Flash Story
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.
மீண்டும் திரைக்கு வருகிறது ! அருண் விஜய்யின் ப்ளாக்பஸ்டர் திரைப்படம் “தடையறத் தாக்க”

பாபி சிம்மா, மிர்ச்சி சிவாவுடன் இணைந்து புதுமுகம் கௌரவ் நடித்திருக்கும் “மசாலா படம்”

pizap.com14441271293021வரவிருக்கும் படங்களில் காரசாரமாக விவாதிக்க படும் படம் ‘மசாலா படம்’.சினிமாவைப் பற்றிப் பல படங்கள் வந்து இருக்கலாம் , ஆனால் சினிமாவை விமர்சிப்பவர்கள் பற்றியும் , சினிமா சமூகத்தில் ஏற்படுத்தும் தாக்கத்தையும் பற்றியக் கதைதான் ‘மசாலா படம்’.பிரபல ஒளிப்பதிவாளர் லக்ஷ்மன் இயக்கம் இப்படத்தை தயாரித்து இருப்பவர் ஆல் இன் Pictures விஜய் ராகவேந்தர்.

வெவ்வேறு குண நலன் உடைய மூன்றுக் கதா பாத்திரங்களை சுற்றி சுழலும் ‘மசாலா படம் ‘ சமூக வலைதளங்களில் திரைப்படங்களை வறுத்து எடுக்கும் போக்கை பற்றிய கதை ஆகும்.பாபி சிம்மா மற்றும் மிர்ச்சி சிவா இரண்டு வித்தியாசமான கதாப்பாத்திரங்களில் நடித்து இருக்கும் இந்தப் படத்தில் கௌரவ் முக்கியம்மான பாத்திரத்தில் நடித்து உள்ளார்.

Gaurav (1)பொறியாளர் கல்வி தகுதி பெற்ற எனக்கு நடிப்பின் மேல் தீவிரக் காதல் உண்டு.அதற்காகவே பிரத்தியேகமாக உள்ள பயிற்சி அரங்குகளில் பயின்றேன்.எல்லா மொழிப் படங்களையும் பார்த்து நடிப்பை பயின்றேன்.இந்த நேரத்தில் தான் இயக்குனர் லக்ஷ்மணை நேரில் சந்தித்தேன்.அவர் மசாலா படத்துக்காக ப்ளே பாய் கதாப் பாத்திரம் ஒன்று உள்ளதாகவும் அதற்கு நான் பொருத்தமாக இருப்பேன் என்று கருதுவதாகவும் கூறி என்ன தேர்ந்து எடுத்தார்.பல்வேறு படங்களை பல மொழிகளில் பார்த்து இருந்த எனக்கு இந்தக் கதைக்களம் மிக வித்தியாசமாக தெரிந்தது. மிர்ச்சி சிவா , பாபி சிம்மா , நான் உட்பட மூன்று நாயகர்கள் இருந்தாலும் நாங்கள் கிளைமாக்ஸ் காட்சியில் தான் ஒரே பிரேமில் வருவோம். அந்த அளவுக்கு வித்தியாசமான திரைக் கதை அமைத்து உள்ளார் லக்ஷ்மன்.

கார்த்திக் ஆச்சாரியாவின் இசை மூலம் படம் பட்டி தொட்டி எங்கும் இன்றுப் பிரசித்தி எனலாம் இந்த மாதம் 9ஆம் தேதி திரைக்கு வெளிவர உள்ள மசாலா படம் நிச்சயம் வெற்றி பெரும் என படம் பார்த்தவர்கள் கூறும் போது உற்சாகமாக உள்ளது. எனக்கு வாய்ப்பு அளித்த இயக்குனர் லக்ஷ்மன், தயாரிப்பாளர் விஜய் ராகவேந்தர்,ஆகியோருக்கு மனமார்ந்த நன்றி எனக் கூறினார் இளம் நடிகர் கௌரவ்.

Back To Top
CLOSE
CLOSE