நடிகர் சங்கத்துக்கு அடுத்த மாதம் (மே) இறுதியில் அல்லது ஜூன் முதல் வாரத்தில் தேர்தல் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலில் போட்டியிட விருப்பம் இல்லை என்றும் பொறுப்பு கொடுத்தால் ஏற்றுக் கொள்வேன் என்றும் அறிவித்திருந்தார். நடிகர் சங்கத்துக்கும் நடிகர் விஷாலுக்கு எப்போதுமே பஞ்சாயத்து தான் இந்த இரண்டு பேரில் யாராவது நேரில் சந்தித்துக் கொண்டால் அந்த இடம் தீபாவளி பட்டாசுக்கு பஞ்சமே இருக்காது. அந்த வகையில் தற்போது நடிகர் விஷால் சென்னையில் குறிப்பிட்ட சில நடிகர்களை வரவழைத்து […]
‘10 எண்றதுக்குள்ள’ பட குழுவினர் விக்ரமின் ரசிகர்களுக்கு அளிக்கும் பரிசு
SD விஜய் மில்டன் இயக்கத்தில் விக்ரம் – சமந்தா நடித்துள்ள ‘10 எண்றதுக்குள்ள’ படத்தின் First Look ஐ ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் மற்றும் ஏஆர் முருகதாஸ் புரொடக்ஷன்ஸ் குழுவினர் இன்று இரவு வெளியிட உள்ளனர். நாளை நடிகர் விக்ரமின் பிறந்தநாளையொட்டி அவரது ரசிகர்களுக்கு பரிசளிக்கும் வகையில் First Look இன்று நள்ளிரவு 12 மணிக்கு வெளியிட படவுள்ளது. படத்தில் இழையோடியிருக்கும் பரபரப்பையும், ஆரவாரத்தையும் இந்த First Look தரும்.
அஷ்வின் – ஸ்வாதி நடிக்கும் “திரி”
தன் பொறுமையைக் காப்பவன் தான் சிறந்த வீரன். தேவைப்படும் இடத்தில் நேரம் பார்த்து அந்த பொறுமையை துறப்பதும் அத்தியாவசியம் என்பதை கூற வருகிறது ‘திரி’. சீஷோர் கோல்ட் புரொடக்ஷன்ஸ் சார்பில் ஏ.கே. பாலமுருகன் மற்றும் ஆர். பாலகோபி தயாரிக்கும் இப்படத்தை புதுமுக இயக்குனர் அசோக் அமிர்தராஜ். “ ‘திரி’ யதார்த்தம் நிறைந்த கமர்சியல் பொழுதுபோக்கு திரைப்படமாக தயாராகி வருகிறது. அஷ்வின் கக்கமனு, ஸ்வாதி ரெட்டி, ஜெயபிரகாஷ், கருணாகரன் மற்றும் AL அழகப்பன் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்கள். ‘திரி’ […]
சமுத்திரகனியுடன் இணையும் நடிகை சங்கவி
நடிகை சங்கவி ‘கொலஞ்சி’ என்ற படத்தில் சமுத்திரகனிக்கு ஜோடி சேருகிறார். மூடர் கூடம் படத்தை தயாரித்த நவீன் தான் இந்த படத்தை தயாரிக்கிறார். அமராவதி படம் மூலம் அறிமுகமான சங்கவி தமிழ் சினிமாவில் மிக சிறந்த கிளாமர் கதாநாயகியாக வலம் வந்தார். விஜய்யின் அறிமுக படத்திலும் சரி அதன் பிறகு விஜய்யுடன் பல வெற்றி படங்களில் ஜோடி சேர்ந்தவர் தான் சங்கவி விஜய் மட்டும் இல்லை அன்று பல முன்னணி நாயகன்களுடன் ஜோடி சேர்ந்தவர் சரத்குமார், ராம்கி […]
‘காக்க முட்டை’ கதை என் வாழ்க்கை – நடிகர் தனுஷ்
நடிகர் தனுஷ், இயக்குனர் வெற்றிமாறன் தயாரிப்பில் மணிகண்டன் இயக்கத்தில்’காக்க முட்டை’ குழந்தை நட்சத்திரமாக இரண்டு சிறுவர்களை அறிமுகபடுத்தி இருக்கிறார் மணிகண்டன் அவர்கள் தேசிய விருதும் வாங்கிவிட்டார்கள் என்பது மிக பெரிய சந்தோசம். இந்த சிறுவர்களுக்கு தாயாக ரம்மி பட ஐஸ்வர்யா நடித்து உள்ளார் இசை G.V. பிரகாஷ் . விரைவில் வெளியாக இருக்கும் படம் காக்க முட்டை படம் வெளிவருவதுக்கு முன்னாடியே இரண்டு தேசிய வாங்கியது எல்லோருக்கும் தெரியும். ஆனால் இப் படத்தின் முன்னோட்டம் கூட மக்களுக்கு […]
சுதாஸ் புரொடக்ஷன் ‘திறந்திடு சீசே’
