Flash Story
CYNTHIA PRODUCTION தயாரிப்பில் இசை ஞானி இளையராஜா பாடல்களை எழுதி இசையமைக்க ஸ்ரீகாந்த் – சிந்தியா லூர்டே ஜோடியாக நடிக்கும் படம் ‘தினசரி’
உழவர் பெருமக்களை கௌரவப்படுத்திய நடிகர் கார்த்தி !!
அகத்தியா கேம் மற்றும் இரண்டாவது சிங்கிள் வெளியீட்டு புகைப்படங்கள்
அகத்தியா கேம் மற்றும் இரண்டாவது சிங்கிள் வெளியீட்டு நிகழ்வு, கொண்டாட்டம் !!
“பாட்ஷா” விரைவில் டால்பி 4K இல் அட்மாஸ் ஒலியுடன்.
பிரபுதேவாஸ் வைப் ( Prabhudeva’s Vibe) டிக்கெட் அறிமுக விழா
“மெட்ராஸ்காரன்” திரைப்பட டிரெய்லர் வெளியீட்டு விழா.
கலகலப்பான ரோம் காம் திரைப்படமாக உருவாகும், “யோலோ”
” கண்நீரா ” எமோஷன்ஸ் நிறைந்த காதல் கதை

தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கமும் TENTKOTTA நிறுவனமும் இணைந்து இந்தியாவிலும் OTT தளம் தொடங்க இருக்கிறது.


அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கமும் (Tamil Film Active Producer Association), வெளிநாடுகளில் OTT தளத்தில் புகழ் பெற்ற TENTKOTTA நிறுவனமும் இணைந்து இந்த அறிவிப்பை வெளியிடுவதில் மகிழ்ச்சி கொள்கிறோம்.
2020-ல் ஆரம்பிக்கப்பட்ட தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் (TFAPA) இன்று 300-க்கும் மேற்பட்ட உறுப்பினர்களுடன் மிகவும் சிறப்பாக நடந்து வருகிறது. தனது உறுப்பினர்களுக்கு தேவைப்படும் அனைத்து சேவைகளையும் திறம்பட செய்து வருகிறது. TFAPA-வின் TAMIL CINEMA TRADE GUIDE தமிழ் சினிமாவில் இயங்கும் அனைவருக்கும் பயனுள்ள வகையில் ஒவ்வொரு மாதமும் கொண்டு வரப்படுகிறது.
வெளிநாடுகளில் புகழ் பெற்ற TENTKOTTA OTT தளம் ஜனவரி 2025 முதல் இந்தியாவிலும் தனது சேவையை தொடங்க இருக்கிறது.
TFAPA-ம், TENTKOTTA OTT தளமும் இணைத்து, TFAPA-வின் உறுப்பினர்களுக்கு பயன் தரும் வகையில், ஒரு ஒப்பந்தத்தை தற்போது செய்து உள்ளனர்.
இருவரும் செய்து கொண்ட ஒப்பந்தப்படி, TFAPA பரிந்துரை செய்யும், அவர்களின் உறுப்பினர்களின் புதிய திரைப்படங்களை, திரைப்படங்களின் தகுதியைப் பொறுத்து TENTKOTTA OTT நிறுவனம் மொத்தமாக விலை கொடுத்தோ (Outright price for 10 years) அல்லது குறைந்தபட்ச உத்தரவாதமாக ஒரு விலை கொடுத்தோ (MG Amount) அல்லது வருவாயில் பங்கு கொடுத்தோ (Revenue Share), TFAPA-வின் உறுப்பினர்களின் படங்களை TENTKOTTA OTT வாங்கும்.
TFAPA பரிந்துரைக்கும் அனைத்து புதிய திரைப்படங்களையும் மேற்குறிப்பிட்ட ஏதாவது ஒரு முறையில் (Outright or MG or Revenue Share basis) TENTKOTTA OTT நிறுவனம் வாங்கும் என்று உறுதி அளித்துள்ளது. இதன் மூலம், TFAPA-வின் உறுப்பினர்களின் புதிய திரைப்படங்கள், TFAPA பரிந்துரைத்தால் கண்டிப்பாக TENTKOTTA OTT தளத்தில் வெளியாகும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
பரிந்துரைக்கப்படும் புதிய திரைப்படங்களை தகுதியின் (Merit)அடிப்படையில், எந்த முறையில் வாங்கப்படும் (Outright or MG or Revenue share) என்கிற முடிவை TENTKOTTA OTT எடுக்கும். அந்த முடிவை ஏற்றுக்கொள்வதும், மறுப்பதும் தயாரிப்பாளரின் உரிமை. அதில் TFAPA நிர்வாகம் தலையிடாது.

