Flash Story
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.
மீண்டும் திரைக்கு வருகிறது ! அருண் விஜய்யின் ப்ளாக்பஸ்டர் திரைப்படம் “தடையறத் தாக்க”

ஆகஸ்ட் இரண்டாம் தேதி வெளியாகிறது பாபி சிம்ஹாவின் ‘வல்லவனுக்கும் வல்லவன்’ படத்தின் டீசர்.

ஆகஸ்ட் இரண்டாம் தேதி வெளியாகிறது பாபி சிம்ஹாவின் ‘வல்லவனுக்கும் வல்லவன்’ படத்தின் டீசர்

‘அசால்ட் சேது’ என்னும் கதாப்பாத்திரம் மூலம் தேசிய விருதை தட்டிச் சென்ற பாபி சிம்ஹாவிற்கு, சமீபத்தில் வெளியான ‘இறைவி’ திரைப்படம் ரசிகர்களின் பாராட்டுகளை வெகுவாக பெற்று தந்திருக்கிறது. அதுமட்டுமின்றி இவர் நடிப்பில் வெளியான கோ 2 திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல பாராட்டுகளை பெற்றது மட்டுமின்றி, வர்த்தக ரீதியாகவும், வணீக ரீதியாகவும் வெற்றி பெற்று இருக்கிறது. இப்படி தொடர்ந்து வெற்றி பாதையில் பயணம் செய்து கொண்டிருக்கும் பாபி சிம்ஹா தற்போது ‘வல்லவனுக்கும் வல்லவன்’ என்னும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். ‘அசால்ட் புரொடக்ஷன்ஸ்’ சார்பில் பாபி சிம்ஹா தயாரித்து, கதாநாயகனாக நடிக்கும் ‘வல்லவனுக்கும் வல்லவன்’ படத்தை இயக்கி வருகிறார் அறிமுக இயக்குனர் விஜய் தேசிங்கு. தயாரிப்பு துறையில் தொடர்ந்து தரமான வெற்றி படங்களை ரசிகர்களுக்கு வழங்கி வரும் ‘தேனாண்டாள் பிலிம்ஸ்’ நிறுவனத்தோடு இணைந்து ‘அசால்ட் புரொடக்ஷன்ஸ்’ இந்த ‘வல்லவனுக்கும் வல்லவன்’ படத்தை தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது. நெடுஞ்சாலை’ புகழ் ஷிவதா மற்றும் பூஜா தேவாரியா முன்னணி கதாப்பாத்திரங்களிலும், நடிகர் கருணாகரன் முக்கிய கதாப்பாத்திரத்திலும் நடித்து அதிரடி திரைப்படமாக உருவெடுத்து வரும் இந்த ‘வல்லவனுக்கும் வல்லவன்’ படத்தின் டீசரானது, வருகின்ற ஆகஸ்ட் இரண்டாம் தேதி அன்று வெளியாகிறது.

‘வல்லவனுக்கும் வல்லவன்’ படத்தில் பாபி சிம்ஹா பதினொன்று கெட்டப்பில் நடித்து வருகிறார் என்பது அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் இன்ப அதிர்ச்சியாக அமைந்திருக்கிறது. அதுமட்டுமின்றி, சுமார் பதினைந்து வருடம் கழித்து சென்னையை அடுத்து உள்ள பழவேற்காடு ஏரியில் படமாக்கப்பட்டிருக்கும் தமிழ் படம் ‘வல்லவனுக்கும் வல்லவன்’. நடிகர் அஜித் குமார் நடித்த ‘சிட்டிசன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு தான் இங்கு கடைசியாக படமாக்கப்பட்ட தமிழ் படம் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி ஏகப்பட்ட சுவாரசியங்களை உள்ளடக்கிய ‘வல்லவனுக்கும் வல்லவன்’ திரைப்படம், வருகின்ற ஆகஸ்ட் இரண்டாம் தேதி வெளியிடும் டீசரின் மூலம், ரசிகரக்ளின் கவனத்தை பெருமளவில் ஈர்க்கும் என்பதை உறுதியாகவே சொல்லலாம்.

Back To Top
CLOSE
CLOSE