Flash Story
ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் – அஸ்வத் மாரிமுத்து – பிரதீப் ரங்கநாதன் கூட்டணி வழங்கிய ‘டிராகன்’ திரைப்படத்தின் நூறாவது நாள் வெற்றி விழா
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.

“Bulbu” Album Song

நாம் ஆசை ஆசையாய் செய்யும் காரியத்தில் ஏமாற்றம் அடைவதை ‘bulbu’ என்று குறிப்பிடுவது வழக்கமாக உள்ளது. காதலின் தோல்வியை அந்தக் காலத்தில் பசங்க கவிதையில் மறந்தனர்… இப்பொழுது பசங்க, ஏமாத்துன பொண்ணுங்கள கவிதையா திட்டி பாட்டா பாடுறாங்க…
மேற்கூறியதுபோல் காதலியிடம் ஏமாந்து ‘bulbu’ வாங்கிய காதலன் பாடும் பாடல் ஒன்றை Kinetoscope நிறுவனத்தின் சார்பில் DR.S. செல்வமுத்து & மஞ்சுநாத் ஆகியோர் வீடியோ ஆல்பமாக தயாரிக்கிறார்கள். மஸ்தான்-காதர் இசையில் ‘எங்கடி போன நீ ஏமாத்தி போன நீ’ என்ற ஒற்றை பாடலை அபிஷேக் – பிரசாந்த் பாடியுள்ளனர்.

பல்வேறு படங்களில் கதாநாயகனாக நடித்து வரும் கணேஷ் பிரசாத், ‘வாகை சூடவா’ இனியா ஆகியோர் இந்தப் பாடலுக்கு உரியக் கதாபாத்திரங்களில் நடித்து இருக்கிறார்கள். கண்கவரும் உடை அலங்காரத்தில் இனியா மிகவும் வித்தியாசமான தோற்றத்தில் இந்த பாடலில் தோன்றுகிறார்.

இப்பாடலுக்கு நடனம் அமைத்திருக்கிறார் B. சிவராக் சங்கர். ஹரி RJ ராஜன் – கார்த்திக் முனியாண்டி ஒளிப்பதிவில் , அரவிந்த் படத்தொகுப்பில் . ‘பல்பு சாங்’ என்ற ஒற்றை பாடல் வீடியோ ஆல்பத்தை எழுதி இயக்கியிருக்கிறார் AR பரத் குமார். ‘பல்பு சாங்’ ஆல்பத்தை பல்வேறு திரை இசை பாடல்களை வெளியிடும் வரும் புகழ் பெற்ற சரிகமா நிறுவனம் வெளியிடுகிறது.’பல்பு சாங் ‘ இனி மேல் இதைப் போன்றப் பாடல்கள் மேலும் வெளி வர உதவும் என எதிர்பார்க்க படுகிறது.

‘பல்பு சாங்’ பற்றி சரிகமா தலைமை நிறுவன அதிகாரி ஆனந்த் கூறுகையில் “ ‘பல்பு சாங்’ துள்ளல் இசை, கண்கவர் படக் காட்சிகள் என முற்றிலும் புது கான்செப்ட். இந்த ஆல்பத்தை வெளியிடுவதில் சரிகமா நிறுவனம் மகிழ்ச்சியடைகிறது. மேலும் இந்த ஆல்பம் பல புதிய கலைஞர்களுக்கு ஒரு தன்னம்பிக்கையாய் அமையும்” என நம்பிக்கை தெரிவித்தார்.

Back To Top
CLOSE
CLOSE