Flash Story
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.
மீண்டும் திரைக்கு வருகிறது ! அருண் விஜய்யின் ப்ளாக்பஸ்டர் திரைப்படம் “தடையறத் தாக்க”

வெள்ளக்காரதுரை

Vellakkara Durai Stills  (43)தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் 1000 படங்களுக்கு மேல் வியோகம் செய்துள்ள அன்புசெழியனின் கோபுரம் பிலிம்ஸ் தயாரிக்கும் படம் “வெள்ளக்காரதுரை “
விக்ரம்பிரபு கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக ஸ்ரீ திவ்யா நடிக்கிறார். மற்றும் சூரி, ஜான்விஜய், எம்.எஸ்.பாஸ்கர், மனோபாலா, வையாபுரி, ஆடுகளம் நரேன், சிங்கம் புலி, மதன்பாப், சிங்கமுத்து, மிப்பு, பாவாலட்சுமணன், விட்டல் , வி.ஞானவேல், மகாநதி சங்கர், டாடி சரவணன், நான்கடவுள் ராஜேந்திரன், வனிதா, மதுமிதா ஆகியோர் நடிக்கிறார்கள்.
வசனம் – எழிச்சூர் அரவிந்தன். ஒளிப்பதிவு – சூரஜ் நல்லுசாமி
வைரமுத்து, யுகபாரதி பாடல்களுக்கு D.இமான் இசையமைக்கிறார்.
கலை – ரெமியன். நடனம் – தினேஷ், தினா. ஸ்டன்ட் – திலீப் சுப்பராயன்
எடிட்டிங் – கிஷோர். தயாரிப்பு நிர்வாகம் – ஜெயராஜ், ரஞ்சித்
தயாரிப்பு மேற்பார்வை – சங்கர்தாஸ். இணை இயக்கம் – பாலகணேசன்
கதை, திரைக்கதை எழுதி இயக்குகிறார் எஸ்.எழில்.
தயாரிப்பு – அன்பு செழியன்
படம் பற்றி இயக்குனர் எழிலிடம் பேசினோம்…..வெள்ளக்காரதுரை படத்திற்காக சமீபத்தில் கொடைக்கானலில் விக்ரம்பிரபு – ஸ்ரீதிவ்யா பங்கேற்ற முதலிரவு பாடல் காட்சி ஒன்றை வீடு ஒன்றில் படமாக்கினோம்.
“ கூதக் காத்து
கொல்லுதடி – கூரச்சேல தாடி “ என்ற முதலிரவு பாடல் அது. முதலிரவு பாடல் தான் என்றாலும் விரசமே இல்லாமல் எல்லோரும் குடும்பத்தாருடன் பார்க்கக் கூடிய பாடலாக உருவாக்கி உள்ளோம். நான் இயக்கிய இதற்கு முந்தைய படங்களிலும் ஆபாசமான காட்சிகள் எதுவுமே இருக்காது. அது மாதிரி தான் இதிலும்..ஜாலியான படமாக வெள்ளக்காரதுரை இருக்கும் என்றார்.
தயாரிப்பாளர் அன்பு செழியன் கூறியதாவது…. ஆயிரத்துக்கு மேற்பட்ட படங்களை விநியோகம் செய்துள்ள நான் முதன் முதலாக தயாரிக்கும் படம் இது.
நான் எதிர் பார்த்த மாதிரியே தரமான கமர்ஷியல் படமாக வந்திருக்கிறது. படத்தை பார்த்து விட்டேன். முழு திருப்தியாக இருக்கிறது என்றார்.

Back To Top
CLOSE
CLOSE