Flash Story
ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் – அஸ்வத் மாரிமுத்து – பிரதீப் ரங்கநாதன் கூட்டணி வழங்கிய ‘டிராகன்’ திரைப்படத்தின் நூறாவது நாள் வெற்றி விழா
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.

நாயகன் ஆனார் கோலிசோட புகழ் ”கிஷோர்”

APK பிலிம்ஸ் மற்றும் சிநேகம் பிலிம்ஸ் பட நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் படத்திற்கு ” உறுதி கொள்” என்று பெயரிட்டுள்ளனர்.

இந்த படத்தில் கோலி சோடா படத்தில் நடித்த கிஷோர் நாயகனாக நடிக்கிறார்.

நாயகியாக மேகனா நடிக்கிறார். மற்றும் காளி வெங்கட், தென்னவன், மாஸ்டர் சிவசங்கர் கண்ணன் பொன்னையா, அகிலேஷ், சர்மிளா ஆகியோர் நடிக்கிறார்கள்.எழுதி இயக்கி இருப்பவர் R.அய்யனார்.

இவர் இயக்குனர் கிருஷ்ணாவிடம் நெடுஞ்சாலை படத்தில் உதவியாளராக பணியாற்றியவர்.

அவரிடம் படம் பற்றி கேட்டோம்…

பள்ளியில் படிக்கிற மாணவர்கள், மாணவிகளிடையே உருவாகும் காதல் தவறானது.. சரியான புரிதல் பக்குவம் இல்லாத வயதில் ஏற்படும் காதல் பருவ மாற்றம் ஏற்படுகிற கால கட்டத்தில் உருவாகும் இனக் கவர்ச்சி தானே தவிர அது காதல் இல்லை.காதலன் கூப்பிடுகிற இடத்துக்கெல்லாம் பெண்கள் போகக் கூடாது..அப்படிப்போனால் என்ன மாதிரியான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்பது தான் படத்தின் கதை.

படம் பார்க்கின்ற ஒவ்வொரு பெற்றோரும் பெண் பிள்ளைகளை எப்படியெல்லாம் கண்காணிக்க வேண்டும் என்கிற படிப்பினையை கற்றுக் கொள்வார்கள்.இதை காதல் மோதல் செண்டிமெண்ட் கலந்து உருவாக்கி இருக்கிறோம்.

விரைவில் படம் வெளியாக உள்ளது என்றார் இயக்குனர் R.அய்யனார்.

Back To Top
CLOSE
CLOSE