடிகர் சங்கம் செயற்குழு புதிய தீர்மானம்
“நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களது சிலையை வேறு இடத்தில் மாற்றி வைக்க அரசு தீர்மானித்த வேளையில் அன்றைய முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அவர்களை 12.01.2017 அன்று நேரில் சந்தித்து , தென்னிந்திய நடிகர் சங்கம் தலைவர் நாசர் அவர்கள் , சிலையை பெருந்தலைவர் காமராஜர் சிலை அருகிலோ அல்லது பொது மக்கள் அதிகமாக கூடும் பொது இடத்திலோ வைக்க வேண்டும் என்று வேண்டுகோள் வைத்திருந்தார். இந்நிலையில் 3.8.2017 அன்று கடற்கரை சாலையில் இருந்து சிலை அகற்றப்பட்டு […]
ஒரு படைப்பில் கேள்வி கேட்டால் அரசு விரோதமா? – சென்சாருக்கு ஆவணப்பட இயக்குநர் கண்டனம் !
ஒரு படைப்பில் கேள்வி கேட்டால் அரசு விரோதமா? என்று ஆவணப்பட இயக்குநர் ஒருவர் ஆதங்கமாகக் கேட்டார். இது பற்றிய விவரம் வருமாறு: ஆச்சி கிழவி திரைக்கூடம் சார்பில் மா.திரவியபாண்டியன் தயாரிப்பில் சொழிந்தியம் வழங்கும் ‘துப்பறிவு’ 2020 இசை ஆல்பம் ஒன்று உருவாகியுள்ளது. இது தூய்மை இந்தியா இயக்கம் சார்ந்து உருவாகியிருக்கிறது. ஒரு திட்டம் வெற்றி பெற அரசு மட்டும் போதாது மக்கள் ஒத்துழைப்பும் தேவை என்று வலியுறுத்துகிறது இந்த ஆல்பம். இதன் வெளியீட்டு விழா இன்று பிரசாத் […]