Flash Story
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.
மீண்டும் திரைக்கு வருகிறது ! அருண் விஜய்யின் ப்ளாக்பஸ்டர் திரைப்படம் “தடையறத் தாக்க”

“ மானே தேனே பேயே “

கல்சன் மூவீஸ்(பி)லிட் பட நிறுவனம் தயாரிக்கும் படம் மானே “தேனே பேயே” இந்த நிறுவனம் தற்போது பென்சில் என்ற படத்தையும், அருவி என்ற படத்தையும் தயாரித்துக் கொண்டிருக்கிறது.
“ மானே தேனே பேயே” படத்தில் ஆரி கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக சுபஸ்ரீகங்குலி நடிக்கிறார். இவர் பெங்கால் மொழியில் 15 படங்களுக்கு மேல் நடித்து முதல்தர கதாநாயகியாக உள்ளார். மற்றும் டேனியல்பாலாஜி, சஞ்சனா, செண்ட்ராயன், செவ்வாளை, மயில்சாமி, மீராகிருஷ்ணன், மதுமிதா, அர்ஜுனன் ஆகியோர் நடிக்கிறார்கள்.
ஒளிப்பதிவு – எம்.எஸ்.பிரபு
இசை – சத்யா.c
வசனம் – ஆர்.எஸ்.ராமகிருஷ்ணன்.
கலை – சஞ்சய்
எடிட்டிங் – சுபராக்
பாடல்கள் – யுகபாரதி, விவேகா, கிருஷ்ணா.
இணை இயக்கம் – கண்ணன் பொன்னைய்யா.
தயாரிப்பு – கல்சன் மூவீஸ்(பி)லிட்
எழுதி இயக்கும் கிருஷ்ணாவிடம் படம் பற்றி கேட்டோம்…
ஜில்லுன்னு ஒரு காதல், காதல் கதையாக உருவாக்கினேன். நெடுஞ்சாலை ஆக்ஷன் படமாக உருவாக்கினேன். “ மானே தேனே பேயே ” படம் வேறு மாதிரியான கதைக் களத்தை மையப் படுத்தி உருவாகுகிறோம்.
ஆரி – சாண்டி என்றழைக்கப் படுகின்ற சந்தானம் என்கிற பெயரில் சாப்ட்வேர் இளைஞராக நடிக்கிறார். டேனியல்பாலாஜி இதுவரை ஏற்றிராத வேடமேற்று நடிக்கிறார். இது தனது வாழ்க்கைக்கு கிடைத்த சவாலான வேடம் என்கிறார் டேனியல்பாலாஜி.
தொடர்ந்து 60 நாட்கள் படப்பிடிப்பு நடைபெற்று ஒரே கட்டத்தில் முடிவடைகிறது.
சம காலத்து இளைஞர்களின் வாழ்கையை பிரதிபலிக்கும் படமாக “மானே தேனே பேயே” உருவாகி வருகிறது என்றார் இயக்குனர் கிருஷ்ணா.

Back To Top
CLOSE
CLOSE