Flash Story
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.
மீண்டும் திரைக்கு வருகிறது ! அருண் விஜய்யின் ப்ளாக்பஸ்டர் திரைப்படம் “தடையறத் தாக்க”

மிக மிக அவசரம்’ படத்தின் மோஷன் போஸ்டரை வெளியிட்டு வாழ்த்தினார் பாரதிராஜா!

சுரேஷ் காமாட்சி இயக்கத்தில் ஸ்ரீப்ரியங்கா நடித்துள்ள ‘மிக மிக அவசரம்’ படத்தின் மோஷன் போஸ்டரை இன்று ஒன் இந்தியாவின் ட்விட்டர் மற்றும் பேஸ்புக் பக்கங்களில் வெளியிட்டு வாழ்த்து தெரிவித்தார் இயக்குநர் பாரதிராஜா.

பெண் காவலர்களின் அவலங்களைச் சொல்லும் ‘மிக மிக அவசரம்’ படத்தின் முதல் தோற்ற போஸ்டர்கள் சில தினங்களுக்கு முன் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸால் ட்விட்டரில் வெளியிடப்பட்டு, பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில், அந்தப் படத்தின் முதல் அசையும் போஸ்டரை இன்று பாரதிராஜா அவரது அலுவலகத்தில் வைத்து வெளியிட்டார்.

ஒன் இந்தியா தமிழின் ட்விட்டர் மற்றும் பேஸ்புக் பக்கங்களில் இந்தப் போஸ்டரை அவர் வெளியிட்டார்.

தயாரிப்பாளராக ‘அமைதிப்படை 2’, ‘கங்காரு’ படங்களைத் தயாரித்த சுரேஷ் காமாட்சி, இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.

பாலபரணி ஒளிப்பதிவு செய்ய, ஜெகன் கதை வசனம் எழுதியுள்ள இந்தப் படத்தில் ஸ்ரீப்ரியங்கா, ஈ.ராமதாஸ், முத்துராமன், ஹரீஷ், ஆண்டவன் கட்டளை அரவிந்த், லிங்கா, சக்தி சரவணன், வெற்றிக்குமரன், வீ.கே.சுந்தர், சாமுண்டி சங்கர் (அறிமுகம்) ஆகியோர் நடித்துள்ளனர்.

இயக்குநரும் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளருமான சீமான் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

Back To Top
CLOSE
CLOSE