Flash Story
ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் – அஸ்வத் மாரிமுத்து – பிரதீப் ரங்கநாதன் கூட்டணி வழங்கிய ‘டிராகன்’ திரைப்படத்தின் நூறாவது நாள் வெற்றி விழா
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.

இயக்குனர் பாலா இயக்கத்தில் தமிழ் சினிமாவில் பிரம்மாண்டமான மல்டிஸ்டாரர் திரைப்படம்…

bala‘சேது’, ‘பிதாமகன்’, ‘நான் கடவுள்’ போன்ற தமிழ் திரையுலகின் முக்கியமான படங்களை இயக்கியவர் இயக்குநர் பாலா.

பாலாவின் படங்கள் என்றாலே மிகப் பெரிய எதிர்பார்ப்பு இருக்கும்.

விக்ரம், சூர்யா, ஆர்யா, விஷால், அதர்வா போன்ற நாயகர்கள் அனைவருமே இவருடைய பட்டறையில் இருந்து தான் பெரிய நாயகர்களாக வளர்ந்திருக்கிறார்கள்.

தற்போது சசிகுமார் நாயகனாக நடித்து பாலா இயக்கியிருக்கும் ‘தாரை தப்பட்டை’ திரைப்படத்தின் இறுதிகட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இளையராஜா இசையமைத்திருக்கும் 1000வது படம் இது. விரைவில் இசை வெளியீடு மற்றும் பட வெளியீடு குறித்த அறிவிப்புகள் வெளியாக இருக்கிறது.

தற்போது தனது அடுத்த படத்துக்கான பணிகள் மும்முரமாகி இருக்கிறார் இயக்குநர் பாலா. நடிகர்கள் ஆர்யா, விஷால், அரவிந்த் சாமி, அதர்வா, ராணா ஆகியோரை இணைத்து தமிழ் திரையுலகின் மிகப்பெரிய மல்டி ஸ்டாரர் படத்தை இயக்க திட்டமிட்டு இருக்கிறார் பாலா.

இப்படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கப்பட்டு இருக்கின்றன. அடுத்தாண்டு துவக்கத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்க பாலா திட்டமிட்டு இருக்கிறார்.

முன்னணி நாயகர்கள் பலரும் இப்படத்தில் இணைந்து நடிக்கவிருப்பதால், தற்போதே இப்படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது.

Back To Top
CLOSE
CLOSE