Flash Story
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.
மீண்டும் திரைக்கு வருகிறது ! அருண் விஜய்யின் ப்ளாக்பஸ்டர் திரைப்படம் “தடையறத் தாக்க”
‘கொம்புசீவி’ படப்பிடிப்பு நிறைவை முன்னிட்டு படக்குழுவினர் அனைவருக்கும் புதிய உடைகள், பிரியாணி வழங்கி கௌரவிப்பு
‘ஃபர்ஸ்ட் லைன்’ உமாபதி தயாரிப்பில் ஹும் படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா
பிடிஜி யுனிவர்சல் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் தயாரிக்கும் சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ் திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

‘உள்குத்து’ – வரும் மே 12 முதல்…


‘அட்டக்கத்தி’ திரைப்படத்திற்கு பிறகு தினேஷும் – நந்திதாவும் மீண்டும் இணைந்து நடித்து இருக்கும் திரைப்படம் – ‘உள்குத்து’ . அதிரடியான கதைக்களத்தில் உருவாகி இருக்கும் ‘உள்குத்து’ திரைப்படத்தை கார்த்திக் ராஜு இயக்கி இருக்கிறார். முழுக்க முழுக்க நாகர்கோவிலில் படமாக்கப்பட்டிருக்கும் உள்குத்து திரைப்படம் மூலம், ரசிகர்கள் இதுவரை கண்டிராத தினேஷை காண இருக்கிறார்கள் என்பதை உறுதியாகவே சொல்லலாம். ‘பி கே பிலிம் பேக்டரி’ ஜி விட்டல் குமாரின் தயாரிப்பில், வலுவான கருத்தை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டிருக்கும் ‘உள்குத்து’ திரைப்படம் வருகின்ற மே 12 ஆம் தேதி அன்று வெளியாக உள்ளது.
“தரமான திரைப்படங்களை தேர்ந்தெடுத்து, அதன் மூலம் வெற்றி கண்டு வருவது எங்களை அதிகளவில் ஊக்குவிக்கின்றது. இப்போதெல்லாம், ‘நல்ல தரமான கதையம்சம் நிறைந்த படங்களை அதிகளவில் திரையிடுங்கள்’ என்று தான் திரையரங்கு உரிமையாளர்களிடம் ரசிகர்கள் கேட்கின்றார்கள். அதை நிரூபிக்கும் வண்ணமாக எங்களின் உள்குத்து திரைப்படம் அதிகமான திரையரங்குகளில் வெளியிடப்படும். எங்களுக்கு உறுதுணையாய் இருந்து, தன்னுடைய பேராதரவை அளித்து வரும் அபினேஷ் இளங்கோவன் அவர்களுக்கு எங்களின் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கின்றோம்” என்று கூறுகிறார் தயாரிப்பாளரும், ‘பி கே பிலிம் பேக்டரி’ நிறுவனத்தின் நிறுவனருமான ஜி விட்டல் குமார்.

Back To Top
CLOSE
CLOSE