தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகரான சிவகார்த்திகேயன் புதிய வீடு ஒன்றை சென்னை கே.கே. நகரில் கட்டி வந்தார், முழுவதும் கட்டி முடிக்கப் பட்ட அந்த வீட்டில் இன்று கிரகப்பிரவேசம் நடத்தி குடிபோயிருக்கிறார். தமிழ் சினிமாவில் ஒருசிலருக்கு மட்டும் அழைப்பு விடுத்த சிவா, இன்று வீடு குடிபுகுந்ததைக் கேள்விப்பட்ட சினிமாத் துறையுலகினர் பலரும் வாழ்த்துகளைத் தொடர்ந்து தெரிவித்த வண்ணம் உள்ளனர். இயக்குனர் பாண்டிராஜின் மெரினா படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமான சிவகார்த்திகேயன், தொடர்ந்து […]
ஆகஸ்ட் 7 முதல் மிஷன் இம்பாசிப்பில்: முரட்டு தேசம்
டாம் க்ருஸ் நடிக்கும் ‘ மிஷன் இம்பாசிப்பில்: முரட்டு தேசம் (Mission: Impossible Rogue Nation) படத்தின் இரண்டாவது டிரைலர் வெளியிட்டுள்ளது. Paramount Pictures நிறுவனம். இந்தியாவில் வரும் ஆகஸ்ட் மாதம் 7 ஆம் தேதி வெளியாகும் இப்படம் மிஷன் இம்பாசிப்பில்: முரட்டு தேசம் என்று தமிழில் வெளியாகவுள்ளது. IMFஐ அழிக்க திட்டமிடும் ஒரு சமூக விரோத கும்பலை அழிக்க முற்படுகின்றனர் ஈத்தன் மற்றும் அவரது அணியினர். தங்களுக்கு மிக கடினமான இந்த போட்டியில் எப்படி வெல்கிறார்கள் […]
உலக சினிமாவை வியக்க வைக்க போகும் “பாகுபலி”
எப்போதும் ஒரு சில படங்கள் வரும்போது இந்த படம் உலக சினிமாவுக்கு சவால் விடும் என்று சொல்வார்கள் ஆமாம் இப்படி பல தமிழ் மட்டும் இல்ல பிற மொழி படங்களுக்கும் நாம் சொல்லி இருக்கோம் ஆனால் இப்போது நாம் மார் தட்டி கொள்ளலாம் ஆம் உலக சினிமாவை திரும்ப பார்க்க போற படம் “பாகுபலி”. இதுவரை ஆங்கில படங்களை உதாரணம் காண்பித்த நாம் இனி ஆங்கில படம் எடுப்போர் பாகுபலி போல் ஒரு படம் எடுக்க வேண்டும் […]
சர்வதேச மிதிவண்டி போட்டியில் ஆர்யா
கன்னியர் நெஞ்சில் உயிரோட்டமாய் இருந்து, அதிரடி சாகச விளம்பரங்களில் தன்னை ராஜாவாய் காட்சிப்படுத்திக் கொண்டவர் ஆர்யா. மிதிவண்டி ஒட்டுதலை சில வருடங்களாகவே தீவிரமாய் மேற்கொண்டு வந்த ஆர்யா. தற்போது தனது தீரா பயிற்சி தந்துள்ள உத்வேகம் மற்றும் நம்பிக்கையின் விளைவாய் சர்வதேச பந்தயங்களில் பங்கேற்க உள்ளார். அதன் முதற்படியாக தனது சர்வதேச மிதிவண்டி பந்தய அணி ‘ரைடர்ஸ்’ லோகோவை வெளியிட்டுள்ளார். தனது முதல் சர்வேதேச போட்டியினைப் பற்றி குறிப்பிடுகையில் ஆடவரும் காதல் கொள்ளும் ஆர்யா கூறுகையில் “வாடேர்ன்ருன்டன் […]
ஈராஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் புதிய 2 தமிழ்த் திரைப்படங்கள்..!
