சில நல்ல பதிவுகளை காலத்திற்கு ஏற்றார் போல மாற்றி, வளரும் இளைய தலைமுறைக்கு கொடுப்பதன் மூலம் காலம் கடந்து நிற்கும். இதில் சவாலான விஷயம் என்பது மக்களின் ரசனையை திருப்தி படுத்துவது தான். இத்திரைப்படத்தில் நான்கு எழுத்தாளர்கள் ஒன்றிணைந்து திரைக்கதை அமைத்துள்ளனர். முதல் முறையாக மாய எதார்த்தவாத யுக்தியை கையாண்டு, நடக்க முடியாத எதார்த்த நிகழ்ச்சிகளை மாய எதார்த்தவாதத்தில் சொல்லப்பட்ட கதை தான் இந்த பஞ்சுமிட்டாய் திரைப்படம். பஞ்சுமிட்டாய் திரைப்படம், எல்லா மனித உணர்வுகளையும் உள்ளடக்கி வயது […]
தமிழ் சினிமாவின் ரசிகன் நான் – நிவின் பாலி
சினிமாவுக்கு மொழி கிடையாது. அதே போல் தான் ஒரு நல்ல நடிகருக்கும். ஒரு அபிமான நடிகர், ஸ்டாராகவும் ஜொலிக்கும் பொழுது அவர் எல்லைகள் தாண்டி, மொழி வித்யாசங்கள் தாண்டி ரசித்து கொண்டாடப்படுவார். அது போன்ற ஒரு நடிகர் தான் நிவின் பாலி. அவரது முதல் நேரடி படமான ‘ரிச்சி’ வரும் டிசம்பர் 8 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது. இப்படத்தை கவுதம் ராமசந்திரன் இயக்கியுள்ளார். ‘ரிச்சி’ குறித்து நிவின் பாலி பேசுகையில், ” தமிழ் சினிமாவின் ரசிகன் நான். […]
‘மன்னர் வகையறா’ தமிழக ரைட்ஸை கைப்பற்றிய ‘சினிமா சிட்டி’..!
விமல் நடிப்பில் அடுத்ததாக வெளிவர தயாராகி வரும் படம் தான் ‘மன்னர் வகையறா’. இந்தப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்சன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்தநிலையில் இந்தப்படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை நல்ல விலை கொடுத்து சினிமா சிட்டி நிறுவனம் கைப்பற்றியுள்ளது. அரவிந்த்சாமி – த்ரிஷா நடித்து விரைவில் வெளியாகவுள்ள ‘சதுரங்க வேட்டை-2’ படத்தையும் இந்த நிறுவனம் தான், தமிழகம் முழுக்க வெளியிட இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப்படத்தை விமலின் சொந்த நிறுவனமான A3V சினிமாஸ் […]
அனைத்து இடங்களிலும் ஒலிக்கும் “ மதுரவீரன் “ என்ன நடக்குது நாட்டுல பாடல்
மதுரவீரன் திரைப்படத்திலிருந்து “ என்ன நடக்குது நாட்டுல “ எனும் சிங்கள் பாடல் சில வாரங்களுக்கு முன் வெளிவந்து அனைவரிடமும் நல்ல வரவேற்ப்பையும் , பரபரப்பையும் ஏற்படுத்தியது. சமகாலத்தில் நம் சமூகத்தில் நடக்கும் அவலங்களை தோலுரிக்கும் வகையில் அமைந்திருந்த இப்பாடலை தற்போது பல்வேறு அரசியல் கட்சிகள் பிரச்சார பொதுகூட்டத்தில் தங்கள் கருத்துக்களை எடுத்து சொல்ல பயன்படுத்திவருகிறார்கள். இன்றையளவில் பரபரப்பாக இருக்கும் RK நகர் பிரச்சார களத்தில் தவறாமல் “ என்ன நடக்குது நாட்டுல “ பாடல் ஒலிக்கிறது […]
மிஷ்கின் மற்றும் விக்ராந்த் நடிக்கும் “சுட்டுப்பிடிக்க உத்தரவு”
ஒரு படத்தின் தலைப்பு ரசிகர்களை ஈர்க்கும் விதமாகவும் இருக்க வேண்டும், கதைக்கும் பொருத்தமாகவும் இருக்க வேண்டும். அவ்வாறு தலைப்பிட பட்ட படம் தான் ” சுட்டுப்பிடிக்க உத்தரவு”. மிகுந்த பொருட்செலவில் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்படும் இந்த படத்தை இயக்குபவர் ராம் பிரகாஷ் ராயப்பா. “தமிழில் எண் ஒன்றை அழுத்தவும்” என்ற வெற்றி படத்தின் மூலம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர் இவர் என்பதுக் குறிப்பிடத்தக்கது. இப்படத்தை ‘கல்பதரு பிக்சர்ஸ்’ சார்பில் திரு. P K ராம் மோகன் […]
இன்றைய ராசி பலன்கள் – 8.12.2017