ஒவ்வொரு மனிதனும் ஒரு அலாவுதீன் விளக்கு போல அவர்களுக்குள் இருக்கும் பூதம் அவ்வபோதுதான் வெளி வரும். அந்த தருணம் அவர்களை சுற்றி இருப்பவர்களுக்கு என்ன நன்மை தீமைகள் நடக்கிறது என்பதை சுவாரசியம் நிறைந்த திருப்பங்களுடன் காட்சி படுத்துகிறது ‘ திறந்திடு சீசே ‘ திரைப்படம். சுதாஸ் புரொடக்ஷன் சுதா வீரவன் ஸ்டாலின் தயாரிப்பில் ‘திறந்திடு சீசே’ திரைப்படத்தை இயக்கியுள்ளார் அறிமுக இயக்குனர் நிமேஷ்வர்ஷன். இவர் இயக்குனர் ஷங்கரின் இணை இயக்குனர் ஆவார். ‘வீரவன் ஸ்டாலின் இப்படத்தை தயாரிப்பதோடு […]
சீ.வீ.குமாரின் “புரெடேக்க்ஷன் எண் 14”
மக்கள் எதிர்ப்பார்க்கும் வகையில் ஜனரஞ்சகமான படங்களையும், பெரும் வெற்றி பெற்றபடங்களையும் உருவாக்குவதில் கைதேர்ந்த தயாரிப்பு நிறுவனங்கள் சீ.வீ.குமார் அவர்களின்“திருக்குமரன் எண்டர்டெய்ன்மெண்ட்” மற்றும் கே ஈ ஞானவேல் ராஜாவின் “ஸ்டுடியோ க்ரீன்”. தற்போது திருக்குமரன் எண்டர்டெய்ன்மெண்ட் தனது 14வது படத்தின் தயாரிப்பை தொடங்கியுள்ளது. சூதுகவ்வும் வெற்றி படத்தை இயக்கிய நலன் குமாரசாமி இப்படத்தை இயக்குகிறார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை ஸ்டுடியோ கீரின் நிறுவனம் வழங்குகிறது. விஜய் சேதுபதி கதாநாயகனாகவும் மடோனா கதாநாயகியாகவும் நடிக்கின்றனர். மற்றும் பலர் நடிக்கும் இப்படத்தில் […]
ஜனாதிபதி விருது பெற்றவர் நடிக்கும் “ விருத்தாசலம் “
லட்சுமி அம்மாள் பிலிம்ஸ் என்ற பட நிறுவனம் சார்பாக பி.செந்தில்முருகன் தயாரிக்கும் படத்திற்கு “ விருத்தாசலம் “ என்று பெயரிட்டுள்ளனர். இந்த படத்தில் விருதகிரி என்ற புதுமுகம் கதாநாயகனாக நடிக்கிறார். இவர் கடலூர் மாவட்டம் விருத்தாசலம் வட்டத்தில் கச்சிராயநத்தம் என்ற கிராமத்தின் தலைவராக இருந்த போது அவரது சிறந்த நிர்வாகத்திற்காக ஜனாதிபதி பிரதீபா பாட்டிலிடம் விருது பெற்றவர். கதாநாயகிகளாக ஸ்வேதா, சமீரா, ஷெரீன் தாஹா ஆகியோர் நடிக்கிறார்கள். மற்றும் சம்பத்ராம், பாவாலட்சுமணன், காதல்சரவணன், வெண்ணிலா கபடிக்குழு ஜானகி, […]
சந்தானத்தின் ‘இனிமே இப்படித்தான்’
” போஸ்டர் கலாச்சாரம் இன்னும் சினிமாவில் மங்கி வருகிறது. எதிலும் ஒரு துள்ளலை எதிர்பார்க்கிறார்கள் ரசிகர்கள். தனது ஒற்றை வரி வசனங்களின் மூலம் வலைதளத்தில் உலா வரும் ரசிகர்களின் ‘நண்பேண்டா’ ஆக திகழ்ந்து வரும் சந்தானத்தை ‘இனிமே இப்படித்தான்’ போஸ்டர் மூலம் அதே ஆரவாரத்துடன் , அதே உற்சாகத்துடன் அறிமுகம் செய்ய வேண்டும் என்று எண்ணினோம். ‘இனிமே இப்படித்தான்’ First look மோஷன் போஸ்டராய் வெளியட முடிவு செய்துள்ளோம்.” என உறுதியுடன் கூறுகிறார்கள் ஹேன்ட் மேட் ஃபிலிம்ஸ் தயாரிப்பாளர்கள். ‘இனிமே இப்படித்தான்’ கோடைகால கொண்டாட்டமாக […]
த்ரிஷா இல்லனா நயன்தாரா
”த்ரிஷா இல்லனா நயன்தாரா” தங்கள் படத்தின் தலைப்பு முதலே தலைப்பு செய்தியை ஆட்கொண்ட படம். பின் ஆச்சர்யத்திற்கும் குறைவில்லாமல் படபிடிப்பு நடந்து வருகின்றது. ரசிகர்கள் மத்தியில் மிகுந்த ஆவலை ஏற்படுத்தியுள்ள படத்தின் டீசர் 16/04/15 வியாழக்கிழமை அன்று வெளியாகிறது. ‘உற்சாகமும் புதுமையும்’ பொங்கும் இளைஞர்களைப் பற்றிய படம் இது. பூஜை முதல் இன்றுவரை இந்த இளமைக் கூட்டணியின் உற்சாகமும், உழைப்பும் எங்களை வழிநடத்தி வருகிறது. சோனி மியுசிக் நிறுவனம் எங்கள் படத்தின் ஆடியோவை வாங்கியுள்ளது பெருமகிழ்ச்சியை தருகிறது. இந்த டீசர் அனைத்து இளைஞர்களும் பிடிக்கும், […]