Flash Story
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.
மீண்டும் திரைக்கு வருகிறது ! அருண் விஜய்யின் ப்ளாக்பஸ்டர் திரைப்படம் “தடையறத் தாக்க”

என் இடது கை தான் கதாநாயகன்’ பீச்சாங்கை’ படத்தின் ஹீரோ கார்த்திக்


அறிமுக இயக்குநர் அஷோக் இயக்கி, ‘கர்ஸா என்டர்டைன்மெண்ட்’ சார்பில் ஆர் எஸ் கார்த்திக் மற்றும் ‘பி ஜி மீடியா ஒர்க்ஸ்’ சார்பில் பி ஜி முத்தையா ஆகியோர் இணைந்து தயாரித்து இருக்கும் திரைப்படம் ‘பீச்சாங்கை’. ‘ஏலியன் ஹாண்ட் சின்ட்ரோம்’ எனப்படும் ஒரு வித குறைபாட்டை மையமாக கொண்டு உருவாகி இருக்கும் இந்த படத்தில் கார்த்திக் மற்றும் அஞ்சலி ராவ் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். சமீபத்தில் வெளியான பீச்சாங்கை படத்தின் டிரைலர், மிக விரைவாக 15 லட்சத்திற்கும் அதிகமாக பார்வையாளர்களை யுடியூபில் கடந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

“இடது கை பழக்கம் உள்ள ஒரு பிக் பாக்கெட் திருடன் வேடத்தில் நான் இந்த பீச்சாங்கை படத்தில் நடித்து இருக்கின்றேன். நான் நடித்திருக்கும் இந்த கதாபாத்திரத்தின் பெயர் ‘ஸ்மூது’. பீச்சாங்கை படத்தின் கதையை பொறுத்த வரை என்னுடைய இடது கை தான் உண்மையான கதாநாயகன். ஒரு பிக் பாக்கெட் திருடனை ராஜா போல வாழ வைக்கும் அவனுடைய இடது கை, ஒரு கட்டத்தில் அவனுக்கு வில்லனாக மாறுகின்றது. இது தான் எங்களின் பீச்சாங்கை படத்தின் ஒரு வரி கதை. நிச்சயமாக என்னுடைய கதாபாத்திரம், எல்லா தரப்பு ரசிகர்களாலும், குறிப்பாக குழந்தைகளால் ரசிக்கப்படும்” என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் ‘பீச்சாங்கை படத்தின் கதாநாயகன் கார்த்திக்.⁠⁠⁠⁠

Back To Top
CLOSE
CLOSE