Flash Story
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.
மீண்டும் திரைக்கு வருகிறது ! அருண் விஜய்யின் ப்ளாக்பஸ்டர் திரைப்படம் “தடையறத் தாக்க”

நிவின் பாலியின் படப்பிடிப்பு தளத்திற்கு ‘சர்ப்ரைஸ் விசிட்’ அடித்த சூர்யா, ஜோதிகா !!!!

தென்னிந்தியாவின் இளம் ஹீரோக்களில் மிக வேகமாக வளர்ந்து வரும் ஹீரோக்களில் ஒருவர் நிவின் பாலி. மொழி எல்லைகளை தாண்டி அவரது ரசிகர்கள் எண்ணிக்கை கூடிக்கொண்டே போவது அனைவரும் அறிந்ததே. அவரது அடுத்த படமான ‘காயம்குளம் கொச்சுண்ணி’ படத்தை ’36 வயதினிலே’ புகழ் ரோஷன் ஆண்டிரூஸ் இயக்குகிறார். ‘பீரியாடிக் ஆக்ஷன்’ படமான இந்த படத்தை பெரும் பொருட்செலவில் ‘ஸ்ரீ கோகுலம் மூவிஸ்’ சார்பாக திரு. கோகுலம் கோபாலன் தயாரிக்கின்றார்.

மலையாள சினிமா வரலாற்றில் மிக அதிக பொருட்ச்செலவில் உருவாக்கப்படும் படம் இது தான் என கூறப்படுகிறது. இந்த படம் பிற மொழி ரசிகர்களிடையேயும் எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ளது. முதல் அறிவிப்பு வந்த நாளிலிருந்தே இப்படம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. கடந்த இரண்டு மாத காலமாக மங்களூரில் இப்படத்தின் படப்பிடிப்பு இடை விடாமல் நடந்து வருகின்றது. இப்படத்தை அடுத்த ஆண்டு கோடை விடுமுறை காலத்தில் பிரம்மாண்டமாக ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர் . வெளியாட்கள் யாரும் உள்ளே நுழையாதபடி இப்பட அணி கண்டிப்பான விதிகளை பின்பற்றிவருகின்றது. ஏனென்றால் இப்படத்திற்காக எழுப்பப்பட்டிருக்கும் பிரம்மாண்ட , பிரத்தியேக செட்களின் சிறப்பு அவ்வாறானது. சில நாட்களுக்கு முன்பு நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகா இப்படக்குழுவினர் யாரும் எதிர்பாராத நேரத்தில் இந்த படப்பிடிப்பு தளத்திற்கு சென்று அனைவரையும் சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளனர் . படப்பிடிப்பில் பரபரப்பாக இருந்த இயக்குனர் ரோஷன் ஆண்டிரூஸ், கதாநாயகன் நிவின் பாலி மற்றும் தயாரிப்பாளர் திரு. கோகுலம் கோபாலன் ஆகியோர் இவர்களின் “திடீர்” வருகையால் மகிழ்ச்சியானார்கள். வெகு நேரம் இந்த படப்பிடிப்பு செட்டில் இருந்த சூர்யாவும் ஜோதிகாவும் அங்கு எழுப்பப்பட்டிருக்கும் பிரம்மாண்ட செட்களையும், ரோஷன் ஆண்டிரூஸ் மற்றும் ‘காயம்குளம் கொச்சுண்ணி குழுவின் அசுர உழைப்பையும் மனதார பாராட்டினர்.

இது குறித்து இப்பட இயக்குனர் ரோஷன் ஆண்டிரூஸ் பேசுகையில், ” சூர்யா மற்றும் ஜோவின் இந்த ‘சர்ப்ரைஸ் விசிட்’ எங்கள் அனைவரையும் பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. சூர்யா மற்றும் ஜோதிகாவுடனான எனது நட்பு ’36 வயதினிலே’ படத்தின் மூலம் மேலும் வளர்ந்தது. பலமான, அழகான நட்பு எங்களுக்குள் உள்ளது. எனது பட பிடிப்பு தளத்திற்கு அவர்கள் இருவரும் வந்ததில் எனக்கு மிகுந்த சந்தோஷம். ‘காயம்குளம் கொச்சுண்ணி’ படத்தை பற்றிய தகவல்களை மிகுந்த ஆர்வத்துடன் சூர்யா என்னிடம் கேட்டறிந்தார். சூர்யா மற்றும் ஜோதிகா என் மேல் வைத்திருக்கும் அன்பின் வெளிப்பாடே அவர்களது இந்த ‘சர்ப்ரைஸ் விசிட் ‘. அவர்கள் இருவரும் எனக்கு எனது குடும்பம் போல் ” எனக் கூறினார்.

Back To Top
CLOSE
CLOSE