ஒன்றிற்கு ஒன்று புதிதான, தரமான படங்களை மக்களுக்கு இட்டு செல்வதை எண்ணமாகக் கொண்ட JSK ஃபிலிம் கார்பரேஷன் நிறுவனம் தங்களது நகைச்சுவை நிறைந்த ‘நாலு போலிசும் நல்லா இருந்த ஊரும்’ திரைப்படம் மற்றும் சர்வதேச அளவில் பாராட்டப்பட்ட, சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருது பெற்ற ‘குற்றம் கடிதல்’ திரைப்படம் ஆகிய திரைப்படங்களையும் ஜூன் 19ஆம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளனர். “ஒரே நாளில் இரண்டு படங்களை வெளியிடும் தயாரிப்பாளர் JSK சதீஷ் குமாரின் இந்த முடிவு இவ்விரண்டு படங்களின் […]
உண்மைச்சம்பவத்தை மையமாக்கி படமாகும் ‘இரண்டு மனம் வேண்டும்’
ஒவ்வொரு இயற்கைச் சீரழிவும் பல உயிர்களுக்கு முடிவுரை எழுதினாலும் சில உணர்ச்சிகரமான கதைகளுக்கு முன்னுரை எழுதவும் தவறுவதில்லை. தமிழ்நாடு சந்தித்த மாபெரும் இயற்கை சீற்றத்திலிருந்து ஒரு நெகிழ்ச்சியான கதையை இழைபிரித்து ‘இரண்டு மனம் வேண்டும்’என்கிற திரைப்படமாக எடுத்திருக்கிறார்கள். குழந்தையை மையப்படுத்திய பாசப் போராட்டம்தான் கதை என்றாலும் காதல், நகைச்சுவையும் இயல்போடு கலந்த திரைக் கதையாக உருவாக்கப் பட்டுள்ளது. இப்படத்தை பிரதீப் சுந்தர் இயக்கியுள்ளார், இவர் மலையாளத்தில் பல முன்னணி இயக்குநர்களிடம் பணியாற்றியவர். இது இவருக்கு முதல் படம். […]
மகேஷ்பாபு நடிக்கும் முதல் தமிழ்ப்படம் ‘பிரம்மோற்சவம்’
தமிழ் தெலுங்கு மொழிகளில் முன்னணி பட நிறுவனமாக விளங்கும், பிவிபி சினிமா படநிறுவனம் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், நான் ஈ உட்பட பல வெற்றிப்படங்களை தயாரித்துள்ளது. தற்போது கார்த்தி – நாகார்ஜுனா நடிக்கும் படம், ஆர்யா நடிக்கும் இஞ்சி இடுப்பழகி, பெங்களூர் டேஸ் படத்தின் தமிழ் ரீமேக் உட்பட பல படங்களைத் தயாரித்து வரும் பிவிபி சினிமா, அடுத்து பிரம்மோற்சவம் என்ற படத்தை பிரம்மாண்டமானமுறையில் தயாரிக்கிறது. தெலுங்குப் பட உலகின் சூப்பர் ஸ்டாராக விளங்கும் மகேஷ்பாபு கதாநாயகனாக […]
ஸ்டுடியோ கிரீன் வெளியிடும் த்ரிஷா இல்லனா நயன்தாரா’
Cameo Films தயாரிப்பில் தயாராகி வரும் “த்ரிஷா இல்லனா நயன்தாரா” திரைப்படம் அனைவரையும் கவரும் தலைப்பு முதல் கண்கவர் நடிகர்கள் என இளைய நெஞ்சங்களை ஆட்கொண்டுள்ளது. ரசிகர்களை பற்பல இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்திய ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ தனக்கென தனியிடத்தை பெற்றுள்ளது. நல்ல கமர்ஷியல் படங்களை தெரிவு செய்து வெளியிடுவதில் கவனம் செலுத்தும் Studio Green நிறுவனர் KE ஞானவேல் ராஜா ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ படத்தை வெளியிடுகிறார். ஏற்கனவே, டீசர் மூலம் தங்களுக்கான ஆதரவை திரட்டிக் […]
Actress Pooja Javaeri Gallery
