Flash Story
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.
மீண்டும் திரைக்கு வருகிறது ! அருண் விஜய்யின் ப்ளாக்பஸ்டர் திரைப்படம் “தடையறத் தாக்க”
‘கொம்புசீவி’ படப்பிடிப்பு நிறைவை முன்னிட்டு படக்குழுவினர் அனைவருக்கும் புதிய உடைகள், பிரியாணி வழங்கி கௌரவிப்பு
‘ஃபர்ஸ்ட் லைன்’ உமாபதி தயாரிப்பில் ஹும் படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா
பிடிஜி யுனிவர்சல் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் தயாரிக்கும் சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ் திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

இன்றைய ராசி பலன்கள் – 29.9.2017

29.9.2017 வெள்ளிக்கிழமை பஞ்சாங்கம்.
1193ம் ஆண்டு ஹேவிளம்பி வருஷம் புரட்டாசி மாதம் 13ம்தேதி .
சுக்லப்பட்சத்து (வளர்பிறை) நவமி திதி இரவு 10.40 மணி வரை பின் தசமி திதி.
பூராடம் நட்சத்திரம் மதியம் 3.39 மணி வரை பின் உத்திராடம் நட்சத்திரம்.
இன்று முழுவதும் சித்த யோகம்.
ராகுகாலம்- காலை 10.30 முதல் 12 மணி வரை.
எமகண்டம்- மாலை 3 முதல் 4.30 மணி வரை.
நல்லநேரம்: காலையில் இல்லை. மாலை 5 முதல் 6 மணி வரை. இரவு 7 முதல் 9 மணி வரை.
சூலம்- மேற்கு.
ஜீவன்- 1/2; நேத்திரம்- 1;
ஸ்ரீ சரஸ்வதி பூஜை.
மஹா நவமி.

29.9.2017 வெள்ளிக்கிழமை ராசிபலன்.
மேஷம்: நிறைந்த மேன்மை சிறப்பான தொழில் நல்ல லாபம் அன்பான குடும்பம் நல்ல நட்பு இன்று எல்லாம் சிறப்பு.
ரிஷபம்: இன்று இரவு 10.11 மணி வரை சந்திராஷ்டமம் சிறுசிறு குழப்பம் இருந்தாலும் இரவில் நன்மை. ஸ்ரீ மகிஷாசூரவர்த்தினியை வணங்குவோம்.
மிதுனம்: களங்கமற்ற அன்பை எல்லோரிடமும் செலுத்துவீர்கள். இன்று இரவு 10.11 மணி முதல் சந்திராஷ்டமம். இரவு படுக்கும்முன் ஸ்ரீ விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்யுங்கள்.
கடகம்: பெண்கள் விருந்து விழாவில் கலந்துகொண்டு மகிழ்வார்கள். மனதில் இருந்த தயக்கம் விலகும். தொழில் லாபம் அதிகரிக்கும்.
சிம்மம்: கடந்து வந்த பாதையை திரும்பிப் பார்ப்போம். காலத்தின் அருமையை உணர்வீர்கள். சில புதிய அனுபவம் கிட்டும்.
கன்னி: விடாமுயற்சி வெற்றி. குழந்தைகள் நலனில் அக்கரைத் தேவை. மனசாட்சிக்கு முக்கியம் கொடுப்பார்கள். சலுகைகள் கிட்டும்.
துலாம்: துரத்திய பிரச்சனை தீரும். குடும்ப சிரமத்தை பிறரிடம் பகிர வேண்டாம். சகோதரி வழியில் உதவி செய்வார்கள்.
விருச்சிகம்: குடும்பத்தினர் திருமணம் பேச்சுவார்த்தை நடக்கும். பெண்கள் குடும்ப நலனுக்காகப் பாடுபடுவார்கள். பலரின் உதவி கிடைக்கும்.
தனுசு: தகுதிக்கு மீறி வாக்குறுதி கொடுக்காதீர்கள். உடல்நலத்தில் அக்கரைத் தேவை. வாகன வாங்குபவிர். பணம் வரும்.
மகரம்: முக்கிய குடும்ப தேவைகள் நிறைவேறும். பணியாளர்களுக்குச் சம்பளம் உயரும் சலுகைகள் கிட்டும். பயணம் மாற்றத்தை கொடுக்கும்.
கும்பம்: எதார்த்த பேச்சால் முக்கிய பிரச்சனை தீரும். அரசியலில் உயர் பதவி கிட்டும். இஷ்ட தெய்வ வழிபாடு பலனளிக்கும்.
மீனம்: திட்டமிட்டபடி செயல்படுவீர். தொழில் போட்டிகளை எளிதாக வென்று லாபம் சம்பாதிப்பார்கள். பெண்களால் மகிழ்ச்சி.
நாளை சந்திப்போம்.

– ASTRO தெய்வீகம் மாரிமுத்து அலுவலகம் சென்னை தூத்துக்குடி. Call- 9842521669. 9244621669.

Back To Top
CLOSE
CLOSE