Flash Story
ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் – அஸ்வத் மாரிமுத்து – பிரதீப் ரங்கநாதன் கூட்டணி வழங்கிய ‘டிராகன்’ திரைப்படத்தின் நூறாவது நாள் வெற்றி விழா
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.

பரபரப்பை ஏற்படுத்திய விஷ்னு மஞ்சுவின் குறள் 388 படத்தின் முதல் பார்வை

விஷ்னு மஞ்சு நடிக்கும் குறள் 388-ன் முதல் பார்வை நவம்பர் 23, புதன்கிழமை அன்று வெளியானது. படத்தின் கதாநாயகன் விஷ்ணு மஞ்சுவின் பிறந்த நாளை முன்னிட்டு, இப்படத்தின் முதல் பார்வை வெளியானது. ஒரே சமயத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகி வரும் இப்படித்தின் முதல் பார்வையை விஷ்ணு மஞ்சு ட்விட்டரில் வெளியிட்டார். பொலிட்டிக்கல் த்ரில்லராக உருவாகி வரும் இப்படத்தின் முதல் பார்வை சமூக வலைத் தளங்களில் வைரலாக பரவி வரும் நிலையில், முதல் பார்வையில் பல தலைவர்களின் படங்கள் இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

எம்.ஜி.ஆர், கருணாநிதி, ஜெயலலிதா, பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, ஸ்டாலின் உள்பட பல தேசிய கட்சிகளின் தலைவர்கள் படம் இடம் பெற்றிருந்தது. சமூக வலைதளங்களை கலக்கிய குறள் 388 படத்தை அறிமுக இயக்குனர் GS கார்த்திக் இயக்கியுள்ளார். படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் வரும் டிசம்பர் மாதத்தில் படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

தமிழில் இவன் வேற மாதிரி, வேலையில்லா பட்டதாரி போன்ற படங்களில் நடித்திருந்த சுரபி குறள் 388 – ன் கதாநாயகியாக நடிக்கிறார். தவிர பிரபல நட்சத்திரங்கள் பலரும் முக்கிய கதாபத்திரத்தில் நடிக்கின்றனர்.

தெலுங்கில் வோட்டர் என்ற தலைப்பில் வெளியாகும் குறள் 388, திரு வள்ளுவர் எழுதிய குறளில் 388 வது குறளின் கருத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது.

தேர்தலின் போது போலியான வாக்குறுதிகளை கொடுத்து தேர்தலுக்குப் பின் அதை மறந்து விடும் போலியான அரசியல் வாதிகளின் முகத்திரைகளை தோலுரிக்கும் கதையே குறள் 388 படத்தின் கதையாகும்.

விஷ்னு மஞ்சுவிற்கு குறள் 388, தமிழில் நல்ல ஒரு அறிமுகபடமாக அமையும் என்று படத்தின் இயக்குனர் கூறியுள்ளார்.

தமன் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

நடிகர்கள் :
விஷ்னு மஞ்சு, சுரபி, சம்பத் ராஜ், நாசர், பிரகதி, பெசன்ட் நகர் ரவி .

தொழில்நுட்பக் குழு:

எழுத்து, இயக்கம் – GS கார்த்திக்

தயாரிப்பாளர் – சுதீர் குமார் புடோட்டா

இணை தயாரிப்பாளர் – கிரண் தனமாலா

ஒளிப்பதிவு – ராஜேஷ் யாதவ்

இசை – SS தமன்

படத்தொகுப்பு – K L பிரவீன்

கலை இயக்கம் – கிரண் மன்னே

மக்கள் தொடர்பு – மெளனம் ரவி, ரியாஸ் கே அஹ்மது.

Back To Top
CLOSE
CLOSE