Flash Story
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.
மீண்டும் திரைக்கு வருகிறது ! அருண் விஜய்யின் ப்ளாக்பஸ்டர் திரைப்படம் “தடையறத் தாக்க”

இயக்குநர் சுசீந்திரன் வழங்கும் வெண்ணிலா கபடி குழு-2 திரைப்படத்தின் படபிடிப்பு இன்று பூஜையுடன் துவங்கியது !

இயக்குநர் சுசீந்திரன் வழங்கும் வெண்ணிலா கபடி குழு-2 திரைப்படத்தின் படபிடிப்பு இன்று பூஜையுடன் துவங்கியது !

7 வருடங்களுக்கு முன் தமிழ் சினிமா ரசிகர்களை வெகுவாக கவர்ந்த திரைப்படம் சுசீந்திரன் இயக்கிய வெண்ணிலா கபடி குழு. இப்படம் மூலம் விஷ்ணு விஷால் , சூரி , அப்பு குட்டி போன்ற திறமையான நடிகர்கள் அறிமுகமானார்கள். இவர்களை அறிமுகபடுத்திய இயக்குநர் சுசீந்திரன் இயக்கி இருந்த இப்படம் சூப்பர் ஹிட் ஆனது. மறுபடியும் கபடியை மையமாக கொண்டு எடுக்கப்படவுள்ள இப்படம் வெண்ணிலா கபடி குழு-2 என தயாராகுகிறது.

இப்படத்தை சுசீந்திரன் வழங்க சாய் அற்புதம் சினிமாஸ் தயாரிக்கிறது. இப்படத்தில் விக்ராந்த் நாயகனாக நடிக்கிறார். அவரது ஜோடியாக அர்த்தனா என்ற புதுமுகம் அறிமுகமாகிறார். மேலும் பசுபதி , கிஷோர் , சூரி , ரவி மரியா , யோகி பாபு , அப்பு குட்டி , லக்ஷ்மி , பாவா லக்ஷ்மணன் , திருமா , விஜய் கணேஷ் , பன்னீர் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

கதை – திரைக்கதை – வசனம் எழுதி இயக்குநராக அறிமுகமாகிறார் செல்வ சேகரன். இவர் பல முன்னணி இயக்குநர்களிடம் உதவி இயக்குநராக பனி புரிந்தவர். மூலக் கதை: சுசீந்திரன் , இசை: V. செல்வ கணேஷ் , ஒளிப்பதிவு: E. கிருஷ்ணா , படத்தொகுப்பு: காசி விஷ்வநாத் , கலை: சக்தி வெங்கட் ராஜ்.M , ஸ்டன்ட்: அனல் அரசு , தயாரிப்பு: A. பூங்காவனம் , N.ஆனந்த.
இப்படத்தின் படபிடிப்பு இன்று (10.12.16) முதல் ஆரம்பமாகியது. மாம்பாக்கம் கோவளஞ்ச்சேரி முனீஸ்வரர் கோவிலில் ஆரம்பமாகி தொடர்ந்து படபிடிப்பு நடைபெறுகிறது.-

Back To Top
CLOSE
CLOSE