Flash Story
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.
மீண்டும் திரைக்கு வருகிறது ! அருண் விஜய்யின் ப்ளாக்பஸ்டர் திரைப்படம் “தடையறத் தாக்க”

நின்னு விளையாடும் நிகிஷா படேல்!


ஆல் ஏரியா, நம்ம ஏரியா!
நின்னு விளையாடும் நிகிஷா படேல்!

இங்கிலாந்தில் பிறந்து வளர்ந்த பிரிட்டிஷ் இந்திய அழகியான நிகிஷா படேல், இப்போது இந்திய சினிமாவில் தன் அழகாலும் திறமையாலும் அசத்திக்கொண்டிருக்கிறார். பல பி.பி.சி. ஷோக்களில் தன் திறமையால் அசத்திய நிகிஷா படேல், “புலி” என்கிற தெலுங்கு படத்தின் மூலமாக இந்திய சினிமா உலகில் அடியெடுத்து வைத்தார். தொடர்ந்து கன்னடத்திலும் நடித்தார்.

“தலைவன்” படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு வந்த இந்த இங்கிலாந்து அழகி, அடுத்தடுத்து வந்த படங்களில் மாறுபட்ட கதாபாத்திரங்களில் தன்னால் நடிக்க முடியும் என நிரூபித்தார். “என்னமோ ஏதோ” படத்தில் இளமை கொஞ்சும் அழகியாக, “கரையோரம்” படத்தில் பழிவாங்கும் கோபக்காரியாக நடித்தாலும் கவர்ந்திழுக்கும் ஆட்டம் போட்டு ரசிகர்களை கவர்ந்தார்.

நகுல் உடன் “நாரதன்” படத்தில் ஹோம்லியான அழகியாக நடித்து இளைஞர்களை இழுத்தார். இப்போது, இயக்குநர் பி.வாசுவின் மகனும், நடிகருமான சக்திவேல் வாசுவின் ” 7 நாட்கள்” படத்திலும் நடித்து வருகிறார். இப்படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது. மேலும் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகி வரும் “குண்டூர் டாக்கீஸ்-2” படத்திலும், “100 டிகிரி செல்சியஸ்” படத்திலும் நடித்து வருகிறார்.

அழகு, இளமை, அதிரடி, கிளாமர் என ஆல் ஏரியாவிலும் நின்னு விளையாடுகிறார், நிகிஷா படேல்.

Back To Top
CLOSE
CLOSE