Flash Story
சூப்பர் நேச்சுரல் திரில்லரில் மிரட்ட வரும் தி பிளாக் பைபிள் – டீசர் வெளியீடு..!!
ஷிவதா, ரம்யா பாண்டியன் நடிக்கும் ‘கயிலன்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு
ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் – அஸ்வத் மாரிமுத்து – பிரதீப் ரங்கநாதன் கூட்டணி வழங்கிய ‘டிராகன்’ திரைப்படத்தின் நூறாவது நாள் வெற்றி விழா
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு

தனுஷ் இயக்கத்தில் ராஜ்கிரண் கதாநாயகனாக நடிக்கும் திரைப்படத்துக்கு ஷான் ரோல்டன் இசை !!

தனுஷ் இயக்கத்தில் ராஜ்கிரண் கதாநாயகனாக நடிக்கும் திரைப்படத்துக்கு ஷான் ரோல்டன் இசை !!

நடிகராக பல வெற்றி படங்களில் நடித்தது மட்டுமல்லாது தேசிய விருது உள்ளிட்ட இந்தியாவின் மிக முக்கியமான பல்வேறு விருதுகளை வென்ற நடிகர் தனுஷ். தற்போது இவருக்கு இந்தியாவின் தலைசிறந்த நடிகர் , தயாரிப்பாளர் , பாடலாசிரியர் , பாடகர் என பல்வேறு முகம் உண்டு. இத்தனை புகழுக்கு சொந்தக்காரரான நடிகர் தனுஷ் தற்போது இயக்குநர் தனுஷாக அவதாரம் எடுத்துள்ளார். ஆம் தற்போது இவர் வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரிப்பில் ராஜ் கிரண் கதாநாயகனாக நடிக்கும் “ பவர்பாண்டி “ என்னும் திரைப்படத்தை எழுதி இயக்குகிறார்.

இப்படத்தில் நடிகர் ராஜ் கிரண் , பிரசன்னா , சாயா சிங் ஆகியோர் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். இப்படத்திற்கு ஆர் .வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்ய தனுஷ் , கஸ்தூரி ராஜா ஆகியோர் எழுதும் பாடல்களுக்கு ஷான் ரோல்டன் இசையமைக்கிறார் , படத்தொகுப்பு பிரசன்னா ஜி.கே , கலை ஜெயா சந்திரன் , சண்டை பயிற்சி Stunt சில்வா , நடனம் பாபா பாஸ்கர் , காஸ்டியும் டிசைன் பூர்ணிமா ,தயாரிப்பு மேற்ப்பார்வை எஸ்.பி.சொக்கலிங்கம் , நிர்வாக தயாரிப்பு எஸ்.வினோத்.

பவர் பாண்டி திரைப்படத்தின் மற்ற நடிகர்கள் பற்றிய தகவல்கள் விரைவில் அறிவிக்கப்படும்.

இப்படத்தின் முதல் கட்ட படபிடிப்பு இன்று சென்னையில் பூஜையுடன் இனிதே துவங்கியது.

Back To Top
CLOSE
CLOSE