26.11.2017 ஞாயிற்றுக்கிழமை பஞ்சாங்கம்.
1193ம் ஆண்டு ஹேவிளம்பி வருஷம் கார்த்திகை மாதம் 10ம்தேதி.
சுக்லப்பட்சத்து (வளர்பிறை) இன்று முழுவதும் அஷ்டமி திதி.
அவிட்டம் நட்சத்திரம் காலை 11.38 மணி வரை பின் சதயம் நட்சத்திரம்.
மரண யோகம் காலை 11.38 மணி வரை பின் சித்த யோகம்.
ராகுகாலம்- மாலை 4.30 முதல் 6 மணி வரை.
எமகண்டம்- மதியம் 12 முதல் 1.30 மணி வரை.
நல்லநேரம்-; இல்லை.
சூலம்- மேற்கு.
ஜீவன்- 1/2: நேத்திரம்- 1;
கரிநாள்.
மேஷம்: ரகசியங்கள் தெரியும். தொழில் வளர்ச்சிக்கு உதவும். உங்கள் செயல்பாடு மற்றவர்களுக்கு அதிர்ச்சியை கொடுக்கும்.
ரிஷபம்: நண்பர்களுக்கு வேலையில் சேர உத்திரவாதம் கொடுப்பார்கள். புண்ணியம் பாராட்டுக்கள் கிடைக்கும்.
மிதுனம்: புதிய வாய்ப்புகள் தேடி விஐபிக்களை அணுகுவீர். அவர்கள் உதவியால் அறிய வாய்ப்பு அமையும். நன்றி செலுத்துவோம்.
கடகம்: திட்டமிட்டபடி செயல்கள் நடைபெறது ஏமாற்றம் உருவாகும். இன்று முழுவதும் சந்திராஷ்டமம். ஸ்ரீ பைரவர் தரிசனம் செய்யுங்கள்.
சிம்மம்: காரியத்தில் கண்ணாக இருப்போம். மனைவி வழி சொத்துக்கள் பங்கு முறையாக வந்து சேரும். மாமனார் உதவி கிடைக்கும்.
கன்னி: உறவினர்களிடம் கடன் கேட்டு செல்வோம். அவர்களும் உங்களை உபசரித்து கடன் கொடுப்பார்கள். பெரிய கஷ்டங்கள் விலகியது.
துலாம்: அதிர்ஷ்டத்தால் பல காரியம் அனுகூலமாக நடக்கும். உங்களுக்கு நம்பவே முடியாது. தீடிர் பணம் வரும்.
விருச்சிகம்: பயணம் இனிமை ஆதாயம் நிறைந்திருக்கும். நல்ல நட்புகளை சந்திப்போம். செல் நம்பர் பரிவர்த்தனை செய்யுங்கள்.
தனுசு: பேஸ்புக் போக் குருப் தொடங்கி பலரையும் கலாய்ப்போம். நண்பர்களை விரிவடைய செய்வீர்கள். சந்தோஷங்களை பகிர்வோம்.
மகரம்: பணம் சம்பாதிக்கும் வழிகளை கண்டுபிடிப்போம். நாமும் சம்பாதித்து பிறரையும் சம்பாதிக்க வைப்போம். தொழில் நிலை உயரும்.
கும்பம்: மனதை ஒருமுகப்படுத்துவோம். மந்திரம் வழிபாடு தியானம் யோகா மூலம் உடற் ஆரோக்கியம் பெருவோம். யோகா வகுப்பு ஆரம்பிக்கலாம்.
மீனம்: பரிபூரண அன்பு கனவரிடமிருந்து கிடைக்கும். உலகத்தையே வெல்லும் சக்தி உருவாகியது போல் உணர்வீர்கள்.
நாளை சந்திப்போம்.
Astro தெய்வீகம் மாரிமுத்து – 9842521669.