Flash Story
சூப்பர் நேச்சுரல் திரில்லரில் மிரட்ட வரும் தி பிளாக் பைபிள் – டீசர் வெளியீடு..!!
ஷிவதா, ரம்யா பாண்டியன் நடிக்கும் ‘கயிலன்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு
ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் – அஸ்வத் மாரிமுத்து – பிரதீப் ரங்கநாதன் கூட்டணி வழங்கிய ‘டிராகன்’ திரைப்படத்தின் நூறாவது நாள் வெற்றி விழா
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு

இன்றைய ராசி பலன்கள் – 21.10.2017

21.10.2017 சனிக்கிழமை பஞ்சாங்கம்.

1193ம் ஆண்டு ஹேவிளம்பி வருஷம் ஐப்பசி மாதம் 4ம்தேதி.
சுக்லப்பட்சத்து (வளர்பிறை) துதியைத் திதி பின்னிரவு 2.44 மணி வரைப் பின் திருதியைத் திதி.
ஸ்வாதி நட்சத்திரம் காலை10.54 மணி வரைப் பின் விசாகம் நட்சத்திரம்.
அமிர்த யோகம் காலை 10.54 மணி வரைப் பின் சித்த யோகம்.
ராகுகாலம்- காலை 9 முதல் 10.30 மணி வரை.
எமகண்டம்- மதியம் 1.30 முதல் 3 மணி வரை.
நல்லநேரம்- காலை 10.30 முதல் 12 மணி வரை. மாலை 5 முதல் 7 மணி வரை.
சூலம்- கிழக்கு.
ஜீவன்-0; நேத்திரம்- 0;

21.10.2017 சனிக்கிழமை ராசிபலன்.

மேஷம்: வெளிநாட்டில் வசிக்கும் நண்பர் குடும்பத்தினருடன் உங்கள் இல்லம் வந்து கௌரவிப்பர். அவர்கள் வருகையால் உங்கள் குடும்ப கஷ்டங்கள் விலகும்.

ரிஷபம்: எதிர்பாராமல் அதிர்ச்சி உருவாகும். பகையை வெல்வோம். திருச்செந்தூர் திருமுருகனை தரிசனம் செய்யுங்கள்.

மிதுனம்: அரசியலில் ஒப்பற்ற பொருப்புக்கள் கிடைக்கும். மக்கள் ஆதரவுடன் தேர்தலில் போட்டியிட முயற்சிகள் செய்யுங்கள். பணம் வரும்.

கடகம்: உற்சாகமாகச் செயல்படுவீர்கள். கடமையில் கண்ணாக இருப்பீர்கள். பல நல்ல தகவல்கள் வந்து சேரும்.

சிம்மம்: இளைஞர்கள் ஆசைகள் நிறைவேறும். லேட்டஸ்ட் டிசைன் ஆடைகள் வாங்கலாம். நல்ல வேலைக் கிடைக்கும்.

கன்னி: சிந்தனை தெளிவு பெரும். தனக்காக வாழ்க்கை நிலையை மாற்றிக்கொள்வீர்கள். சந்தோஷம் சூழ்நிலை உருவாக்கிக்கொள்வீர்.

துலாம்: மாணவர்கள் படிப்பில் உயர் மதிப்பெண் பெருவார்கள். பெற்றோர் ஆசிரியர்கள் அன்பு கிடைக்கும். எதிர்காலம் சிறப்பாக அமையும்.

விருச்சிகம்: வெளிநாட்டில் வேலைக் கிடைக்கும். தொழில் விசா வாங்கலாம். சிலருக்கு வெளிநாட்டில் குடியுரிமை அமையும். பகை விலகும்.

தனுசு: உறவுகள் சுபநிகழ்ச்சியில் கலந்து மரியாதை பெருவீர்கள். திறமைக்கேற்ற வேலைக் கிடைக்கும். எல்இடி பெரிய டிவி வாங்கலாம்.

மகரம்: உறவுகளிடம் நெடுங்காலமாக இருந்த பகை ஒரே இரவில் தீர்ந்து நட்பாகி சம்பந்தம் பேசுவீர்கள். ஊர்க்காரர்கள் மூக்கில் விரல் வைத்து அதிர்ச்சியடைவார்கள்.

கும்பம்: பழனி ஸ்ரீ சுப்பிரமணியரைத் தரிசனம் செய்யுங்கள். இன்று முழுவதும் சந்திராஷ்டமம் கஷ்டங்கள் கண்டு கலங்காதீர்கள்.

மீனம்: பக்கத்து வீட்டினர் அன்பு பாசம் கிட்டும். பெண்கள் இனைந்து கூட்டுத்தொழில் ஆரம்பிப்பார்கள். நல்ல லாபம் வரும்.

நாளைச் சந்திப்போம்.

– ASTRO தெய்வீகம் மாரிமுத்து அலுவலகம் சென்னை தூத்துக்குடி. Call – 9842521669. 9244621669.

Back To Top
CLOSE
CLOSE