Flash Story
The Mirchi Shiva-starrer has been officially selected for the Rotterdam film festival
‘காமெடி கிங்’ கவுண்டமணி நடிக்கும் ‘ஒத்த ஓட்டு முத்தையா’ படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீடு
ZEE5 வழங்கும், டோவினோ தாமஸ் மற்றும் திரிஷா கிருஷ்ணன் நடிப்பில் “ஐடென்டிட்டி”
CYNTHIA PRODUCTION தயாரிப்பில் இசை ஞானி இளையராஜா பாடல்களை எழுதி இசையமைக்க ஸ்ரீகாந்த் – சிந்தியா லூர்டே ஜோடியாக நடிக்கும் படம் ‘தினசரி’
உழவர் பெருமக்களை கௌரவப்படுத்திய நடிகர் கார்த்தி !!
அகத்தியா கேம் மற்றும் இரண்டாவது சிங்கிள் வெளியீட்டு புகைப்படங்கள்
அகத்தியா கேம் மற்றும் இரண்டாவது சிங்கிள் வெளியீட்டு நிகழ்வு, கொண்டாட்டம் !!
“பாட்ஷா” விரைவில் டால்பி 4K இல் அட்மாஸ் ஒலியுடன்.
பிரபுதேவாஸ் வைப் ( Prabhudeva’s Vibe) டிக்கெட் அறிமுக விழா

‘வைகை எக்ஸ்பிரஸ்’ படத்தில் 6 கேமராக்களில்13 நாட்கள் எடுக்கப்பட்ட க்ளைமாக்ஸ் ​சண்டைக் ​காட்சிகள்!

மக்கள் பாசறை தயாரிப்பில் உருவாகி வரும் படம் ‘வைகை எக்ஸ்பிரஸ்’ .ஆர்.கே.நாயகனாக நடிக்க ,ஷாஜி கைலாஸ்

æ
æ
இயக்குகிறார். ‘எல்லாம் அவன் செயல்’, ‘என்வழி தனி வழி’ படங்களுக்குப் பின் ஆர்.கே., ஷாஜி கைலாஸ் இணையும் மூன்றாவது படம் இது .​ ​நீதுசந்திரா பிரதான நாயகியாக நடிக்கிறார். இனியா,​ கோமல் சர்மா​, ​ சுஜா வாருணி​ ​​ஆகியோரும் நடிக்கிறார்கள் நடிப்பில் தன்னை நிலை நிறுத்திக்கொள்ள எதையும் செய்யத் துணிபவரான நடிகர் ஆர்கே இதில் சண்டைக் காட்சிகளில் ​பயங்கர ரிஸ்க் எடுத்துள்ளார். நம்மூர் சண்டை​ப்பயிற்சி​ போதாது என்று ​ அமெரிக்கா போய் சண்டைப் பயிற்சியின் நுணுக்கங்களை​ கற்று வந்துள்ளார். ​ ​​ நியூயார்க் அருகில் க்ரீன்பாயிண்ட், ப்ருக்லீன் என்ற இடத்தில் இருக்கும் ஹாலிவுட் ஸ்ட​ண்ட் புரொபஷனல் மையத்துக்கு சென்​று ​15 நாட்கள் ​ ​பயிற்சி எடுத்தார். பாப் கார்ட்டர் என்பவரிடம் சேசிங் காட்சிக்காகச் சிறப்புப் பயிற்சி​யும் பெற்றார் ஆர்,கே. ​​சேசிங் காட்சிக்கான
æ
æ
பாதுகாப்பு உபகரணங்களையும் வாங்கி வந்​து பயன்படுத்தியுள்ளார். படத்தின் பிரதான வில்லனாக இயக்குநர் ஆர்.கே. செல்வமணி நடிக்கிறார். குழந்தைகள் பூங்கா ஒன்றில் அவர் செய்யும் நாசகரமான அழிவைத் தடுக்கும் காட்சியில் சதியை தடுத்து நிறுத்த மோதிப் போராடும் காட்சியில் சண்டைக் காட்சியில் ஆர்.கே சாகசம் காட்டியுள்ளார். ஆர்கேவும்​,​ ஆர்கே. செல்வமணியும் மோதும் காட்சிகள் மிரட்டலாக​ எடுக்கப்பட்டுள்ளன. ​இந்த சண்டைக் காட்சிக்காக விதவிதமான மனித உருவிலான மண்பொம்மைகள் செய்யப்பட்டன. நூற்றுக்கணக்கில் குழந்தைகளைக் கவரும் வண்ணம் அந்த பொம்மைகள் ​உருவாக்கப்பட்டன. அவற்றை ஈ வி பி பார்க் முழுவதும் பரவலாக ஆங்காங்கே வைத்தனர். அத்தனை பொம்மைகளும் பின்னர் காட்சிக்காக வெடி வைத்து வெடிக்கப்பட்டது. இந்த க்ளைமாக்ஸ் காட்சிகளை சண்டை இயக்குநர் கனல் கண்ணன் காட்சிகள் அமைக்க 13 நாட்கள் எடுக்கப்பட்​டது. இதில் ஃபாண்டம் கேமரா, ஹெலிகேம்கள் ​தவிர ஆறு கேமராக்கள் ​படப்பிடிப்பு நடந்த 13 நாட்களும் பயன்படுத்தப் பட்​டன. பிரம்மாண்டமாக எடுக்கப்பட்ட இக்காட்சியை வைகை எக்ஸ்பிரஸ் படத்தில் ​ ஹாலிவுட்டிற்கு நிகரான சண்டைக் காட்சியாக கண்டுகளிக்கலாம்​.

Back To Top
CLOSE
CLOSE