Flash Story
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.
மீண்டும் திரைக்கு வருகிறது ! அருண் விஜய்யின் ப்ளாக்பஸ்டர் திரைப்படம் “தடையறத் தாக்க”

ஆதி நடிக்கும் ஆர் எக்ஸ் 100.

மிருகம் படத்தின் மூலம் அறிமுகமாகி தொடர்ந்து ஈரம், அரவான், மரகத நாணயம் என் வெற்றி படங்களை தொடர்ந்து வழங்கிய ஆதி சமீப காலமாக தெலுங்கு திரை உலகில் தொடர் வெற்றி மூலமாக ஒரு முக்கிய அந்தஸ்தை அடைந்து இருக்கிறார். தமிழ் , தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் இவர் படங்கள் வெற்றி பெறுவதால் இந்த இரு மாநிலங்களிலும் இவரது மார்க்கெட் உயர்ந்து கொண்டே போகிறது.

சமீபத்தில் தெலுங்கில் வெளி வந்து மாபெரும் வெற்றி பெற்ற “ஆர் எக்ஸ் 100″ என்ற படத்தின் தமிழ் பதிப்பில் கதாநாயகனாக நடிக்க தற்போது ஆதி நடிக்க உள்ளார். இளைஞர்களை பெருமளவில் கவர்ந்த இந்த படம் தெலுங்கு திரை உலகில் பல்வேறு சாதனைகளை முறியடித்து இருக்கிறது என்பதுக் குறிப்பிடத்தக்கது.இந்த படத்தின் தமிழாக்கம் உரிமையை பலத்த போட்டிகிடையே பிரபல திரைப்பட விநியோக நிறுவனமும், அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா, அதர்வா ஹன்சிகா இணையாக நடிக்கும் 100 ஆகிய படங்களை தயாரிக்கும் நிறுவனமுமான ஆரா சினிமாஸ் நிறுவனர் மகேஷ் கோவிந்தராஜ் பெற்று உள்ளார்.
” விநியோக துறையில் ஒரு நம்பகத்தன்மையான நிறுவனம் என்று பெயர் பெற்றாலும், திரைப்பட தயாரிப்பில் எனக்கு மிகுந்த ஈடுபாடு உண்டு. ராஜ தந்திரம் வீரா நடிக்கும் “அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா, அதர்வா – ஹன்சிகா நடிப்பில் சாம் அன்டன் இயக்கும் 100 ஆகிய இரு படங்களும் படப்பிடிப்பு முடிந்து வெளிவரும் தருவாயில் உள்ளது. நடிகர் ஆதியுடன் எனக்கு நீண்ட நாட்களாக பழக்கம். நாங்கள் இருவரும் இணைந்து பணியாற்ற வேண்டும் என்கிற ஆசை எங்கள் இருவருக்கும் இருந்தது. ஆனால் அதற்கேற்ற கதை கிடைக்கவில்லை.இதே நேரத்தில் தெலுங்கில் ஆர் எக்ஸ் 100 என்ற படம் வெளி வந்து பல சாதனைகளை முறியடித்து ஓடிக் கொண்டு இருந்தது. ஆதி என்னை அழைத்து படம் பார்க்க சொன்னார்.எங்கள் இருவருக்கும் படம் மிகவும் பிடித்து இருந்தது. தமிழ் உரிமை வாங்க ஏகப்பட்ட போட்டி. தீவிர முயற்சியுடன் இந்தப் படத்தின் உரிமையை நான் பெற்றுக் கொண்டேன். இளைய சமுதாயத்தினருக்கு மிகவும் பிடிக்கும் கதை அம்சம் கொண்டு உள்ள படம் இது. ரசிகர்களின் நாடி துடிப்பை அறிந்த ஒருவர் தான் இந்த படத்தை இயக்க வேண்டும். அதற்கான தேடல் நடை பெற்றுக் கொண்டு இருக்கிறது. இந்த படத்தின் கதாநாயகி பாத்திரம் மிகவும் சவாலானது. கதாநாயகி தேர்வு கூட நடைபெறவுள்ளது.இந்த மாத இறுதிக்குள் மற்ற தொழில் நுட்ப கலைஞர்கள், மற்ற நடிக நடிகையர் தேர்வு நடைபெறும். செப்டெம்பர் மாதம் இறுதியில் படப்பிடிப்பு துவங்க உள்ளது.. அதிவிரைவில் உருவாகி ரசிகர்களின் உள்ளத்தில் சீறி பாயும் ” ஆர் எக்ஸ் 100″ ஏன்று உற்சாகத்துடன் சொன்னார் ஆரா சினிமாஸ் மகேஷ் கோவிந்தராஜ்.

Back To Top
CLOSE
CLOSE