Flash Story
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.
மீண்டும் திரைக்கு வருகிறது ! அருண் விஜய்யின் ப்ளாக்பஸ்டர் திரைப்படம் “தடையறத் தாக்க”

ஹன்சிகாவுக்கு இளவரசி பட்டம் வழங்கிய மஹா திரைப்படக்குழு


தமிழ் திரை உலகின் ரசிகர்களின் இதயத்தில் நீங்கா இடம் பெற்று வீற்று இருக்கும் ஹன்சிகாவின் ரசிகர்களுக்கு ஒரு நற்செய்தி. அறிமுக இயக்குனர் U R ஜமீல் இயக்கத்தில்,ஜிப்ரான் இசை அமைப்பில், etcetra entertainment என்கிற நிறுவனத்தின் சார்பில் மதியழகன் தயாரிக்கும் புதிய படத்தின் தலைப்பு அறிவிக்கப்பட்டு உள்ளது. “மஹா”என்று தலைப்பிடப்பட்டு இருக்கும் இந்த படம் ஒரு க்ரைம் திரில்லர் படமாகும். ஒரு மாஸ் கதாநாயகனுக்குரிய தலைப்பு இது என்று அனைவரும் பாராட்டுவதாக கூறிய தயாரிப்பாளர் மதியழகன் மேலும் கூறியதாவது ” ஹன்சிகா தனது உச்ச நிலையில் இருந்து இறங்காமல் அங்கேயே நிலைத்து நிற்கும் திறன் படைத்தவர். அவருடைய அபரிதமான அழகும் தனிப்பட்ட முறையில் அவர் செய்து வரும் தொண்டுகளும் , ரசிகர்கள் மனதில் அவருக்கு நிலையான இடத்தை தந்து இருக்கிறது. அவருடைய இமேஜை மனதில் வைத்து , அவருடன் இரண்டு படங்கள் இணை இயக்குனராக பணியாற்றி உள்ள இயக்குனர் U R ஜமீல் கதையை அவரை வைத்து எழுதி இருக்கிறார். இந்த கதை hollywood படங்களுக்கு சவால் விடும் திறன் படைத்தது. அவருடைய கதைக்கு பொருத்தமானவர் ஹன்சிகா தான் என்று ஆணித்தரமாக நம்பி இருக்கிறார்.ஒரு தயாரிப்பாளராக அவருடைய கருத்தை நான் ஆமோதிக்கிறேன்.என் நிறுவனத்தின் சார்பில் தரமான படங்கள் மட்டுமே தருவது என்பதில் நான் தீர்மானமாக இருக்கிறேன். அதற்கு உகந்ததாக “மஹா” இருக்கும் என்பதில் எனக்கு எள்ளளவும் சந்தேகம் இல்லை. தமிழ் திரை ரசிகர்களுக்கு இந்த திரைப் படம் மறக்க முடியாத படமாக இருக்கும் என்பதிலும், இந்த படத்துக்கு பிறகு ஹன்சிகா ஒரு இளவரசியாக தமிழ் திரை உலகில் நீடிப்பார் என நம்புகிறேன்.”மஹா”திரைப்படம் மூலம ஹன்சிகாவுக்கு இளவரசி என்ற பட்டம் வழுங்குவதில் எங்கள் படக் குழுவினருக்கு பெரிய பெருமை” என்கிறார் தயாரிப்பாளர் மதியழகன்.

Back To Top
CLOSE
CLOSE