எம்.குப்பன் பெருமையுடம் வழங்க குரு ராகவேந்திரா மூவி மேக்கர்ஸ் என்ற பட நிறுவனம் தயாரிக்கும் படத்திற்கு “ வெள்ள காக்கா மஞ்ச குருவி” என்று பெயரிட்டுள்ளனர். இந்த படத்தில் கார்த்திக்தாஸ் கதாநாயகனாக நடிக்கிறார்.இவர் கதாநாயகனாக அறிமுகமாகும் முதல் படம் இது. கத்தி படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்த அணுகிருஷ்ணா இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். மற்றும் தென்னவன், மீராகிருஷ்ணா, சக்திவேல், சேஷீ இவர்களுடன் முக்கிய வேடத்தில் எம்.எஸ்.பாஸ்கர் நடிக்கிறார். ஒளிப்பதிவு – பவ.விஜய் / இசை – […]
துபாயில் இந்தியர் பாகிஸ்தானியர் ஒற்றுமை கண்டுவியந்தேன்! ஒரு தயாரிப்பாளரின் அனுபவம்
“ நேற்று இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி நடந்தது. அப்போது ரசிகர்கள் பரபரப்பாக இருந்தார்கள்.ஏதோ இந்தியா பாகிஸ்தான் இடையே போர் நடப்பது போல பார்த்தார்கள். அந்தளவுக்கு உணர்ச்சிகரமாக மாறியிருந்தார்கள். ஆனால் துபாய் போன்ற வெளிநாடுகளில் இந்தியர் பாகிஸ்தானியர் சகோதரர் போல இருக்கிறார்கள். ஒருவருக்கொருவர் உதவிக்கொண்டு வாழ்கிறார்கள்.” இவ்வாறு கூறுகிறார் ‘மணல் நகரம்’ படத் தயாரிப்பாளர் எம்.ஐ.வசந்த்குமார். தான் தயாரித்த ‘மணல் நகரம்’ படத்தை முதன்முதலாக முழுதும் துபாயில் எடுத்துள்ள அவர் ,தன் அனுபவங்ளைக் கூறுகிறார் . முதன் […]
‘ரீபூட்’ முறையில் மீண்டும் உருவாகிறது ‘நூறாவது நாள்’!
எண்பதுகளில் கலக்கிய படம் ‘நூறாவது நாள்’ .அதன் தாக்கம் பலகாலம்இருந்தது. இப்போது அந்தப் படம் மறு அவதாரம் எடுக்கிறது. அதே படம் ‘ரீபூட்’ முறையில் மீண்டும் உருவாக இருக்கிறது. படத்தை இயக்க இருப்பவர் ‘நூறாவது நாள்’ படத்தை இயக்கிய இயக்குநர் மணிவண்ணனின் மகன் ரகு மணிவண்ணன். அது என்ன ரீபூட்? பிரபலமாகி வெற்றி பெற்ற ஒரு படத்தை மீண்டும் எடுக்கும் போது ‘ரீமேக் ‘செய்வார்கள். அதாவது அதேகதையை வேறு நடிகர்கள் கொண்டு மாற்றங்களுடன் மீண்டும் எடுக்கப் படுவது […]
ஆர்.கே. நடிக்கும் ஷாஜி கைலாஸ் இயக்கும் படம் ‘வைகை எக்ஸ்பிரஸ்
மக்கள் பாசறை’ சார்பில் உருவாக இருக்கும் படம் ‘வைகை எக்ஸ்பிரஸ்’ .ஆர்.கே.நாயகனாக நடிக்கும் படம் இதுஷாஜி கைலாஸ் இயக்குகிறார். ‘எல்லாம் அவன் செயல்’, ‘என்வழி தனி வழி’ படங்களுக்குப் பின் ஆர்.கே., ஷாஜி கைலாஸ் இணையும் மூன்றாவது படம் இது .நீதுசந்திரா பிரதான நாயகியாக நடிக்கிறார். இனியா, சுஜா வாருணி, கோமல் சர்மா ஆகியோரும் நடிக்கிறார்கள். இப்படத்தின் தொடக்கவிழா இன்று காலை ஏவி எம் ஸ்டுடியோ பிள்ளையார்கோவிலில் நடைபெற்றது. தொடர்ந்து படத்தின் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. நிகழ்ச்சியில் […]
வர்மா – மகிமா நடிக்கும் “ அகத்திணை “
ஸ்ரீஹரிணி பிக்சர்ஸ் என்ற பட நிறுவனம் தயாரிக்கும் படத்திற்கு அகத்திணை என்று பெயரிட்டுள்ளனர். கதாநாயகனாக வர்மா என்ற புதுமுகம் அறிமுகமாகிறார். கதாநாயகியாக மகிமா நடிக்கிறார். மற்றும் ஆடுகளம் நரேன்,ஜி.எம்.குமார், ஜார்ஜ், லொள்ளுசபா.மனோகர், சுவாமிநாதன், நளினி, கருத்தம்மா ராஜஸ்ரீ, ராமச்சந்திரன்,பிளாக்பாண்டி, பக்கோடா பாண்டி, சிவாநாராயணமூர்த்தி, அல்வாவாசு, மாஸ்டர்அதித்யா, செந்தில்குமார், பூவிதா, ரேவதி பாட்டி, செல்வி, ஹரிணி ஆகியோர் நடிக்கிறார்கள். தயாரிப்பாளர் T.R.ஸ்ரீகாந்த் அவர்கள் ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். ஒளிப்பதிவு – அகிலன் (இவர் நீ வருவாய் என, […]
ஹரீஷ் – மாளவிகாமேனன் நடிக்கும் “ வெத்து வேட்டு ”
