Flash Story
ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் – அஸ்வத் மாரிமுத்து – பிரதீப் ரங்கநாதன் கூட்டணி வழங்கிய ‘டிராகன்’ திரைப்படத்தின் நூறாவது நாள் வெற்றி விழா
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.

குறள் 146 படத்திற்காக M.S. சுப்புலக்ஷ்மி அவர்களின் இசைவாரிசான செல்வி. s. ஐஸ்வர்யா பாடினார்

டில்லி மற்றும் தாதா சாஹிப் குறும்பட விழாவில் வென்ற “ஈஷா” எனும் குறும்படம் தற்போது குறள் 146 என்ற பெயரில் திரைப்படமாகத் தயாராகி வருகிறது. முதல் கட்ட பணியாகப் பாடல் பதிவுடன் ஆரம்பமானது. உமா ஷங்கர் இயக்கும் இத்திரைப்படத்தில் குரு கல்யாண் இசையில் 5 பாடல்கள் இடம்பெறவுள்ளது. முதல் பாடல் பதிவு இன்று (Nov 24 2017) நடைபெற்றது. இதற்கான பாடல் வரிகள் சித்தர் பட்டினத்தார் அவரது வரிகளிலிருந்து தேர்வு செய்யப்பட்டுள்ளது. இப்பாடலைப் பாரத ரத்னா விருது பெற்ற இசை மேதை m.s. சுப்புலக்ஷ்மி அவர்களின் இசைவாரிசான செல்வி. s. ஐஸ்வர்யா பாடினார் அவருடன் இணைந்து இசை அமைப்பாளர் குரு கல்யாண் பாடினார்.

m.s. சுப்புலக்ஷ்மி அவர்களின் இசைவாரிசான செல்வி. s. ஐஸ்வர்யா திரைத்துறையில் பாடும் முதல் பாடல் இதுவாகும். “அன்னை எத்தனை எத்தனையோ” என்ற இந்தப் பாடல் ஸ்ட்ரிங் வாத்தியங்களைப் பிரதானமாக கொண்டு கையாளப்பட்டுள்ளது. சித்தரின் பாடல் வரிகளுக்கேற்ப இசையமைக்கப்பட்டுள்ளது. ஈஷா குறும்படத்தில் பணியாற்றிய ஒளிப்பதிவாளர் கிறிஸ்டோபர் ஜோசப் இத்திரைப்படத்திலும் ஒளிப்பதிவு செய்ய உள்ளார்.

உமா ஷங்கர்:
கலை இயக்குநர் உமா ஷங்கர் இத்திரைப்படத்தின் மூலம் இயக்குநர் ஆகிறார். கடந்த 17 வருடங்களாகத் திரைத்துறையில் உமா ஷங்கர் பல்வேறு துறைகளில் அனுபவம் பெற்றவர். இவருடைய முதல் குறும்படமான ஈஷா பல்வேறு குறும்பட விழாக்களில் வெற்றி பெற்று வருகிறது. (டில்லி ஷார்ட் பிலிம், தாதா சாஹிப் பால்கே பெஸ்டிவல், கேன்ஸ் பெஸ்டிவல்)

குரு கல்யாண்:
மாத்தியோசி திரைப்படம் மூலம் அறிமுகமானார் இசை அமைப்பாளர் குரு கல்யாண். கடந்த சில மாதங்களாகத் தனிப்பாடல்கள் அமைத்து இணையதளத்தில் வெளியிட்டு வருகிறார். ஈஷா எனும் குறும்படம் மூலம் உமா ஷங்கருடன் பணிபுரியும் வாய்ப்பைப் பெற்றார். அறியக் கதைக்களத்தை கொண்ட குறள்-146 எனும் இத்திரைப்படம் பல புதிய இசை முயற்சிகளைக் கையாள அறிய வாய்ப்பாக அமைந்துள்ளது என்றார்.

Back To Top
CLOSE
CLOSE