வறுமையில் வாடி வந்த சூப்பர் ஸ்டார் ரஜினி படங்களுக்கு இசையமைத்த பிரபல இசையமைப்பாளர் குடும்பத்துக்கு உதவினார் விஷால் !!
சமீபத்தில் பத்திரிகை ( kumudham ) வாயிலாக வெளி வந்த மூந்நூறு மேற்பட்ட பாடல்களுக்கும் மேல் இசை அமைத்தவர், சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் மனிதன் , விடுதலை போன்ற வெற்றி படங்களுக்கு இவர் தான் இசை. பல ஹிட் பாடல்களை பாடிக் கொடுத்தவர் பிரபல இசை அமைப்பாளர் சந்திரபோஸ் அவருடைய குடும்பம் வறுமையில் இருப்பதாகவும், அவருடைய மனைவி ராஜகுமாரி அவர்கள் மருத்துவ செலவிற்கும் கஷ்டப்படுவதை அறிந்த தென்னிந்திய நடிகர் சங்க பொது செயலாளர் நடிகர் விஷால் அவர்கள் உடனே அவர்களை அழைத்து தனது தேவி அறக்கட்டளை மூலம் குடும்ப நல நிதிஉதவியை வழங்கினார். VFF மேலாளர் முருகராஜ் , விஷால் நற்பணி மன்ற செயலாளர் ஹரி ஆகியோர் உடன் இருந்தனர்.