தமிழில் சூர்யா மார்க்கெட் எப்படி உயர்ந்து உள்ளதோ அது போல் தெலுங்கிலும் அவருக்கு மார்க்கெட் உயர்ந்து உள்ளது. அதுவும் டப்பிங் படங்களுக்கே தெலுங்கில் உள்ள மிக பெரிய தயாரிப்பளர்கள் அவர் கால்ஷீட்காக காத்து இருக்கிறார்கள். இந்த நிலைமையில் சூர்யா நேரடி தெலுங்கு படம் நடிக்க உள்ளார் இந்த படத்தை திரிவிக்ரம் இயக்க இருக்கிறார் என்று டோலிவூட் பரபரப்பாக பேசப்படுகிறது யார் தயாரிப்பாளர் நாயகி யார் இதெல்லாம் என்று ரொம்ப சஸ்பென்சாக வைத்து உள்ளனர்.
ரசிகர்களை யூகிக்க வைக்க வரும் “யூகன்”
என்ன தான் சினிமா இன்று கிராஃபிக்ஸ் தொழில்நுட்பத்தில் டாப் கியரில் சென்று கொண்டிருந்தாலும் அவ்வப்போது தமிழ் சினிமாவில் புதுமையா பன்றோம்னு சொல்லி அரைச்ச மாவையே அரைத்துக் கொண்டிருக்கிறார்கள் பலர். ஆனால் இந்த விஷயத்தில் யூகன் படக்குழுவினர் நிஜமாகவே ஒரு புதுமையை கையாண்டிருக்கிறார்கள். ஆமாங்க, இப்போ ஒரு படத்தை உருவாக்க கிராஃபிக்ஸ் இல்லாம ஒரு இன்ச் கூட நகராது என்று சொல்லிக் கொண்டிருந்தவர்களை தலையில் கொட்டும் விதமாக இந்த படத்தில் கிராஃபிக்ஸ் காட்சிக்கும் ரெட் லைட் போட்டு நிறுத்தி […]
அட்டகத்தி தினேஷின் “ஒரு நாள் கூத்து”
திருடன் போலீஸ் படத்தை தயாரித்த கெனன்யன் பிலிம்ஸ் அடுத்து தயாரிக்கும் படம் “ஒருநாள் கூத்து” இப் படத்தின் நாயகனாக அட்ட கத்தி தினேஷ் அவருக்கு ஜோடியாக மியா மற்றும் கருணாகரன், பாலசரவணன் ,ராம தாஸ் , ரமேஷ், திலக் ரித்விகா நடிக்குறர்கள் , பண்ணையாரும் பத்மினியும் இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகர் இசை இப் படத்தை இயக்குபவர் நெல்சன் இந்த படத்தின் படப்பிடிப்பு இந்த மாத கடைசியில் ஆரம்பிக்கயுள்ளது. சென்னை மற்றும் மதுரையில் படப்பிடிப்பு நடைபெறும்.
ஒரு நடிகையிடம் நடிப்பை தவிர வேறு ஒன்றை எதிர்பார்க்கும் சிலர்
சினிமாவில் ஸ்டார் ஆக வேண்டுமென்றால் சிலரின் விருப்பத்தை பூர்த்தி செய்ய வேண்டும் என்றார் மல்லிகா.’ ஆட்டோகிராப்’ படத்தில் அறிமுகமானவர் மல்லிகா. ‘ சிவகாசி’ உள்ளிட்ட படங்களில் தங்கை கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். மலையாளத்திலும் பல்வேறு படங்களில் நடித்துள்ளார். சமீபகாலமாக பட வாய்ப்புகள் இல்லாமல் வீட்டிலே இருந்தார். தற்போது ‘பழனிலே கனகம்’ என்ற படம் மூலம் இயக்குனர் பொறுப்பை ஏற்றிருக்கிறார். இதுபற்றி மல்லிகா கூறியது: தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என 4 மொழிகளிலும் நடித்திருக்கிறேன். மலையாள படவுலகில் எனது […]
ஸ்ருதிஹாசன் நடிக்க தடை
நடிகையான ஸ்ருதிஹாசனை வேறு யாரும் தங்களுடைய படத்தில் நடிப்பதற்காக ஒப்பந்தம் செய்யக் கூடாது என்று ஹைதரபாத் உயர்நீதிமன்றம் இடைக்கால உத்தரவை பிறப்பித்துள்ளது. பிரபல சினிமா தயாரிப்பு நிறுவனமான பிவிபி நிறுவனம் நீதிமன்றத்தில் நடிகை ஸ்ருதிஹாசனுக்கு எதிராக தொடர்ந்த வழக்கின் அடிப்படையில் கோர்ட் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. இது குறித்து பி.வி.பி. நிறுவனம் செய்தியறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. அதில், “சென்னையிலும், ஹைதராபாத்திலும் இயங்கிவரும் பெரிய நிறுவனமான பிக்சர் ஹவுஸ் மீடியாலி மிட்டட் (PVP Cinema), நடிகை ஸ்ருதிஹாசன் மீது கிரிமினல் […]