இந்தியத் திரைப்பட தயாரிப்பு நிறுவனங்களில் முன்னணியில் இருக்கும் ஈராஸ் இண்டர்நேஷனல் நிறுவனம், புதிதாக இரண்டு தமிழ்த் திரைப்படங்களைத் தயாரிக்கிறது. இம்முறை ஆர்.வி.பிலிம்ஸுடன் இணைந்து தயாரிப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் இந்நிறுவனம், ‘பிறை தேடிய நாட்கள்’ மற்றும் ‘எங்கிட்ட மோதாதே’ என்ற இரண்டு புதிய தமிழ்ப் படங்களைத் தயாரித்து வருகிறது. 2013-ம் ஆண்டு இறுதியில் வெளியாகி பெரும் பாராட்டினைப் பெற்ற ‘விடியும் முன்’ திரைப்படத்திற்கு திரைக்கதை, வசனம் எழுதி அதில் துணை இயக்குநராகவும் பணியாற்றிய ஆபிரஹாம் பிரபு, ‘பிறை தேடிய […]
காத்திருப்பவர்களைப் பற்றிய ‘காத்திருப்போர் பட்டியல்’ திரைப்படம்
லேடி ட்ரீம் சினிமாஸ் சார்பில் தயாரிப்பாளர் பைஜா டாமின் தயாரிப்பில் உருவாகியிருக்கும் புதிய திரைப்படம் ‘காத்திருப்போர் பட்டியல்’. இவர் ஏற்கனவே பரத் நடிப்பில் உருவான ‘யுவன் யுவதி’ என்ற திரைப்படத்தை தயாரித்திருக்கிறார். இந்தப் படத்தில் ‘சென்னையில் ஒரு நாள்’ திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்த சச்சின் கதாநாயகனாகவும், ‘அட்டகத்தி’, ‘எதிர் நீச்சல்’, ‘முண்டாசுபட்டி’ போன்ற வெற்றி படங்களில் நடித்த நந்திதா கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். இவர்கள் தவிர அருள்தாஸ், அப்புக்குட்டி, சென்ட்ராயன், மனோபாலா, மயில்சாமி, ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், சித்ரா […]
கோரிப்பாளையம் நாயகன் ஹரிஸ் காதல் கல்யாணம்
புகைப்படம், மாத்தியோசி, கோரிப்பாளையம், முத்துக்குமுத்தாக, வெத்துவேட்டு ஆகிய படங்களின் நாயகனும்… புன்னகைமன்னன், சிந்துபைரவி, பாட்ஷா, அண்ணாமலை, காதல் மன்னன் போன்ற மிக முக்கிய படங்களின் எடிட்டரான குமார்(லேட்)- கீதாஞ்சலி ஆகியோரின் மகனுமான ஹரீஷ் திருமணம் இன்று குருவாயூரில் நடைபெறுகிறது. மணமகள் குமார்-டாக்டர் சாந்திதேவி ஆகியோரின் மகளான டாக்டர் அபிநயாவை மணக்கிறார். குருவாயூர் கோவிலில் வைத்து ஹரீஷ் அபிநயா கழுத்தில் தாலிக்கட்டினார்.
ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்த விஜய்
தமிழ் சினிமாவின் மாஸ் ஹிரோக்களின் லிஸ்டில் எப்போதுமே முதல் இடத்தில் இருப்பவர் இளைய தளபதி விஜய். துப்பாக்கி படத்தில் கூகுள் கூகுள் பாடல் பாடி அனைவரையும் கவர்ந்தார் அதனை தொடர்ந்து கத்தி படத்தில் செல்ஃபிபுள்ள பாடலையும் பாடி அதையும் சூப்பர் ஹிட்டாக்கினார். தற்போது இயக்குநர் சிம்புதேவன் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகும் புலி படத்தில் விஜய் நடித்துக் கொண்டிருக்கிறார் இவருடன் பிரபு, ஹன்சிகா, ஸ்ருதிஹாசன், ஸ்ரீதேவி, சுதீப் போன்ற பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துக் கொண்டிருக்கிறார்கள் ஏற்கனவே துப்பாக்கி, […]
‘ஜீவா’ ரௌடியாக நடிக்கும் ‘திருநாள்’ படப்பிடிப்பில் நிஜ ரௌடிகள் மோதல்
கோ. முகமூடி, ரௌத்ரம், நண்பன், யான் படங்களுக்குப் பிறகு ஜீவா நடிக்கும் படம் ‘திருநாள்’. இந்தப் படத்தில் ‘ஜீவா’ ரௌடியாக நடிக்கிறார். ரௌடி கேரக்டருக்காக செம்பட்டை முடியும், கறுத்த முகமுமாக மாற, 60 நாட்கள் வெயிலில் நடந்தும், ஓடியும் உடலை வருத்தி உடற்பயிற்சி செய்து ஜீவா இப்போது வேறொரு தோற்றத்தில் இருக்கிறார். கும்பகோணத்தில் நிஜ ரௌடிகள் சேஸிங் ‘திருநாள்’ படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து கும்பகோணத்தில் நடைபெற்று வருகிறது. சந்து-பொந்து வழியாக ஜீவா ரௌடிகளை துரத்தும் சண்டைக் காட்சி […]
ரஜினி – ஷங்கர் – ஷாருக் இது உலகளாவிய பிசினஸாக இருக்கே…
பிரம்மாண்டம் என்றால் அது தமிழ் சினிமாவில் இயக்குநர் ஷங்கர் மட்டுமே, இவரின் படங்களில் வரும் காட்சிகளுக்காக இவர் அதிகம் மெனக்கெட்டு அதனை பிரம்மாண்டமாக காண்பித்து நம்மை வியப்பில் ஆழ்த்துவார். சியான் விக்ரம் நடிப்பில் வெளிவந்த ஐ திரைப்படம் உலகம் முழுவதும் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தை இயக்கியிருந்த ஷங்கர் தற்போது அவரின் அடுத்த பட வேலைகளில் பிசியாக இறங்கிவிட்டார். அடுத்த வருடம் தொடங்கவிருக்கும் பெயரிடப்படாத புதிய படத்தில் ஹிரோவாக ரஜினியும் நடிக்கப்போகிறார் என்பது அனைவரும் அறிந்த விஷயம்தான். […]