விபின் மூவி பட நிறுவனம் சார்பாக எஸ்.குமார், A.ராமசாமி, D.சரவணமாணிக்கம், R.மூர்த்தி, A.லட்சுமணன் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் படத்திற்கு “ வெத்து வேட்டு “ என்று பெயரிட்டுள்ளனர். ஹரீஷ் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக விழா பட நாயகி மாளவிகாமேனன் நடிக்கிறார்.மற்றும் இளவரசு,கஞ்சாகருப்பு,ஆடுகளம்நரேன், மீராகிருஷ்ணா, சுஜாதா, தென்னவன், ஸ்ரீரஞ்சனி, பிளாக்பாண்டி, கோபால், மணி, மாக்கான், கிரேன்மனோகர், போண்டாமணி, வெங்கல்ராவ், சின்னசில்க் உமா,நந்தகுமார், கம்பம் மீனா, நாஞ்சில்சரண் ஆகியோர் நடிக்கிறார்கள். கலை – உமாசங்கர் , ஒளிப்பதிவு – காசி […]
AR ரஹ்மான் குடும்பத்தில் மீண்டும் ஒரு இசையமைப்பாளர்
ஆஸ்கார் நாயகன் இசையமைப்பாளர் AR ரஹ்மான் குடும்பத்தில் மீண்டும் ஒரு இசைக்கலைஞன். ரஹ்மானின் தங்கை மகனான E R அசார் காஷிஃப் ‘கண்ணாலே’ என்ற மியுசிக் வீடியோ மூலம் இசையுலகில் தனது பயணத்தை தொடங்குகிறார். இளமை பொங்கும் இந்த காதல் பாடலை காஷிஃப் இசையமைக்க பிரபல பாடகர் ஜாவேத் அலி மற்றும் பாடகர் ஸ்ரீநிவாஸின் மகள் சரண்யா ஸ்ரீநிவாஸ் பாடியுள்ளார். இந்த மியுசிக் வீடியோவை அஷ்வின் இயக்கியுள்ளார் விஜய் கார்த்தி கண்ணன் ஒளிப்பதிவில், ஸ்ரீதரன் படத்தொகுப்பை மேற்கொண்டுள்ளார். […]
இசைக்கு இசைவது இளமையின் இயல்பு – ஜோஸ் செல்வராஜ்
இசைக்கு இசைவது இளமையின் இயல்பு. இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் இயக்கி இசையமைக்கும் திரைப்படம் ‘வானவில் வாழ்க்கை’. இப்படத்தில் நடிப்பு, பாட்டு, வாத்தியம் என நடிப்பிலும் இசையிலும் கைதேர்ந்த இளமை பட்டாளம் நடித்துள்ளனர். இப்படத்தில் ட்ரம்ஸ் கலைஞர் நடித்திருக்கும் ஜோஸ் செல்வராஜ் தனது இசை பயணத்தையும், நடிப்புக்கான ஆர்வத்தையும் கூறுகிறார். “ கொடைகானல் சர்வதேச பள்ளியில் இசை பயின்றேன். சிறு வயது முதலே ட்ரம்ஸ் வாசிக்க ஆரம்பிதேன். பின், லண்டன் ராயல் ஸ்கூல் ஆஃப் மியுசிக் Grade 5 […]
ஈராஸ்இன்டர்நேஷனல் நிறுவனம் & திருப்பதிபிரதர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து வெளியிடும்
ஈராஸ்இன்டர்நேஷனல்நிறுவனம் திருப்பதிபிரதர்ஸ்நிறுவனத்துடன் இணைந்து மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களான உலகநாயகனின் உத்தமவில்லன் மற்றும் சிவகார்த்திகேயனின் ரஜினிமுருகன் ஆகியவற்றை வெளியிடஉள்ளது. சென்னை,மும்பைபிப்ரவரி 10 2015: இந்திய திரைப்படத்துறையில் இருக்கும் உலகளாவிய முன்னணி நிறுவனமான ஈராஸ்இன்டர்நேஷனல் நிறுவனம் லிங்குசாமியின்திருப்பதிபிரதர்ஸ் நிறுவனத்துடன் கைகோர்த்துள்ளது. இந்த இரண்டு நிறுவனங்களும் இணைந்து தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் வெளியாகவுள்ள மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களான பத்மஸ்ரீஉலகநாயகனின் உத்தமவில்லன் மற்றும் சிவகார்த்திகேயனின் ரஜினிமுருகன் ஆகிய திரைப்படங்களை வெளியிட உள்ளன. இந்த இரண்டில் உத்தமவில்லன் கமல்ஹாசன் உடன் அனுஷ்காஷெட்டி நடித்து […]
C V குமார் – அபினேஷ் இளங்கோ இணைந்து தயாரிக்கும் “144”
சி.வி.குமாரின் திருக்குமரன் எண்டர்டெயின்மென்ட் அபினேஷ் இளங்கோவனின் அபி & அபி பிக்சர்ஸ் தயாரிக்கும் புதிய திரைப்படம் “144” பட பூஜை மதுரையில் நேற்று நடைபெற்றது. நடிகர்கள் மிர்ச்சி சிவா , அசோக் செல்வன் ,முனிஸ்காந்த்,நடிகைகள் ஓவியா,ஸ்ருதி ராமகிருஷ்ணன் மற்றும் பலர் நடிக்கிறார்கள். இயக்கம் மணிகண்டன் , இசையமப்பாளர் ஷேன் ரோல்டன்,ஒளிப்பதிவு குருதேவ்,எடிடிங் லியோஜான்பால் தயாரிப்பு திருக்குமரன் எண்டர்டெயின்மென்ட் & அபி & அபி பிக்சர்ஸ்