Flash Story
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.
மீண்டும் திரைக்கு வருகிறது ! அருண் விஜய்யின் ப்ளாக்பஸ்டர் திரைப்படம் “தடையறத் தாக்க”

ஜாம்பவான்களோடு சேர்ந்து நடிக்கும் நடிகர் சந்தோஷ்

‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’ படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகி, ‘தயம்’, ‘பயமா இருக்கு’ போன்ற படங்களில் நடித்துள்ள நடிகர் சந்தோஷ் தற்பொழுது நடிகர் கார்த்திக், கௌதம் கார்த்திக்கின் நடிப்பில் உருவாகவுள்ள ”மிஸ்டர் சந்திரமௌலி’ படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.

இது குறித்து இப்படத்தின் தயாரிப்பாளர் திரு. தனஞ்செயன் பேசுகையில் , “கார்த்திக் சார், கவுதம் கார்த்திக், மகேந்திரன் சார், அகத்தியன் சார், சதிஷ், ரெஜினா கசன்றா மற்றும் வரலக்ஷ்மி ஆகியோர் இப்படத்தில் நடிக்கவுள்ளதில் எங்களுக்கு பெருமை. இந்த பட்டியலில் நடிகர் சந்தோஷ் சேர்ந்துள்ளார். பல ஜாம்பவான்களோடு சேர்ந்து நடிக்கவுள்ளதில் அவர் பெரும் மகிழ்ச்சியில் உள்ளார். படம் முழுக்க வரும் ஒரு முக்கிய கதாபாத்திரம் அவருடையது”.

சந்தோஷ் கதாநாயகனாக அறிமுகமான ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’ படத்தில் சந்தோஷ் இயக்குனராக வாய்ப்பு கேட்டு தயாரிப்பாளர் தனஞ்செயனை சந்திக்கும் காட்சியில் பின்புறத்தில் இயக்குனர் திருவின் ‘நான் சிகப்பு மனிதன்’ படத்தின் போஸ்டர் ஒட்டப்பட்டிருக்கும். தற்பொழுது தனஞ்செயன் அவர்களின் தயாரிப்பில், திருவின் இயக்கத்தில் ‘மிஸ்டர் சந்திரமௌலி’ படத்தில் சந்தோஷ் நடிக்கவுள்ளார் என்பது ஒரு சுவாரஸ்யமான தகவல்.

Back To Top
CLOSE
CLOSE