Flash Story
விஜய கணபதி பிக்சர்ஸ் சார்பில், பாண்டியன் பரசுராமன் தயாரிப்பில், சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள படம் “ப்ரீடம்”
சூப்பர் நேச்சுரல் திரில்லரில் மிரட்ட வரும் தி பிளாக் பைபிள் – டீசர் வெளியீடு..!!
ஷிவதா, ரம்யா பாண்டியன் நடிக்கும் ‘கயிலன்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு
ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் – அஸ்வத் மாரிமுத்து – பிரதீப் ரங்கநாதன் கூட்டணி வழங்கிய ‘டிராகன்’ திரைப்படத்தின் நூறாவது நாள் வெற்றி விழா
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.

நவம்பர் 3 முதல் பயத்தில் உறைய வைக்கும் “அவள்”

உறையவைக்கும் திகில் படங்கள் தமிழ் சினிமா ரசிகர்களை என்றுமே கவர்ந்துள்ளன. சித்தார்த் மற்றும் ஆண்ட்ரியா நடிப்பில், மிலிண்ட் ராவ் இயக்கத்தில் உருவாகியுள்ள பேய் படம் தான் ‘அவள்’. ‘Viacom18 Motion Pictures’ நிறுவனமும் ‘Etaki Entertainment’ நிறுவனமும் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர். இப்படத்தின் ட்ரைலர் வெளியான நாளிலிருந்தே இப்படத்திற்கான ஆவலும் பெரும் எதிர்பார்ப்பும் உருவாகியுள்ளது.

ட்ரைலரின் காட்சியமைப்பு, இசை ஆகியவை பார்ப்பவர்களை பயத்தில் உறைய வைக்கும் அளவிற்கு உள்ளதாக பார்த்தவர்களால் கூறப்படுகிறது . இப்படம் வரும் நவம்பர் 3 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பல படங்களை ரிலீஸ் செய்து ஹிட் மேல் ஹிட் கொடுத்து சமீபத்தில் ‘விக்ரம் வேதா’ என்ற மாபெரும் வெற்றி படத்தை தந்த ‘Trident Arts’ நிறுவனம் ‘அவள்’ படத்தை ரிலீஸ் செய்யவுள்ளது. இது குறித்து ‘Trident Arts’ ரவீந்திரன் அவர்கள் பேசுகையில், “உண்மையாகவே பயமுறுத்தி நடுங்கவைக்கும் படம் தான் ‘அவள்’. ஹாலிவுட் ஹாரர் படங்களுக்கு இணையாக ‘அவள்’ உள்ளது என உறுதியாக கூறலாம். பல விதமான கதைகளையும் கதாபாத்திரங்களையும் துணிச்சலாக ஏற்று நடித்து ஜொலிப்பவர் நடிகர் சித்தார்த். நவம்பர் 3 ஆம் தேதி ரிலீஸாகவுள்ள ‘அவள்’ தமிழ் சினிமா ரசிகர்களை திகிலில் உறைய வைப்பது நிச்சயம்” இப்படத்தின் திரைக்கதையை இயக்குனர் மிலிண்ட் ராவுடன் சேர்ந்து நடிகர் சித்தார்த்தும் எழுதியுள்ளார். நடிகர் அதுல் குல்கர்னி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கிரிஷ் இசையில் , ஷ்ரேயஸ் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவில் ‘அவள்’ உருவாகியுள்ளது.

Back To Top
CLOSE
CLOSE