Flash Story
ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் – அஸ்வத் மாரிமுத்து – பிரதீப் ரங்கநாதன் கூட்டணி வழங்கிய ‘டிராகன்’ திரைப்படத்தின் நூறாவது நாள் வெற்றி விழா
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.

இன்றைய ராசி பலன்கள் – 17.10.2017

17.10.2017 செவ்வாய்க்கிழமை பஞ்சாங்கம்.
1193ம் ஆண்டு ஹேவிளம்பி வருஷம் புரட்டாசி மாதம் 31ம்தேதி.
கிருஷ்ணப்பட்சத்து (தேய்பிறை) திரயோதசி திதி இரவு 12.40 சதுர்த்தசி திதி.
பூரம் நட்சத்திரம் காலை 7.40 மணி வரை பின் உத்திரம் நட்சத்திரம்.
சித்த யோகம் காலை 7.40 மணி வரை பின் அமிர்த யோகம்.
ராகுகாலம்- மதியம் 3 முதல் 4.30 மணி வரை.
எமகண்டம்- காலை 9 முதல் 10.30 மணி வரை.
நல்லநேரம்- காலை 8 முதல் 9 மணி வரை. இரவு 6 முதல் 8 மணி வரை.
சூலம்- வடக்கு.
ஜீவன்- 1/2; நேத்திரம்- 0;
சிவபிரதோஷம்.
இன்று இரவு தீபாவளி பண்டிகை.
Daily Cinemas வாசகர்கள் அனைவருக்கும் தீபாவளி பண்டிகை நல்வாழ்த்துக்கள்.
நாளை ஐப்பசி மாதம் பிறப்பு

17.10.2017 செவ்வாய்க்கிழமை ராசிபலன்.

மேஷம்: தெய்வீக பலத்துடன் தீபாவளி பண்டிகை வந்து விட்டது. பெரியோர்கள் மகான் ஆசி கிடைக்கும். கவனமாக வெடி போடுங்கள்.

ரிஷபம்: ஆனந்த தீபாவளி. தாய் தந்தைக்கு கிப்ட் வாங்கிக் கொடுத்து மகிழ்வீர்கள். சொந்த ஊரில் தீபாவளி கொண்டாட்டம்.

மிதுனம்: தீபாவளி புதிய வரவாக ஆடம்பர கார் வாங்கலாம். தைரியமாக வெடி வெடிப்பீர்கள். உறவுகள் வந்து ஆனந்தத்தைச் சிறப்பாக்கும்.

கடகம்: தீபாவளி பர்சேஸ் தூள்பறக்கும். குடும்பத்தினர் அனைவருக்கும் பிடித்த ஆடை ஆபரணங்கள் வாங்கிக் கொடுப்பீர்கள். செலவு தாராளம்.

சிம்மம்: மகிழ்ச்சியான தீபாவளி. சுயநலமாக மகிழ்ச்சியாக இருப்பதற்கு ரகசியத் திட்டம் தீட்டுவீர்கள். புதிய அன்பு கிடைக்கும்.

கன்னி: சந்தோஷம் மகிழ்ச்சி ஆனந்தம் சேரும் தீபாவளி. நிறையப் பரிசு பொருட்கள் வரும். நீங்களும் அன்பானவர்கள் பரிசு வாங்கிக் கொடுப்பீர்கள்.

துலாம்: இனிய வாய்ப்புகள் தேடி வரும் தீபாவளி. குழந்தைகளுடன் குதூகலம் நிறைந்த தீபாவளி. போனஸ் கிடைக்கும்.

விருச்சிகம்: விருவிருப்பான தீபாவளி பண்டிகை வந்து விட்டது. புதிய உறவுகளைச் சந்திப்போம். பலருக்கும் விருந்து வைத்து மகிழ்வோம்.

தனுசு: தொழிலாளர்களுக்குச் சம்பளம் போனஸ் கிப்ட் வழங்கி முதலாளி அந்தஸ்தைக் காட்டும் தீபாவளி. பயன்பெற்றவர்கள் அனைவரும் வாழ்த்துவார்கள்.

மகரம்: வெடி வெடிக்கும் போது கவனம். இன்று மதியம் 3.45 வரை சந்திராஷ்டமம். மதியம் 3.46க்கு பிறகு ஆனந்தம் சேரும் தீபாவளி.

கும்பம்: மனைவி அன்பு பாசம் கிட்டும் தீபாவளி. மதியம் 3.46 முதல் சந்திராஷ்டமம். ஓம் கிருஷ்ணாய நமஹ. 108 முறை பாராயணம் செய்யுங்கள். தீபாவளியை மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும்.

மீனம்: உறவுகள் வீட்டுக்குச் சென்று கிப்ட் கொடுத்து பலரையும் மகிழ்விக்கும் தீபாவளி. அப்படியே சம்பந்தமும் பேசி முடிப்பார்கள்.

நாளைச் சந்திப்போம்.

– ASTRO தெய்வீகம் மாரிமுத்து அலுவலகம் சென்னை தூத்துக்குடி. Call – 9842521669. 9244621669

Back To Top
CLOSE
CLOSE