Flash Story
ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் – அஸ்வத் மாரிமுத்து – பிரதீப் ரங்கநாதன் கூட்டணி வழங்கிய ‘டிராகன்’ திரைப்படத்தின் நூறாவது நாள் வெற்றி விழா
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.

‘ஜிகினா’ படத்தின் இசையை வெளியிட்டனர் ‘காக்கா முட்டை’ சிறுவர்கள்

unnamed (3)சூரியனில் தோய்ந்த மெல்லிய தூரிகையும் தங்க சருகாய் மின்னும். அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது ரவி நந்தா பெரியசாமி இயக்கியுள்ள ‘ஜிகினா’. திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் விரைவில் வெளியிடவுள்ள ‘ஜிகினா’ திரைப்படத்தின் இசை சூரியன் FMல் வெளியிடப்பட்டது.

“பெரும் நபர்கள் மற்றும் பெரிய நட்சத்திரங்கள் முன்னிலையில் இசை வெளியிடுவது வழக்கமே . ‘காக்கா முட்டை’ படத்தில் நம் அனைவரது நெஞ்சங்களை கொள்ளைக் கொண்ட இரு சிறுவர்கள்தான் எங்கள் சிறப்பு விருந்தினர்கள்.மேலும், இன்றைய நிலையில் சிறிய படங்களே தமிழில் வெற்றி பெறுகிறது என்று கூறப்படும் நிதர்சனத்தின் நிஜ உருவாய் நிற்பவர்களும் இவர்களே. நல்ல கதையம்சமுள்ள திரைப்படங்கள்தான் மின்னும் பொன் போன்றது. ‘. எங்களது நிறுவனத்திலிருந்து வெளி வந்து மக்களிடையே பெரிதாய் பேசப்பட்ட ‘வழக்கு எண் 18/9’, ‘கோலி சோடா’, ‘மஞ்சப்பை’, ‘சதுரங்க வேட்டை’ வரிசையில் ஜிகினாவும் பெயருக்கு ஏற்றாற்போல் மின்னும்’ என்றுக் கூறினார் தயாரிப்பாளர் லிங்குசாமி

Back To Top
CLOSE
CLOSE