Flash Story
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.
மீண்டும் திரைக்கு வருகிறது ! அருண் விஜய்யின் ப்ளாக்பஸ்டர் திரைப்படம் “தடையறத் தாக்க”

இன்றைய ராசி பலன்கள் – 2.9.2017

சனிக்கிழமை
1193ம் ஆண்டு ஹேவிளம்பி வருஷம் ஆவணி மாதம் 17ம் தேதி.
சுக்லபட்சத்து (வளர்பிறை) ஏகாதசி திதி காலை 9.56 மணி வரைப் பின் துவாதசி திதி.
பூராடம் நட்சத்திரம் காவை 8.32 மணி வரைப் பின் உத்திராடம் நட்சத்திரம்.
இன்று முழுவதும் சித்த யோகம்.
ராகுகாலம் – காலை 9 முதல் 10.30 வரை.
எமகண்டம் – மதியம் 1.30 முதல் 3 மணி வரை
நல்ல நேரம் – காலை 10.30 முதல் 12 மணி வரை.
மாலை- 5 முதல் 6 மணி வரை.

2.9.2017 ராசி பலன்கள்

மேஷம் : திருமணம் பேச்சுவார்த்தை மூலம் பூர்வீக சொந்தங்கள் பழைய பகையை மறந்து ஒன்றினைவார்கள். கடவுளிடம் வேண்டிய காரியம் நடக்கும். மதியம் புதிய தொழிலில் வாய்ப்பு அமையும்.

ரிஷபம் : இன்று மதியம் 3.03 மணி வரை சந்திராஷ்டம். மதியத்துக்கு மேல் பணிகளில் உள்ள தடை விலகும். பிரயாணம் மூலம் நன்மை. வாடகை வீடு அமையும்.

மிதுனம் : எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். மன தைரியம் கூடும். பல மாற்றங்களை உருவாக்கி வெற்றி அடைவீர்கள். இன்று மதியம் 3.03 மணிக்கு மேல் சந்திராஷ்டம் அதனால் காரியத்தில் கவனம் தேவை.

கடகம் : காதல் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் கைக்கூடும். கணவருக்கு நல்ல வேலைக் கிடைக்கும். வெளிநாட்டில் வேலை பார்பவர்கள் குடும்பத்தை பாரத்து மகிழ இந்தியா வரலாம்.

சிம்மம் : வங்கி கடன் முயற்சி செய்யுங்கள். பகைவரை கண்டு ஒதுக்கிடுங்கள். தந்தையின் உடல்நலம் கவனம். பனம் வரும் செலவும் வரும்.

கன்னி : சுபசெலவுகள். சொந்தபந்தங்கள். நண்பர்கள் வருகை எனக் குடும்ப மகிழ்ச்சியான தருணம். சுற்றுலா வாய்ப்புக்கள் அமையும்.

துலாம்: ரியல் எஸ்டேட் தொழில் நல்ல லாபம் கிடைக்கும். புதிய வீடு வாங்கலாம். பழைய வீட்டை நல்ல விலைக்கு விற்கலாம். சினிமா வாய்ப்பு அமையும்.

விருச்சிகம் : தொழில் முயற்சிக்காக வெளிமாநிலம் வெளிநாடு செல்வீர்கள். ஏற்றுமதி இறக்குமதி தொழில் தொடங்கலாம். அரசியல் வாய்ப்பு அமையும். வங்கி சேமிப்பு உயரும்.

தனுசு : உங்கள் வளர்ச்சிக்கு புதிய பார்முலாவை பயன்படுத்தி திறமையான நிலையை அடைவீர்கள். உங்கள் வளர்ச்சி கண்டு மற்றவர்கள் பிரமிப்பார்கள். குழந்தைகளுக்கு மகிழ்ச்சியான சூழ்நிலை அமையும்.

மகரம்: காலையில் செலவு மாலையில் வருமானம். எதிர்பார்த்த பெரிய தொகை இன்று இரவு வந்து சேரும். தொலைதுர பயணம் உருவாகும்.

கும்பம்: இல்லத்தரசிக்கு நல்ல சம்பளத்துடன் கூடிய வேலைக் கிடைக்கும். வியாபாரம் நல்ல லாபம் தரும். மகிழ்ச்சியான நாள்.

மீனம்: தொழில் சம்பந்தப்பட்ட மாற்றங்களை உருவாக்குவீர்கள். இளைஞர்களுக்கு வேலைக் கிடைக்கும். எதிர்கால நலனில் அக்கறையுடன் செயல்படுவீர்கள்.

மிண்டும் நாளைச் சந்திப்போம்.

– ASTRO THAIVEGAN MARIMUTHU OFFICE CHENNAI TUTICORIN. cel- 9842521669. 9244621669.

Back To Top
CLOSE
CLOSE