Flash Story
சூப்பர் நேச்சுரல் திரில்லரில் மிரட்ட வரும் தி பிளாக் பைபிள் – டீசர் வெளியீடு..!!
ஷிவதா, ரம்யா பாண்டியன் நடிக்கும் ‘கயிலன்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு
ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் – அஸ்வத் மாரிமுத்து – பிரதீப் ரங்கநாதன் கூட்டணி வழங்கிய ‘டிராகன்’ திரைப்படத்தின் நூறாவது நாள் வெற்றி விழா
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு

காமெடி கலாட்டாவாக வரும் ‘அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா’

சினிமா விநியோகத்தில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ள ‘Auraa Cinemas’ , ‘அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா’ என்ற படத்தை தயாரித்துள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு நேற்று சென்னையில் நிறைவு பெற்றுள்ளது. ‘ராஜதந்திரம்’ புகழ் வீரா மற்றும் ‘குக்கூ’ புகழ் மாளவிகா நாயர் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

புதுமுகம் அவினாஷ் ஹரிஹரன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படம் நமது அரசியல் சூழலை நய்யாண்டித்தனமாக கையாளும் காமெடி படமாகும். சுதர்ஷன் ஒளிப்பதிவில் , எட்வர்ட் தயாரிப்பு டிசைனில், பிரவீன் ஆண்டனியின் படத்தொகுப்பில் , மாட்லி ப்ளூஸ் இசையில் ‘அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா’ உருவாகிவருகிறது.

நடிகர்கள் பசுபதி, ரோபோ ஷங்கர், ‘மொட்ட’ ராஜேந்திரன் மற்றும் பல முன்னணி நடிகர்கள் இந்த படத்தில் முக்கிய துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

”ஒரு படத்தை கொடுத்த அவகாசத்தில் , கொடுத்த பட்ஜெட்டில் முடித்து கொடுப்பதே ஒரு இயக்குனரின் முதல் சவாலாகும். இதற்கு நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் ஒத்துழைப்பு மிக அவசியமாகும். என் மீது பெரிதளவு நம்பிக்கை வைத்து இவ்வளவு பெரிய பொறுப்பை அளித்த தயாரிப்பாளர் Auraa Cinemas காவியா மகேஷ் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.இந்த படம் நிச்சயம் ஒரு காமெடி கலாட்டாவாக இருக்கும் என உறுதியாக கூறுவேன் ” என இயக்குனர் அவினாஷ் ஹரிஹரன் நம்பிக்கையுடன் கூறினார் .

Back To Top
CLOSE
CLOSE