Flash Story
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.
மீண்டும் திரைக்கு வருகிறது ! அருண் விஜய்யின் ப்ளாக்பஸ்டர் திரைப்படம் “தடையறத் தாக்க”

‘சென்னை 2 சிங்கப்பூர்’ படத்தை கொண்டாடும் தமிழ் ரசிகர்கள்

ஒரு நல்ல நகைச்சுவை படத்தை சினிமா ரசிகர்கள் என்றுமே ஆதரவளித்து கொண்டாடியுள்ளனர். புதுமுக இயக்குனர் அப்பாஸ் அக்பரின் ‘சென்னை 2 சிங்கப்பூர்’ படத்திற்கு தமிழ் சினிமா ரசிகர்கள் பெரும் வரவேற்பை தந்துள்ளனர்.

இது குறித்து இப்படத்தின் இயக்குனர் அப்பாஸ் அக்பர் பேசுகையில் , “இப்படத்தின் ரிலீசுக்காக நீண்ட நாட்களாக காத்திருந்தேன். இந்த காத்திருப்பு காலம் மிக கடினமாக இருந்தது. அதிலிருந்து மீண்டு வந்து, படத்தை ரிலீஸ் செய்து, இது போன்ற அருமையான வரவேற்பை பெருவதையே எங்கள் கனவாகவும் பிரார்த்தனையாகவும் இருந்தது. எங்களது இந்த பிரார்த்தனை தற்பொழுது பலித்துள்ளது. ‘சென்னை2சிங்கப்பூர்’ படம் ‘ஹிட்’ என வணிக தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது என்னை பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதனை ஊர்ஜிதப்படுத்தும் வகையில் எங்கள் படத்திற்கான திரைகள் எண்ணிக்கை உயர்த்தப்பட்டுள்ளது. எண்களின் உழைப்பிற்கும் , நாங்கள் சந்தித்த தடைகளுக்கு மக்கள் தந்துள்ள அபார வரவேற்பு எங்களை சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளது”

‘சென்னை 2 சிங்கப்பூர்’ படம் ஜிப்ரான் இசையில் உருவாகியுள்ளது. இப்படத்தை ‘காமிக்புக் இந்தியா பிரைவேட் லிமிடெட் புரொடக்ஷன்’ நிறுவனம் தயாரித்துள்ளது.

Back To Top
CLOSE
CLOSE