இயக்குனர் சீனு ராமசாமி அவர்களுக்கு “மக்கள் இயக்குனர்” விருது
125 வருடம் பாரம்பரியம் மிக்க மதுரைக் கல்லூரி (.The Madura College, [Autonomous].) தேசிய விருது பெற்ற திரைப்பட இயக்குனர் சீனு ராமசாமி அவர்களுக்கு மக்கள் இயக்குனர் என்ற கௌரவப் பட்டத்தை வழங்கியது 26 – 03 – 2015 அன்று மாலை 5.00 மணி அளவில் மதுரைக் கல்லூரி பண்பாட்டுக் கழகத்தின் சார்பாகவும் கல்லூரியின் முதல்வர் முனைவர் இரா. முரளி மற்றும் பேராசிரியர் முனைவர் ந.ரத்தினக்குமார் ஒருங்கிணைப்பாளர் அவர்களால் பட்டயச்சான்றிதழும் விருதும் அளித்து கௌரவிக்கப்பட்டது. சாதாரணர்களின் […]
“காக்காமுட்டை” படக்குழுவினரை பாராட்டிய தனுஷ்
மிகவும் எதிர்பார்க்கப்படும் தமிழ் திரைப்படமான “காக்காமுட்டை” சிறந்த குழந்தைகள் திரைப்படத்திற்கான தேசிய விருதையும் மற்றும் அந்த படத்தில் நடித்த சிறுவர்களான விக்னேஷ் மற்றும் ரமேஷ் ஆகியோர் சிறந்த குழந்தை நட்சத்திரங்களுக்கான தேசிய விருதையும் பெற்றுள்ளனர். M.மணிகண்டன் இயக்கி G.V.பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த திரைப்படத்தை வொண்டர்பார் பிலிம்ஸ் (தனுஷ்),க்ராஸ் ரூட் பிலிம் நிறுவனம் (வெற்றிமாறன்),பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் (A.R.முருகதாஸ்)நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. இந்த திரைப்படம் தேசிய விருது பெற்றதை கௌரவப்படுத்தும் விதமாக நடிகர் தனுஷ் இந்த திரைபடத்தின் கலைஞர்களுக்கு […]
விஜய்சேதுபதி – ரம்யா நம்பீசன் நடிக்கும் புது படம்
வாசன் மூவீஸ் ஷான் சுதர்ஷன் தயாரிப்பு நிறுவனத்தின் பெயர் சூட்டப் படாத இந்த படத்தை பண்ணையாரும் பத்மினியும் படத்தை இயக்கிய திரு.எஸ்.யூ.அருண்குமார் இயக்குகிறார். இது அவர் இயக்கும் இரண்டாவது படம் ஆகும். காக்கிச்சட்டைக்கு உரிய கம்பீரத்தையும், நேர்மையையும் பிரதிபலிக்கும் ஒரு போலீஸ்காரனின் யதார்த்த கதைதான் இந்த படம். கதையின் நாயகனாக விஜய்சேதுபதி மற்றும் நாயகியாக ரம்யாரம்பீசன் நடிக்கவிருகின்றனர்.
விஷால் படத்துக்கு ரஜினி டைட்டில்
நான் சிகப்பு மனிதன் என்று ரஜினி பட டைட்டில் வைத்து விஷால் ஏற்கனவே மிகபெரிய வெற்றி கண்டார். விஷால் மீண்டும் ரஜினி பட டைட்டில் வைக்க முடிவுசெய்து உள்ளதாக கோடம்பாக்கத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது ஏவிஎம் நிறுவனம் தயாரிப்பில் மிக பெரிய வெற்றி அடைந்த பாயும்புலி டைட்டில் தேர்வு செய்து இருப்பதாகவும் பேசப்படுகிறது இந்த டைட்டில் விஷாலுக்கு சரியாய் இருக்கும்னு பொறுத்து இருந்து பார்போம்
ஜான்மேக்ஸ் தயாரிக்க V.C.வடிவுடையான் இயக்கும் “ சவுகார்பேட்டை “
மாபெரும் வெற்றி பெற்ற மைனா, சாட்டை, மொசக்குட்டி படங்களை தொடர்ந்து ஷாலோம் ஸ்டுடியோஸ் ஜான்மேக்ஸ் அடுத்து தயாரிக்கும் படம் “ சவுகார்பேட்டை “ இந்த படத்தில் ஸ்ரீகாந்த் கதாநாயகனாக வித்தியாசமான வேடமேற்று நடிக்கிறார். நாயகியாக லஷ்மிராய் நடிக்கிறார். மற்றும் சரவணன், விவேக், அப்புகுட்டி, கோட்டாசீனிவாசராவ், சம்பத், கோவைசரளா, சுமன், பவர்ஸ்டார் சீனிவாசன், நான் கடவுள் ராஜேந்திரன் ஆகியோர் நடிக்கிறார்கள். இசை – ஜான்பீட்டர் / ஒளிப்பதிவு – சீனிவாசரெட்டி பாடல்கள் – நா.முத்துக்குமார், விவேகா கலை – […]