ரசிகர்களால் மிகவும் எதிர்ப்பார்க்கப் படும் படங்களில் ஒன்றான ‘உப்பு கருவாடு’ திரைப்படத்தின் இசை வருகின்ற 11ஆம் தேதி நடைப் பெற உள்ளது.’ படம் பார்த்த பிறகு எங்கள் அனைவருக்கும் மட்டற்ற மகிழ்ச்சி.தணிக்கை அதிகாரிகளால் ‘யு’ சான்றிதழ் கிடைக்க பெற்றது எங்களுக்கு மிகவும் ஊக்கம் தரும் செய்தியாகும். இயக்குனர் ராதா மோகனின் படங்கள் என்றாலே இசைக்கு முக்கியத்துவம் கொடுக்க பட்டு இருக்கும் என்பது தெரிந்ததே.’உப்பு கருவாடு’ திரைப்படத்தில் ஸ்டீவ் வாட்ஸ் என்ற பிரபல கிடார் கலைஞர் இசை அமைப்பாளராக அறிமுகமாகிறார்.இந்தப் படத்தின் மூலம் அவர் ஒரு தேர்ந்த இசை அமைப்பாளராக வருவார் என்ற நம்பிக்கை பாடல்கள் கேட்ட அனைவருக்கும் வரும்.அக்டோபர் 11ஆம் தேதி வெளி வர இருக்கும் இந்தப்படத்தின் இசை படத்தின் வெற்றிக்கு நிச்சயம் கட்டியம் கூறும்’ எனக் கூறினார் தயாரிப்பாளர் ராம்ஜி நரசிம்மன்.