8.12.2017 வெள்ளிக்கிழமை பஞ்சாங்கம். 1193ம் ஆண்டு ஹேவிளம்பி வருஷம் கார்த்திகை மாதம் 22ம்தேதி. கிருஷ்ணப்பட்சத்து (தேய்பிறை) பஞ்சமி திதி காலை 10.50 மணி வரை பின் ஷஷ்டி திதி. ஆயில்யம் நட்சத்திரம் இரவு 12.36 மணி வரை பின் மகம் நட்சத்திரம். இன்று முழுவதும் மரண யோகம். ராகுகாலம்- காலை 10.30 முதல் 12 மணி வரை. எமகண்டம்- மதியம் 3 முதல் 4.30 மணி வரை. நல்லநேரம்- இல்லை சூலம்- மேற்கு. ஜீவன்- 0; நேத்திரம்- […]
சென்சார் குழுவினர் படத்தை பார்த்துவிட்டு பாராட்டிய “அருவி”
அருவி படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சமீபத்தில் நடைபெற்றது. இதில் படத்தின் தயாரிப்பாளர்கள் ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் S.R.பிரகாஷ் பாபு , S.R.பிரபு , இயக்குநர் அருண் பிரபு , நாயகி அதீதி பாலன் , இசையமைப்பாளர் வேதாந்த் , ஒளிப்பதிவாளர் ஷெல்லி , படத்தொகுப்பாளர் ரேமன்ட் , கலை இயக்குநர் சிட்டிபாபு , நடிகர்கள் ஸ்வேதா சேகர் , அஞ்சலி வரதன் , மதன்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். விழாவில் தயாரிப்பாளர் S.R.பிரபு பேசியது :- இதுவரை […]
தமிழ் சினிமா ரசிகர்கள் மனதை வசீகர புன்னகையாலும், திறமையான நடிப்பாலும் கவரும் ஷ்ரத்தா ஸ்ரீநாத்
நல்ல கதையையும், கதாபாத்திரங்களையும் தேர்ந்தெடுத்து தனது நடிப்பு திறமையை படத்துக்கு படம் நிரூபிக்கும் எந்த ஒரு நடிகரும் வேகமாக வளர்வதை யாராலும் தடுக்கமுடியாது. நிவின் பாலி கதாநாயகனாக நடிக்கும் ‘ரிச்சி’ படம் வரும் டிசம்பர் 8 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது. இப்படத்தில் நிவினுடன் நட்ராஜும் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் . இப்படத்தில் நிவினுக்கு ஜோடியாக ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடித்துள்ளார். சமீபகாலமாக தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் தனது வசீகர புன்னகையாலும், திறமையான நடிப்பாலும் தடம் பதித்துக்கொண்டிருக்கும் நடிகை […]
‘ஆண் தேவதை’ பெண்களை குறைத்து மதிப்பிடுகிறதா..? மனம் திறக்கிறார் இயக்குநர் தாமிரா..!
இயக்குநர் சிகரம் பாலசந்தர், இயக்குநர் இமயம் பாரதிராஜா என ஜாம்பவான்கள் இருவரையும் வைத்து ‘ரெட்டச்சுழி’ படத்தை இயக்கிய இயக்குநர் தாமிரா, தற்போது இயக்கிவரும் படம் ‘ஆண் தேவதை’. சமுத்திரக்கனி கதைநாயகனாக நடிக்கும் ‘ஆண்தேவதை’ படத்தில் கதாநாயகியாக ரம்யா பாண்டியன் நடிக்கிறார். ‘சிகரம் சினிமாஸ்’ , சைல்ட் புரொடக்சன்ஸ் சார்பாக அகமது ஃபக்ருதீன், ஷேக் தாவூத், முஸ்தபா, குட்டி ஆகியோர் இணைந்து இப்படத்தைத் தயாரித்துள்ளனர். சற்று இடைவெளிக்குப்பின் வந்தாலும், விஜய்மில்டன் ஒளிப்பதிவு, ஜிப்ரான் இசை, காசிவிஸ்வநாதன் படத்தொகுப்பு, ஜாக்சன் […]
‘ரிச்சி’ தமிழ் சினிமா ரசிகர்களுக்கு நிச்சயம் விருந்தாக இருக்கும்
அதீத தன்னம்பிக்கையும், திறமையும் கொண்ட ஒரு நடிகரால் மட்டுமே எந்த ஒரு கதாபாத்திரத்தையும் கையில் எடுத்து அசத்தமுடியும். ‘சதுரங்க வேட்டை’ படத்தின் மூலம் ஹிட் ஹீரோவாக ஆன ‘நட்டி’ நட்ராஜ் வரும் டிசம்பர் 8 ஆம் தேதி ரிலீசாக இருக்கும் தனது அடுத்த படமான ‘ரிச்சி’ படத்தை எதிர்நோக்கியுள்ளார். ‘ரிச்சி’ குறித்து நட்ராஜ் பேசுகையில் , ” சுவாரஸ்யமான கதையையும், அழுத்தமான கதாபாத்திரங்களையும் கொண்ட படம் தான் ‘ரிச்சி’. இரண்டு ஹீரோக்களில் ஒருவரான, ரிச்சி கதாபாத்திரத்தை எதேச்சையாக […]