Flash Story
CYNTHIA PRODUCTION தயாரிப்பில் இசை ஞானி இளையராஜா பாடல்களை எழுதி இசையமைக்க ஸ்ரீகாந்த் – சிந்தியா லூர்டே ஜோடியாக நடிக்கும் படம் ‘தினசரி’
உழவர் பெருமக்களை கௌரவப்படுத்திய நடிகர் கார்த்தி !!
அகத்தியா கேம் மற்றும் இரண்டாவது சிங்கிள் வெளியீட்டு புகைப்படங்கள்
அகத்தியா கேம் மற்றும் இரண்டாவது சிங்கிள் வெளியீட்டு நிகழ்வு, கொண்டாட்டம் !!
“பாட்ஷா” விரைவில் டால்பி 4K இல் அட்மாஸ் ஒலியுடன்.
பிரபுதேவாஸ் வைப் ( Prabhudeva’s Vibe) டிக்கெட் அறிமுக விழா
“மெட்ராஸ்காரன்” திரைப்பட டிரெய்லர் வெளியீட்டு விழா.
கலகலப்பான ரோம் காம் திரைப்படமாக உருவாகும், “யோலோ”
” கண்நீரா ” எமோஷன்ஸ் நிறைந்த காதல் கதை

கே.வி.என். புரொடக்ஷன்ஸ் & தெஸ்பியன் ஃபிலிம்ஸ் தயாரிக்கும் படத்தில் இணையும் மஞ்சும்மல் பாய்ஸ் சிதம்பரம் & ஆவேஷம் ஜித்து மாதவன்..!!

திரு. வெங்கட் கே நாராயணா சார்பில் கே.வி.என். புரொடக்ஷன்ஸ் நிறுவனம் திருமதி. சைலஜா தேசாய் ஃபென்-இன் தெஸ்பியன் ஃபிலிம்ஸ் உடன் கூட்டணி அமைப்பதை உறுதிப்படுத்தி இருக்கிறது. அதன்படி இரு நிறுவனங்கள் இணைந்து மலையாள திரையுலகின் இரண்டு இளம் இயக்குநர்கள் இணையும் புதிய படத்தை உருவாக்க இருக்கின்றன.

இந்தப் படத்தை மஞ்சும்மல் பாய்ஸ் படத்தின் இயக்குநர் சிதம்பரம் இயக்க, ஆவேஷம் படத்தின் இயக்குநர் ஜித்து மாதவன் எழுதுகிறார். இந்தப் படத்தில் திரைத்துறையில் முன்னணி தொழில்நுட்ப கலைஞர்கள்: ஷைஜூ காலெத் ஒளிப்பதிவு, சுஷின் ஷியாம் இசை மற்றும் விவேக் ஹர்ஷன் படத்தொகுப்பு செய்கின்றனர்.

படம் குறித்து கே.வி.என். புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் திரு. வெங்கட் கே நாராயணா பேசும் போது, “எங்கள் குறிக்கோள் எப்போதும், பல மொழிகளில் திரைப்பட அனுபவத்தை புதுப்பிப்பதாகவே இருந்துள்ளது. அந்த வகையில் இந்தப் படம் மூலம் நாங்கள் மலையாள திரையுலகில் களமிறங்குகிறோம். ரசிகர்கள் எங்களிடம் எதிர்பார்க்கும் பிரமாண்டம் மற்றும் சிறப்பான கதையம்சம் இந்தப் படத்தில் இருக்கும். மிகவும் தலைசிறந்த குழுவுடன் இணைவதால், அந்த விஷயத்தில் நாங்கள் அதிக நம்பிக்கை கொண்டிருக்கிறோம்,” என்று தெரிவித்தார்.

இயக்குநர் சிதம்பரம் பேசும் போது, “கதைகளை சொல்லும் என் ஆசையை பகிர்ந்து கொள்ளும் குழுவுடன் பணியாற்ற இருப்பது மிகுந்த ஆர்வத்தை தூண்டுகிறது. இந்த கூட்டணியை நான் அதிகம் எதிர்பார்க்கிறேன், இந்த குறிக்கோளை நிஜமாக்கும் தருணத்திற்காக காத்திருக்க முடியவில்லை,” என்று கூறினார்.

எழுத்தாளர் ஜித்து மாதவன் கூறும் போது, “இந்தக் கதை என் மனதுக்கு மிகவும் நெருக்கமான ஒன்று. தலைசிறந்த குழுவுடன் இணைந்து, சிறப்பான ஒன்றை உருவாக்குவோம் என்பதில் நான் அதிக நம்பிக்கை கொண்டிருக்கிறேன்,” என்றார்.

2025 ஆம் ஆண்டு துவங்கும் இந்த வேளையில் கே.வி.என். நிறுவனம் கன்னட மொழியில் யாஷ் நடிக்கும் டாக்சிக், தமிழில் விஜய்யின் தளபதி 69, இந்தி மொழியில் பிரியதர்ஷன் இயக்கும் திரில்லர் படங்களுடன் தற்போது மலையாள துறையிலும் கால்பதிக்கிறார்கள். இதன் மூலம் கே.வி.என். தயாரிப்பு நிறுவனம் பலம் கூடுவதோடு, பொழுதுபோக்கு துறையில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாகவும் மாறி இருக்கிறது.

Back To Top
CLOSE
CLOSE