Flash Story
ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் – அஸ்வத் மாரிமுத்து – பிரதீப் ரங்கநாதன் கூட்டணி வழங்கிய ‘டிராகன்’ திரைப்படத்தின் நூறாவது நாள் வெற்றி விழா
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.

கொல்லப்புடி ஸ்ரீனிவாசா விருது பெற்ற – க்யூ என்ற ஹிந்திபடம்

சினிமாவில் தனியார் அமைப்புகள் தரும் விருதுகள் கேலிக்கூத்தாகும்இக்காலத்தில் சில விருதுகளுக்கு மட்டும் தான் மிகப்பெரிய மதிப்பும்மரியாதையும் இருக்கிறது. அதில் தேசிய விருதும், அந்த தேசிய விருதுக்குநிகராக இந்திய சினிமாவே மதிக்கும் கொல்லப்புடி ஸ்ரீனிவாசா தேசியவிருதும் அடக்கம். முதல் படத்தை இயக்கும் முயற்சியில், Director Sanjeev Gupta Photoபடப்பிடிப்புதளத்திலேயே விபத்தில் தன் மகனை பறிகொடுத்த கொல்லப்புடி மாருதிராவ்விதைத்த விதை இது. இன்று இந்திய சினிமாவில் மூலை முடுக்கெல்லாம் தேடிஅறிமுக இயக்குனர்களில் திறமைசாலியை அடையாளம் கண்டு அவருக்குவழங்கப்படுகிறது. இத்தனை சிறப்புமிக்க கொல்லப்புடி விருதை 2008ல் அமீர்கான் ’தாரே ஜமீன் பார்’ படத்துக்கு வாங்கியபோது கண்ணீர் விட்டு அழுததுகுறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு இந்த மதிப்புமிக்க விருதை பெற்றவர் ஹிந்தி அறிமுகஇயக்குனர் சஞ்சீவ் குப்தா. வரும் டிசம்பரில் திரைக்கு வரவிருக்கும் அவரதுக்யூ படம் ஃப்ரான்ஸ் உள்ளிட்ட நாடுகளின் திரைப்பட விழாக்களில் விருதுவென்றிருக்கிறது. விருதுகளை குவித்துவரும் படத்துக்கு மணிமகுடமாக நமதுதமிழ்நாட்டு கொல்லப்புடி ஸ்ரீனிவாசா விருதும் கிடைத்திருக்கிறது.கிராமத்தில் இருந்து நகரத்துக்கு வரும் ஒரு பெண்ணை பற்றிய மிக இயல்பானபடம் தான் க்யூ. இந்த விருது வாங்கியது பற்றி சஞ்சீவ் குப்தாவிடம்கேட்டோம்.எனக்கு ரொம்ப சந்தோஷமான தருணம் இது. அறிமுக இயக்குனருக்கு மட்டுமே இந்தவிருது கிடைக்கும் என்ற நிலையில் நான் வாங்கியிருக்கிறேன். 27 அறிமுகஇயக்குனர்கள் என்னுடன் போட்டியில் இருந்ததாக சொன்னார்கள். தேசியவிருதுக்கு கூட விண்ணப்பிக்க வேண்டும். ஆனால் இந்த விருதுக்கு யாரும்விண்ணப்பிக்க கூட தேவையில்லை. திறமையானவர்களை அவர்களே தேடி அடையாளம்கண்டுகொள்கின்றனர். கடுமையான போட்டிக்கு பிறகு தான் நான்வென்றிருக்கிறேன். இது தேசிய விருதுக்கு சமம்.சினிமாவை நேசிக்கும்எவருக்கும் இந்த விருது ஒரு கனவாக, லட்சியமாக இருக்கும்.க்யூ படம் எடுக்க 4 ஆண்டுகள் சிரமப்பட்டீர்களாமே?2006ல் நான் எனது கல்லூரி படிப்பை முடித்தேன். சினிமா தான் என் வாழ்க்கைஎன முடிவெடுத்தேன். அதில் இருந்தே சிரமங்கள் தொடங்கிவிட்டன.கமர்ஷியல் படங்களை விடுத்து இயல்பான படங்கள்எனக்கு இதுபோன்ற இயல்பான படங்கள் எடுக்க தான் ஆசை. படத்தின் சப்ஜெக்ட்என்ன கேட்கிறதோ அதை மட்டும் தான் தர வேண்டும். இந்த படம் வெறும் 96நிமிடங்கள் தான். ஒரு ஃப்ரேம் கூட கதைக்கு தேவையில்லாமல் இருக்காது.இத்தனை விருதுகள் எதிர்பார்த்தீர்களா?இந்த அளவுக்கு எதிர்பார்க்கவில்லை. ஆனால் எதுவோ ஒன்றை வித்தியாசமாகசெய்கிறோம் என்று நம்பினேன். பாலிவுட்டில் எல்லோரும் பாரபட்சமில்லாமல்புகழ்வது எனக்கு கூச்சமாக இருக்கிறது. எடுக்கும்போது பட்ட கஷ்டங்கள்எல்லாம் இப்போது பறந்துபோய்விட்டது.தென் இந்திய சினிமாக்கள்?ஐ லவ் ஆல். ரொம்ப வித்தியாசமான முயற்சிகள் இங்கே இருக்கு. அதை ஆடியன்ஸும்ஏத்துக்கிறாங்க…பீட்ஸா, ட்ராஃபிக் மாதிரியான படங்கள் என்னை கவர்ந்தவை.ரோல் மாடல்?சத்யஜித்ரே. சினிமா கற்க விரும்புபவர்கள் தவிர்க்கவே கூடாத பெர்சனாலிட்டி.அடுத்தது?ஒரு படத்துக்கான எழுத்துப்பணிகள் சென்றுகொண்டிருக்கிறது. குறும்படங்கள்இயக்கவும் திட்டங்கள் இருக்கிறது.எதிர்காலத்தில் கமர்ஷியல் படங்கள்?வாய்ப்பே இல்லை என சொல்லிவிட முடியாது. ஒரு இயக்குனராக எல்லாவகைபடங்களும் எடுக்க தான் ஆசை. அதுதானே சிறந்த இயக்குனருக்கான தகுதி?அறிமுக இயக்குனர்களுக்கு அறிவுரை?உங்களுக்கென்று ஒரு நல்ல டீம் உருவாக்கி கொள்ளுங்கள். அது அமைந்தால்நீங்கள் எந்த சூழ்நிலையிலும் படம் இயக்கலாம். யாருக்காகவும் எதற்காகவும்எந்த விதத்திலும் காம்ப்ரமைஸ் செய்துகொள்ளாதீர்கள். மற்றவர்களுக்கும் உதவி செய்யுங்கள்.ஆனால் இந்திய சினிமா இன்னமும் ஸ்டார்ஸ் பின்னால் தானே ஓடுகிறது?அது மனிதர்களை பொறுத்தது. பெரிய படங்கள் என்ற நிலையில் பெரிய ஸ்டார்கள் இருப்பது அவசியமாயிற்றே? நாம் தான் நமக்கான பாதையை தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டும். தயாரிப்பாளர் வழிக்கு நீங்கள் செல்வதா உங்கள் வழிக்கு தயாரிப்பாளரை கொண்டு வருவதா என்பது உங்கள் கையில் தான் இருக்கிறது.

Back To Top
CLOSE
CLOSE