Flash Story
சூப்பர் நேச்சுரல் திரில்லரில் மிரட்ட வரும் தி பிளாக் பைபிள் – டீசர் வெளியீடு..!!
ஷிவதா, ரம்யா பாண்டியன் நடிக்கும் ‘கயிலன்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு
ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் – அஸ்வத் மாரிமுத்து – பிரதீப் ரங்கநாதன் கூட்டணி வழங்கிய ‘டிராகன்’ திரைப்படத்தின் நூறாவது நாள் வெற்றி விழா
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு

விஷ்ணு விஷால் – அமலா பால் நடித்து வரும் புதிய படத்திற்கு தலைப்பு ‘மின்மினி’

முண்டாசுப்பட்டி’ படத்திற்கு பிறகு இயக்குநர் ராமும், விஷாலும் மீண்டும் ஒரு புதிய படத்திற்காக இணைந்து பணியாற்றி வருகின்றனர். அமலா பால் கதாநாயகியாக நடிக்கும் இந்த படத்திற்கு தற்போது ‘மின்மினி’ என்று தலைப்பு வைத்துள்ளனர். ‘ஆக்ஸஸ் பிலிம் பேக்டரி’ சார்பில் ஜி டில்லிபாபு தயாரிக்கும் ‘மின்மினி’ படம், இசையமைப்பாளர் ஜிப்ரான், ஒளிப்பதிவாளர் பி வி ஷங்கர், படத்தொகுப்பாளர் சான் லோகேஷ், கலை இயக்குநர் ஏ கோபி ஆனந்த், ஸ்டண்ட் மாஸ்டர் விக்கி, ஆடை வடிவமைப்பாளர் ஏ கீர்த்தி வாசன் என பல திறமையான தொழில் நுட்ப கலைஞர்களை உள்ளடக்கி இருப்பது மேலும் சிறப்பு. ‘ ‘மின்மினி’ படத்தின் தயாரிப்பில் ‘ஸ்கைலார்க் மீடியா’ ஸ்ரீதர் இணைந்து பணியாற்றுவது குறிப்பிடத்தக்கது.

“எங்கள் மின்மினி படத்தின் தலைப்பை அறிவித்த அடுத்த கணமே ரசிகர்களிடம் இருந்து அமோக வரவேற்பு கிடைத்து வருகின்றது. மிக கவனமாக நாங்கள் தேர்ந்தெடுத்த ‘மின்மினி’ தலைப்பு, படத்திற்கு கன கச்சிதமாக பொருந்தியுள்ளது என்று ரசிகர்கள் படத்தை பார்த்த பின்பு கூறுவார்கள். சைக்கோ – திரில்லர் பாணியில் உருவாகி வரும் எங்கள் ‘மின்மினி’ படத்தின் டீசரை நாங்கள் விரைவில் வெளியிட முடிவு செய்துள்ளோம்” என்று உற்சாகமாக கூறுகிறார் இயக்குநர் ராம்.

Back To Top
CLOSE
CLOSE