“காதலின் சிறப்பு மட்டுமின்றி, பெண்களை மகிமைப்படுத்தும் வண்ணமாகவும் அமைந்துள்ளது இது நம்ம ஆளு திரைப்படம்!” என்கிறார் சிலம்பரசன்
காதலைப் பற்றியப் படங்கள் பலப் படங்கள் வந்துக் கொண்டே இருந்தாலும் எஸ் டி ஆரின் படங்களில் எப்பொழுதுமே ஒரு புதூனர்வு இருக்கும்.தோல்வியுற்ற காதலை கண்டு துவண்டு போகாமல், அதனை ஓர் ஆயுதமாக பயன்படுத்தி, வாழ்க்கையில் வெற்றி கண்ட ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ கார்த்திக் கதாப்பாத்திரம் அனைவரின் உள்ளங்களையும் கவர்ந்த ஒன்று என்பதை யாராலும் மறுக்க முடியாது. அந்த வகையில் மீண்டும் ஒரு காதல் காவியமாக மட்டும் இல்லாமல், பெண்களை மேன்மை படுத்தும் வண்ணமாக தயாராகி உள்ளது மே 27 ஆம் தேதி வெளிவரும் ‘இது நம்ம ஆளு’ திரைப்படம்.
“இது நம்ம ஆளு” போன்ற உணர்ச்சி மிகுந்த காதல் கதையில் நான் பயணித்து உள்ளது எனக்கு எல்லையற்ற மகிழ்ச்சியை தருகிறது. இதற்கு முழு காரணாமாக செயல்பட்டு, பல கடினமான தருணங்களில் பொறுமையை கையாண்ட இயக்குனர் பாண்டிராஜ் அவர்களுக்கு எனது நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன். இந்த படத்திற்காக தனது முழு ஒத்துழைப்பையும் கொடுத்தது மட்டுமில்லாமல், தனித்துவமான நடிப்பால் ஒட்டு மொத்த படக்குழுவினரையும் கவர்ந்த நயன்தாராவுக்கும் நான் நன்றி சொல்ல கடமைபட்டிருக்கிறேன். காதலின் சிறப்பு மட்டுமின்றி, பெண்களை மகிமைப்படுத்தும் வண்ணமாகவும் அமைந்துள்ளது இது நம்ம ஆளு திரைப்படம். இளைஞர்களை மட்டுமின்றி அனைத்து குடும்பங்களையும் கவரும் விதத்தில் இந்த படம் இருக்கும். இதற்கு உறுதுணையாக இருந்த தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்திற்கும் எனது மனமார்ந்த நன்றிகளை கூறுகிறேன். நம் வாழ்க்கையில் பெண்கள் இல்லாமால் எதுவும் இல்லை. ஒரு அம்மாவாகவும், தங்கையாகவும், அக்காவாகவும், என அவர்களின் பங்கு நம் வாழ்க்கையில் தொடர்ந்து கொண்டே போகும். அத்தகைய மகிமை மிகுந்த பெண்மையை மிக அழகாக இந்த படத்தில் கூறியுள்ளோம். எனக்கு பக்க பலமாக இருந்து, இந்த படத்தை பல தடைகளுக்கு பிறகு வெளியிட பாடுப்பட்ட எனது தந்தைக்கும், இந்த படத்திற்கு ஏற்ற பாடல்களை அளித்த இசை அமைப்பாளர் குறளரசன் அவருக்கும் எனது நன்றிகளை கூறி கொள்கிறேன். அனைத்துக்கும் மேலாக, என்னுடைய முதுகெலும்பாக செயல்படும் எனது ரசிகர்கள் ஒவ்வொருவருக்கும் என் இரு கரம் குவித்து நன்றிகளை சொல்லி கொள்கிறேன். அவர்கள் என் மீது வைத்துள்ள அன்பிற்கு நான் தலை வணங்கி நன்றிகளை கூறுகிறேன்” என்று தனக்கென உரிய அந்த சிறு புன்னகையுடன் விடை பெறுகிறார் எஸ் டி ஆர்.