Flash Story
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.
மீண்டும் திரைக்கு வருகிறது ! அருண் விஜய்யின் ப்ளாக்பஸ்டர் திரைப்படம் “தடையறத் தாக்க”

புதுமுக இயக்குனர் சீயோன் இயக்கி வரும் ‘பொது நலன் கருதி’ படத்தின் படப்பிடிப்பானது இன்று பூஜையுடன் துவங்கியது .

புதுமுக இயக்குனர் சீயோன் இயக்கி வரும் ‘பொது நலன் கருதி’ படத்தின் படப்பிடிப்பானது இன்று பூஜையுடன் துவங்கியது

‘பொது நலன் கருதி’ என்ற சொல்லை நாம் அனைவரும் செய்திகளிலும், திரையரங்கில் அரசாங்கத்தின் சார்பில் வெளியிடப்படும் விளம்பர படங்களிலும் தான் கேட்டு வருகிறோம். ஆனால் தற்போது அந்த சொல்லை மைய கருத்தாக கொண்டு ‘பொதுநலன் கருதி’ என்னும் திரைப்படத்தை இயக்கி வருகிறார் புதுமுக இயக்குனர் சீயோன். சந்தானத்தின் ‘தில்லுக்கு துட்டு’ படத்தின் இயக்குனர் ராம் பாலாவிடம் உதவியாளராக பணிபுரிந்த சீயோன், இன்றைய கால இளைஞர்களின் மனப்பான்மை எப்படி இருக்கிறது என்பதை மிக இயல்பாக இந்த ‘பொதுநலன் கருதி’ படத்தின் மூலம் சொல்ல இருக்கிறார். நடிகர் கருணாகரன், ‘தங்கமகன்’ படப்புகழ் ஆதித் அருண், ‘கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்’ படப்புகழ் சந்தோஷ், மலையாள நடிகை அனு சித்தாரா (ஹாப்பி வெட்டிங்) மற்றும் லீஷா ஆகியோர் முன்னணி கதாப்பாத்திரங்களில் நடிக்கும் இந்த ‘பொது நலன் கருதி’ திரைப்படத்தில் யோக் ஜாப்பீ, அஷ்மித்தா (‘மஸ்காரா போட்டு மயக்குறுயே..’ பாடல் புகழ்), இமான் அண்ணாச்சி, ‘வழக்கு எண் 18/9’ படப்புகழ் முத்துராமன், ‘சூப்பர் குட்’ சுப்பிரமணி, ‘சுப்ரமணியப்புரம்’ ராஜா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படி வலுவான திறமையாளர்களை உள்ளடக்கிய ‘பொது நலன் கருதி’ திரைப்படத்தின் படப்பிடிப்பானது, இன்று சென்னையில் பூஜையுடன் தொடங்கியது.

“மூன்று வெவ்வேறு பிரிவுகளை சார்ந்த இளைஞர்கள், தங்களின் பிழைப்புக்காக சென்னை வருகின்றனர். அவர்கள் தங்களின் வாழ்க்கையில் வெற்றி கண்டார்களா, இல்லையா என்பது தான் எங்கள் ‘பொது நலன் கருதி’ படத்தின் ஒரு வரிக்கதை. இந்த படத்தில் சமுதாயத்திற்கு தேவையான ஒரு முக்கிய கருத்தை நாங்கள் உள்ளடக்கி இருக்கிறோம். ஆனால் வெறும் ஒரு சீரியஸ் படமாக மட்டுமில்லாமல், ரசிகர்களை என்டர்டைன் பண்ணக்கூடிய அனைத்து அம்சங்களும் இந்த ‘பொது நலன் கருதி’ படத்தில் இருக்கிறது…” என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் ‘பொது நலன் கருதி’ படத்தின் இயக்குனர் சீயோன்.

Back To Top
CLOSE
CLOSE