Flash Story
ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் – அஸ்வத் மாரிமுத்து – பிரதீப் ரங்கநாதன் கூட்டணி வழங்கிய ‘டிராகன்’ திரைப்படத்தின் நூறாவது நாள் வெற்றி விழா
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.

கடலை சார்ந்த மனிதர்களின் எண்ணத்தை பிரதிபலிக்கும் படமாக உருவாகியிருக்கும் “உள்குத்து”

Ulkuthu Movie Poster (3)தயாராகி வரும் படங்களில் ‘உள்குத்து’ பெரிதும் எதிர்ப்பார்ப்புக் குரிய படமாக இருக்கும் என்று எதிர்ப்பார்க்க படுகிறது. ‘அட்டகத்தி’ தினேஷ் கதாநாயகனாக நடிக்க , கார்த்திக் ராஜு இயக்க,kenanya films ஜே .செல்வகுமார் தயாரிக்க ‘திருடன் போலீஸ்’ படம் மூலம் ரசிகர்களைக் கவர்ந்த இந்த வெற்றிக் கூட்டணி மீண்டும் இணைகிறது. ஜி .விட்டல் குமார் இணை தயாரிப்பில் உருவாகும் ‘உள்குத்து’ வர்த்தக ரீதியாக, எல்லா தரப்பு மக்களையும் கவரும் படமாக இருக்கும் என்றுக் கணிக்க படுகிறது. தினேஷுக்கு இணையாக நந்திதா நாயகியாக நடிக்கும் ‘உள்குத்து’ படத்தில் அவர்களோடு பால சரவணன்,ஜான் விஜய்,சாயா சிங்,ஸ்ரீமன்,’பாண்டிய நாடு’ சரத்,திலிப் சுப்புராயன்,மற்றும் சமையல் கலை தாமோதரன் ஆகியோர் நடித்து உள்ளனர். இடைவிடாத படப்பிடிப்பை தொடர்ந்து ‘உள்குத்து’ இறுதிக் கட்ட பணிகளை எட்டிக் கொண்டு இருக்கிறது.’உள்குத்து’ கண்களை மட்டுமல்ல , கருத்தையும் கவரும் வண்ணம் படமாக்கப் பட்டு உள்ளது. கடலின் வண்ணமும், கடல் பாசியின் வண்ணமும் படத்தின் வண்ணத்தையும், கடலை சார்ந்த மனிதர்களின் எண்ணத்தையும் பிரதிபலிக்கும் படமாக இருக்கும் . எனது முந்திய படமான ‘திருடன் போலீஸ்’ ஏற்படுத்தி உள்ள அபிப்ராயத்தை இந்தப் படமும் காப்பாற்றும்.’உள்குத்து’ படத்தின் First look ‘ஒரு நாள் கூத்து’ திரைப்படம் வெளி வரும் நாளில் வெளி ஆகிறது. ‘உள்குத்து’ இசை டிசம்பர் மாதம் வெளி வர உள்ளது. 2016 ஆம் பொங்கல் அன்று ரசிகர்களை மகிழ்விக்க வருகிறது ‘உள்குத்து’ என்று தெரிவித்தார் இயக்குனர் கார்த்திக் ராஜு.

Back To Top
CLOSE
CLOSE