Flash Story
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.
மீண்டும் திரைக்கு வருகிறது ! அருண் விஜய்யின் ப்ளாக்பஸ்டர் திரைப்படம் “தடையறத் தாக்க”

படப்பிடிப்பை வெற்றிகரமாக நிறைவு செய்து இருக்கின்றனர், ‘8 தோட்டாக்கள்’ படக்குழுவினர்..

குறி வைத்த காலக் கட்டத்தில் படப்பிடிப்பை வெற்றிகரமாக நிறைவு செய்திருக்கிறது ‘8 தோட்டாக்கள்’

கூர்மை, வேகம், வலிமை, இவை எல்லாவற்றுக்கும் மேலாக குறித்த நேரத்தில், குறி வைத்த இலக்கை தாக்குவது…..இவை யாவும் தான் தோட்டாக்களின் சிறப்பம்சம்…. அந்த தோட்டாக்களின் யுக்தியை கையாண்டு, தற்போது தங்களின் படப்பிடிப்பை குறி வைத்த நேரத்தில் வெற்றிகரமாக நிறைவு செய்து இருக்கின்றனர், ‘8 தோட்டாக்கள்’ படக்குழுவினர். ‘வெற்றிவேல் சரவணா சினிமாஸ்’ சார்பில் எம். வெள்ளைப்பாண்டியன் தயாரித்து வரும் இந்த ‘8 தோட்டாக்கள்’ படத்தை ‘பிக் பிரிண்ட் பிச்சர்ஸ்’ சார்பில் இணை தயாரிப்பு செய்கிறார் ஐ பி கார்த்திகேயன். இயக்குனர் மிஷ்கினின் உதவியாளரான ஸ்ரீ கணேஷ் இயக்கும் ‘8 தோட்டாக்கள்’ படத்தில் புதுமுகம் வெற்றி மற்றும் அபர்ணா பாலமுரளி (மலையாள திரைப்படம் ‘மஹேஷிந்தெ பிரதிகாரம்’ புகழ்) முன்னணி கதாப்பாத்திரங்களிலும், நடிகர்கள் நாசர், எம்.எஸ்.பாஸ்கர், அம்மா கிரியேஷன்ஸ் டி. சிவா, மைம் கோபி மற்றும் மீரா மிதுன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களிலும் நடிக்கின்றனர். முற்றிலும் திறமை படைத்த புதிய தொழில்நுட்ப கலைஞர்கள் பணியாற்றி வரும் இந்த ‘8 தோட்டாக்கள்’ படத்திற்கு இசையமைத்து வருகிறார் ‘அவம்’, ‘கிரகணம்’ புகழ் கே எஸ் சுந்தரமூர்த்தி .

“துப்பாக்கியில் இருக்கும் ட்ரிக்கரை அழுத்தினால் போதும், அதில் இருக்கும் தோட்டா இலக்கை நோக்கி சீறி பாயும்….. அதேபோல் எங்கள் ஒட்டுமொத்த படக்குழுவினரின் ஒத்துழைப்பும், உற்சாகமும் தான் எங்களுக்கு ட்ரிகராக செயல்பட்டு, ‘8 தோட்டாக்கள்’ படத்தின் படப்பிடிப்பை திட்டமிட்ட நேரத்தில் நிறைவு செய்ய உதவியாக இருந்தது…. ரசிகர்களின் உள்ளங்களில் ஆழமாக இறங்க கூடிய காட்சிகளை கொண்டு நாங்கள் எங்களின் ‘8 தோட்டாக்கள்’ படத்தை உருவாக்கி இருக்கிறோம். மிக விரைவில் நடைபெற இருக்கும் தொழில் நுட்ப பணிகள், எங்கள் 8 தோட்டாக்களை மேலும் மெருகேற்றும்….” என்று முழு நம்பிக்கையுடன் கூறுகிறார் ‘8 தோட்டாக்கள்’ படத்தின் இயக்குநர் ஸ்ரீ கணேஷ்.

Back To Top
CLOSE
CLOSE