தமிழ் திரைப்பட இயக்குனர்கள் சங்கத்தின் கே.பாலசந்தர் திரையரங்கம் திறப்பு விழா
தமிழ் நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கத்தின் சொந்த கட்டிடத்தில் பாலசந்தர் அரங்கம் திறக்கப் பட்டது உதவி இயக்குனர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்த, அவர்கள் இயக்கிய குறும்படங்களை திரையிடுவதற்க் காகவும், கிரீன் மேட் மற்றும் போட்டோ சூட் செய்வதற்கும் இயக்குனர்கள் சங்க கட்டிடத்தில் மினி திரையரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த திரையரங்கிற்கு இயக்குனர் சிகரம் பாலச்சந்தரின் நினைவாக இயக்குனர் சிகரம் கே.பாலச் சந்தர் அரங்கம் என்று பெயர் சூட்டப் பட்டு. இயக்குனர் இமயம் பாரதிராஜாவால் இன்று திறக்கப்பட்டது. நாற்பது உதவி […]
சீரடி சாய்பாபாவாக தலைவாசல் விஜய் நடிக்கும் “ அபூர்வ மகான் “
டி.என்.எஸ். தேவர் பிலிம்ஸ் என்ற பட நிறுவனம் சார்பாக T.N.S.செல்லத்துரை தேவர் தயாரிக்க கே.பி.செல்வம் இணை தயாரிப்பில் உருவாகும் படம் “ அபூர்வ மகான் “ இந்த படத்தில் தலைவாசல் விஜய் சாய்பாபா வேடமேற்று நடிக்கிறார். மற்றும் இளம் நாயகனாக சாய்முரளியும், நாயகியாக ரஞ்சனியும் நடிக்கிறார்கள். மற்றும் சுமன், பவர்ஸ்டார், சத்யபிரகாஷ், எம்.எஸ்.பாஸ்கர், டெல்லிகணேஷ், பிரேம்குமார், அஜெய்ரத்னம், பாண்டு, சிசர்மனோகர், வடிவுக்கரசி, மீராகிருஷ்ணன், அவன் இவன் ராமராஜன், நெல்லை சிவா, போண்டா மணி, ஜோதி முருகன், விஜய் […]
Papanasam Movie Gallery
புதுமையான முறையில் உருவாகும் “ துடி “
மைன்டிராமா என்ற பட நிறுவனம் சார்பாக ரிதுன் சாகர், G.லஷ்மி இருவரும் இணைந்து தயாரிக்கும் படத்திற்கு “ துடி “ என்று பெயரிட்டுள்ளனர். இந்த படத்தில் அபிநயா நாயகியாக நடிக்கிறார். மற்றும் சுமன், பிரமானந்தம், சூது கவ்வும் ரமேஷ், நளினி, மற்றும் இன்னொரு நாயகியாக பிரேர்னா நடிக்கிறார். இவர்களுடன் முக்கிய வேடம் ஒன்றில் முன்னணி நடிகர் ஒருவரும் நடிக்கிறார். கமலா தியேட்டரின் அதிபர் சிதம்பரத்தின் மகன் கணேஷ் அமைச்சர் வேடத்தில் நடிக்கிறார். அறிமுக இசை அமைப்பளார் நடாஷா […]
‘ஜிகர்தண்டா’ மாற்று மொழிக்கு தடை
ஜூன் 11, 2015 வரை ‘ஜிகர்தண்டா’ திரைப்படத்தின் பிற மொழி உரிமத்தை விற்கவோ, விளம்பரப்படுத்தி இந்தி மற்றும் ஏனைய மொழிகளில் விற்க முயற்சிக்கவோ கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது என்று ‘ஜிகர்தண்டா’ படத்தின் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் கூறியுள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ” ‘ஜிகர்தண்டா ‘திரைப்படத்தின் இந்தி மொழிமாற்று உரிமையையொட்டி எழும் பிரச்சினையை உங்கள் முன் கொண்டுவருகிறேன். இத்திரைப்படத்தின் தயாரிப்பாளர் எஸ்.கதிரேசனுடன் நான் செய்துகொண்ட ஒப்பந்தப்படி, […]