தனது உறுப்பினர்களின் புதிய திரைப்படங்களை TENTKOTTA OTT நிறுவனத்திற்கு பரிந்துரைப்பதுடன், TFAPA-வின் செயல் முடியும்.
TFAPA மற்றும் TENTKOTTA OTT-க்கும் மத்தியில் ஏற்பட்டுள்ள இந்த ஒப்பந்தம் 5 வருட காலத்திற்கு செயல்பாட்டில் இருக்கும். TENTKOTTA OTT தனது தளத்தில் வெளியிடும் TFAPA தயாரிப்பாளர்களின் புதிய திரைப்படங்களை சிறப்பான முறையில் விளம்பரம் செய்து அவை ஒவ்வொன்றுக்குமான வெற்றியை TENTKOTTA OTTA தளம் ஏற்படுத்தி தரும்.
வாரத்திற்கு ஒரு புதிய திரைப்படம் என்கிற முறையில் TFAPA, 52 புதிய திரைப்படங்களை TENTKOTTA OTT-க்கு பரிந்துரைக்கும். இந்த 52 திரைப்படங்களையும் பரிசீலித்து ஏதாவது ஒரு வியாபார முறையில் தயாரிப்பாளரிடம் TENTKOTTA OTT நேரடியாக பேசி, விலை முடிவு செய்து, அவர்களுடன் ஒப்பந்தம் செய்யும்.
திரையரங்கில் சமீப மூன்று மாத காலத்தில் வெளியான திரைப்படங்களை மட்டுமே TFAPA பரிந்துரைக்கும்.
உறுப்பினர் அல்லாதவர்களின் திரைப்படங்களை TENTKOTT OTT-க்கு TFAPA பரிந்துரைக்காது. இதற்கு எந்த கட்டணமும் இல்லை. இது TFAPA-வின் ஒரு நேரடி சேவை.
இந்த ஒப்பந்தம் குறித்து, தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கத்தின் செயல் தலைவர் திரு. T.G. தியாகராஜன் தன் மகிழ்ச்சியை தெரியப்படுத்தி, இந்த ஒப்பந்தம் மூலம் ஒவ்வொரு வருடமும், வாரம் ஒரு உறுப்பினர் படம் என்கிற முறையில் 52 உறுப்பினர்கள் பயன் பெற முடியும், அதுவும் குறிப்பாக சிறு மற்றும் நடுத்தர பட்ஜெட் திரைப்பட தயாரிப்பாளர்கள் என்று குறிப்பிட்டார்.
TENTKOTTA OTT-வின் இயக்குனர் திரு. முருகேசன் கணேசன் இந்த ஒப்பந்தம் தங்களது OTT பயணத்தில் ஒரு புதிய தொடக்கமாக இருக்கும். தமிழ் சினிமாவின் முக்கிய சங்கமான தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் (TFAPA) பரிந்துரைக்கும் புதிய திரைப்படங்களை எங்களின் TENTKOTTA தளம் மூலம் வெளியிடுவதில் பெரிதும் மகிழ்ச்சி கொள்கிறோம். இந்த ஒப்பந்தம் மூலம் இரு தரப்பினருக்கும் பெரிதும் பலன் இருக்கும் என்று நம்புகிறோம்.
TENTKOTTA OTT தளம் வெகு விரைவில் இந்தியாவில் தனது சேவையை தொடங்க இருக்கிறது. TFAPA தனது தயாரிப்பாளர் உறுப்பினர்களின் திரைப்படங்களை இந்த புத்தாண்டு முதல் TENTKOTTA OTT தளத்திற்கு பரிந்துரைக்க ஆரம்பிக்கும்.
TFAPA உறுப்பினர்கள் அவர்களுக்கு தனியாக கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்துடன் தங்களின் திரைப்படங்களை பரிந்துரைக்க TFAPA-வை அணுகலாம்.

Back To Top
CLOSE
CLOSE