Flash Story
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.
மீண்டும் திரைக்கு வருகிறது ! அருண் விஜய்யின் ப்ளாக்பஸ்டர் திரைப்படம் “தடையறத் தாக்க”

மின்னுவதெல்லாம் தங்கமே….கூறுகிறார் லிங்குசாமி.

தரமான படங்களை வெளியிடுவதில் இயக்குனர் லிங்குசாமியின் திருப்பதி pictures முன்னோடியாக இருந்து வருகிறது. Jigina Movie Stills (2)அவரது நிறுவனம் வெளியிட்ட வழக்கு எண் 18/9, கோலி சோடா, மஞ்சபை , சதுரங்க வேட்டை ஆகிய படங்கள் பெரும் வெற்றி அடைந்தது.அதை தொடர்ந்து திருப்பதி pictures அடுத்ததாக வெளியிடும் ‘ ஜிகினா’ வரும் 21ஆம் தேதி வெளிவர உள்ளது.’ஜிகினா’ இன்றைய கால கட்டத்துக்கு மிகவும் முக்கியமான படமாகும்.பெருகி வரும் சமூக வலை தள குற்றங்களைப் பற்றியும், அதன் வாயிலாக பெருகும் குற்றத்தை பற்றியும் ,அறிமுகம் இல்லா காதல் ஏற்படத்தும் விளைவுகளையும், மிகவும் ஜனரஞ்சகமாக இன்றைய இளைஞர்களின் மன நிலையை தெள்ள தெளிவாக படம் எடுத்து காட்டி இருக்கிறார் எனது நண்பரும் இயக்குனரான ரவி நந்தா பெரியசாமி. எனது நிறுவனத்தின் மூலம் வெளியாகும் படங்களின் வெற்றி அதிர்ஷ்டத்தால் வந்தது அல்ல. நல்ல கதைகளையும் அதை சரி வர இயக்கும் இயக்குனர்களையும் இனம் பிரித்து அறிமுகம் செய்வதில் தான் சூட்சுமம் இருக்கிறது.’ஜிகினா’ படத்தில் நாயகனாக நடிப்பவர் விஜய் வசந்த். அவர் இந்த பாத்திரத்துக்கு பொருந்தக் கூடிய அளவுக்கு யாரேனும் பொருந்தி இருப்பார்களா என்பது எனக்கு தெரியாது.அவரது ஜோடியாக அறிமுகம் ஆகிறார் சானியா தாரா.சிங்கம் புலி, ரவி மரியா,’ கும்கி’ அஷ்வின் , ‘டாடி’ செந்தில், சுகு வெங்கட், குட்டி ஸ்ரீதேவி, மற்றும் ஆன்சன் பால் ஆகியோரும் சிறப்பாக நடித்து உள்ளனர்.புதிய இசை அமைப்பாளர் ஜான் பீட்டர்ஷ் சிறப்பாக இசை அமைத்து உள்ளார் . முன்னாள் பிரபல ஒளிப்பதிவாளர் ரங்காவின் மகனும் ஒளிப்பதிவாளருமான பாலாஜி ரங்கா இந்த படத்துக்கு மிக அருமையாக ஒளிப்பதிவு செய்துள்ளார். கோபி கிருஷ்ணாவின் பட தொகுப்பில் உருவான ‘ ஜிகினா’ பெரும் எதிர்பார்ப்பு கிடையே வரும் 21 ஆம் தேதி வெளி வர உள்ளது.இளைய தலைமுறையினருக்கு இது படமாக மட்டும் அல்ல பாடமாகவும் ‘அமையும் என்றார் லிங்குசாமி.

Back To Top
CLOSE
CLOSE